Home » , , , » Vivo Y31L மொபைல் வெளியீடு 4G LTE, 16GB Internal, OTG சப்போர்டுடன் விலை 9450 மட்டும்.

Vivo Y31L மொபைல் வெளியீடு 4G LTE, 16GB Internal, OTG சப்போர்டுடன் விலை 9450 மட்டும்.

Vivo நிறுவனத்திற்கு இப்ப அறிமுகம் தேவை இல்லை. 20க்கும் மேற்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களை தயாரித்து விட்டது. பட்ஜெட் மொபைல்களை தயாரித்து வெளியீட்டால் இந்தியா மொபைல் சந்தையில் ஸ்திரமான இடத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தற்போது பல பட்ஜெட் மொபைல்கலையும் தயாரிக்கிறார்கள். இந்த மாத ஆரம்பத்தில் 4GB RAM, 128GB இன்டெர்னல் மெமரி, 16-megapixel, கேமரா, Quad HD டிஸ்ப்ளே போன்ற உயர் திறன் உடைய  Vivo Xplay5 மொபைலை ரிலீஸ் செய்து சாம்சங், எல்‌ஜி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு சவால் விட்டது யாரும் மறக்கமாட்டார்கள். இன்றைய பதிவில் Vivo Y31L  பற்றி சற்று விரிவாக பார்ப்போம். 

இந்த மொபைலில் 4.7" அங்குலம் (960 x 540 pixels) டச் டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.2 GHz Quad-Core Snapdragon 410 பிராசசருடன் Adreno 306 GPU இருக்கிறது, 1GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. பின் பக்கம் 8 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் இருக்கிறது மற்றும் முன் பக்கம் 5 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கு. முக்கியமா 4G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG, 3.5mm audio jack, FM Radio என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2200 mAh இருக்கிறது. இந்த பிரசசருக்கு இந்த பேட்டரி சேமிப்பு போதுமானதே.

Vivo Y31L Specifications

4.7-inch (960 x 540 pixels) qHD IPS display
1.2 GHz Quad-Core Snapdragon 410 processor with Adreno 306 GPU
1GB RAM, 
16GB Internal Memory, 
Expandable Memory up to 128GB with microSD
Dual SIM
Funtouch OS 2.1 based on Android 5.1 (Lollipop)
8MP rear camera with LED Flash
5MP front-facing camera
Dimensions: 137.24×68.76×8.39mm; Weight: 133g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
3.5mm audio jack, FM Radio

2200mAh battery

இதன் விலை Rs. 9450 மட்டுமே. 

இந்த வெள்ளை மற்றும் கறுப்பு என இரண்டு நிறங்களில் விரைவில் ஆன்லைனில் மற்றும் சில ஸ்டோர்களில் கூட கிடைக்க இருக்கிறது.

பலம்:  OTG Support, 4G, 128GB மெமரி கார்ட் வசதி, கேமரா

பலவீனம்:  விலை அதிகம்

தகவல்குரு மதிப்பீடு: ஓரளவுக்கு நல்ல மொபைல்தான் ஆனால்  Xiaomi Redmi Note 3 மற்றும் Coolpad Note 3 மொபைல்தான் சிறந்தது. அவற்றில் இந்த  Vivo Y31L மொபைலை விட பல மடங்கு வசதிகள் அதிகம், விலையோ குறைவு. செலவு செய்து ஒரு மொபைலை வாங்கும் போது தரமான அதிகமான வசதிகள் உடைய பணத்திற்கு ஏற்ற மொபைல் வாங்குவதுதான் புத்திசாலிதனம்.


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட