Home » , , , » தினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்

தினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்நாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற டிரிக்ஸ் நேர்மையான வழியில் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் தினம் 500MBக்கும் அதிகமான 3G டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். இதற்கு மொபைல் ரூட்டிங்க் போன்று எதுவும் தேவை இல்லை. எந்த  ஒரு நெட்வொர்க்லயும் பயன்படுத்திக்கொள்ள முடியும்? எப்படி என்று பதிவில் பார்ப்போம்.

மேலே உள்ள படத்தில் SPEEDTESTல 3G ஸ்பீட் பாருங்கள். இதனை பெற புதிய போர்ட் நம்பர்களும் கொடுத்து இருக்கிறேன். இதற்கான அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரிலயே உள்ளது. இங்கே கிளிக் செய்து Hammer VPN AntiDPI VPN அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.


அப்ளிகேசனை திறந்தால் மேலே உள்ளது போல வரும். இதில் நாம் முதல் இரண்டு இடத்தில் யூசர் மற்றும் பாஸ்வோர்ட் தொடவேண்டாம். மூன்றாவது இடத்தில் பல விதமான சர்வர்கள் இருக்கிறது. அனைத்தும் வெளிநாட்டு சர்வார்கள். மதிய நேரத்தில் நான் டெஸ்ட் செய்த போது 5mbps வரை ஸ்பீட் வந்தது. இரவு நேரங்களில் மேலும் அதிகரிக்கலாம்.

சரி நான்காவதாக இரண்டு டெக்ஸ்ட் பாக்ஸ் இருக்கு. அவை LPORT மற்றும் RPORT. படத்தில் உள்ளது போல LPORT 9201 அல்லது  4078 என்று கொடுங்கள். அடுத்து RPORTல 3039 அல்லது 2401 அல்லது 0 கூட கொடுக்கலாம். மேலே நான் கொடுத்த போர்ட் செட்டிங்ஸ்ல அதிவேகமாக வேலை செய்கிறது.

கடைசியாக உள்ள பாக்ஸ்ல UDP (User Datagram Protocol) என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

இப்ப Connect பட்டனை அழுத்தினால் மேலே படத்தில் வருவது போல Authenticate check செய்து கனெக்ட் ஆகும். கடைசியாக மேலே மூன்றாவது  படத்தில் உள்ளது போல Setup Successful ஆகும்.

ஒவ்வொரு சர்வருக்கும் 100MB 3G பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு சர்வர் ஸ்டாப் ஆனது அடுத்த சர்வர்க்கு மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 500MB அதிக பட்சமாக 1GB மேலே 3G ஸ்பீட்ல பயன்படுத்த முடியும்.

முக்கிய குறிப்பு:

1. உங்கள் மொபைலில் ஏற்கனவே டேட்டா கார்ட் ரீசார்ஜ் போட்டு இருந்தால் அது தீரும் வரை இதை முயற்சி செய்ய வேண்டாம். இதற்கு ஜீரோ டேட்டா பேலன்ஸ் இருந்தால் போதும், இல்லையேல் உங்கள் டேட்டா காலி ஆகிடும்.

2. Settings >> More Settings >> Mobile Networks சென்று Preferred Network Type என்பதின் எதிரே 3G செலக்ட் ஆகி இருக்க வேண்டும்.


லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட