Home » , , , » QiKU F4 பட்ஜெட் ஸ்மார்ட்போன் 5" HD, 3GB RAM, 4GLTE, Fingerprint, 13MP Camera குறைந்த விலை அதிக வசதிகள்.

QiKU F4 பட்ஜெட் ஸ்மார்ட்போன் 5" HD, 3GB RAM, 4GLTE, Fingerprint, 13MP Camera குறைந்த விலை அதிக வசதிகள்.


QiKU நிறுவனமும் சைனாவை சேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு முன் சைனாவில் இருந்து வந்த Xiaomi நிறுவனம் இன்று இந்தியாவில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்துக்கொண்டது போல இந்த QiKU நிறுவனமும் அப்படி ஒரு இடத்தை பிடிக்கும் என்பது இப்போதே தெரிகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பெஞ்ச்மார்க்ல முன்னணி இடத்தை பிடிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனத்தின் Qiku Terra மற்றும் Qiku Zinc மொபைல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம். சரி இப்போது வெளியாகி உள்ள QiKU F4 ஒரு பட்ஜெட் மொபைல். அதிக வசதி குறைந்த விலையில். இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த மொபைலில் 5" அங்குலம் HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 பிராசசருடன் Mali-T720 MP2 GPU இருக்கிறது, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு வகையாகவும் மற்றும் 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றொரு வகை என இரண்டு வகையில் உள்ளது.   இதில் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. பின் பக்கம் 13 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் மற்றும் PDAF, 1080p video recording இருக்கிறது மற்றும் முன் பக்கம் 5 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  கட்டமைப்பில் 360 OS இருக்கு. முக்கியமா Fingerprint sensor இருக்கு மற்றும் 4G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Hybrid Dual SIM (nano + nano/microSD)) உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (2.4GHz / 5GHz), Bluetooth 4.0, GPS, 3.5mm audio jack, FM Radio என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

QiKU F4 Specifications

5-inch (1280 x 720 pixels) HD IPS display, 178-degree viewing angle
1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
2GB RAM with 16GB internal memory (OR) 3GB RAM with 32GB internal memory, 
Expandable memory up to 128GB with microSD
Hybrid Dual SIM (nano + nano/microSD)
Android 5.1 (Lollipop) with 360 OS
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, PDAF, 1080p video recording
5MP front-facing camera, 1.12μm pixel size, f/2.0 aperture
Fingerprint sensor
Dimensions: 142×77×9.3mm; Weight: 155g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (2.4GHz / 5GHz), Bluetooth 4.0, GPS
2500mAh battery

இந்த மொபைல் விலை பட்டியலை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் விலை இரண்டு வகையாக இருக்கு

2GB RAM with 16GB internal memory Rs. 6499/=
3GB RAM with 32GB internal memory Rs. 8499/=


இந்த மொபைல் White, Black, Pink, Gold மற்றும் Blue  நிறங்களில் வரும். இந்தியாவில் விரைவில் ஆன்லைனில் கிடைக்க இருக்கிறது.

பலம்:  அனைத்து வசதிகளும் இருக்கு,

பலவீனம்:  பேட்டரி கூடுதலாக கொடுத்து இருக்கலாம்.

தகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு தகுந்த மதிப்பு இருக்கு.


Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட