Home » , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் அவ்வப்போது ஹாங் ஆகுதா? அப்ப உங்களுக்குதான் இந்த பதிவு. பொதுவா ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM (Random Access Memory) அதிகம் இருந்தால்தான் மொபைல் வேகமாக இயங்கும். ஒரு மொபைலை CPU-Z ஆப் மூலம் செக் செய்தால் பெரும்பாலும் 1GB RAM (1024 MB) என இருக்காது. 888MB தான் இருக்கும். அப்ப கிட்டதட்ட நான்கில் மூன்று பகுதிதான் இருக்கும். அதிலும் 80% மேல் பாவனை செய்தால் மொபைல் தானாகவே ஹாங் ஆக தொடங்கும். அதிலும் கேம்ஸ் விளையாட யாருக்குதான் ஆசை இருக்காது.?  இந்த பிரச்சனையை சரி செய்ய கூடுதல் RAM தேவைப்படும். ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி?



இதுக்கு இரண்டு வழி இருக்கு. ரூட் செய்தவர்கள் ROEHSOFT RAM Expander என்ற அப்ளிகேஷன் மூலம் இன்று நாம் தர இருக்கிற புதிய அப்ளிகேஷன் மூலம் 4GB மெமரி கார்டை RAM ஆக மாற்ற முடியும்.

உங்கள் மொபைலை ரூட் செய்யவில்லையா? அல்லது பாதுகாப்பு காரணம் கருதி ரூட் செய்ய விருப்பம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை அதற்கும் ஒரு வழி இருக்கு.

ரூட் செய்த மொபைலுக்கு: 

1. முதலில் இங்கே கிளிக் செய்து MemoryInfo & Swapfile Check என்ற ஒரு அப்ளிகேசனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். 

2, பிறகு அந்த அப்ளிகேசனை திறந்து START RAM EXPONDER TEST HERE என்று கீழே உள்ள பட்டனை டச் செய்யுங்கள். சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். முடிவில் உங்களுக்கு ஒரு ரிபோர்ட் கிடைக்கும். (குறிப்பு: ஒரு வேலை உங்கள் மொபைலுக்கு RAM அதிகபடுத்தும் டெஸ்டர் ஆப் பொருந்தவிடில் 10 நிமிடம் ஆகியும் சரியான ஒத்திசைவு ரிபோர்ட் தரவில்லையென்றால் இந்த அப்ளிகேசனை Uninstall செய்து விடுங்கள். ரூட் செய்யாதவர்களுக்கான வழியை மட்டும் பின் பற்றுங்கள்.)

3. அடுத்து இங்கே கிளிக் செய்து  ROEHSOFT RAM Expander அப்ளிகேசனை டவுன்லோட் செய்யுங்கள். இப்போது உங்கள் மொபைலில் 4GB அளவு உள்ள மெமரி கார்டினை போட்டு ROEHSOFT RAM Expander அப்ளிகேசனை இயக்குங்கள். 

4. உங்கள் மொழியை ஆங்கிலம் என தேர்ந்தெடுங்கள், ஒரு பாப்ஆப் தோன்றி ரூட் அக்ஸெஸ் கேட்கும் ஓகே கொடுங்கள். இப்போது உங்கள் மெமரி கார்ட் RAM ஆக வேலை செய்ய தொடங்கி இருக்கும். மொபைல் ஹோம் ஸ்கிரீன் வாங்க. 

5. திரும்ப ROEHSOFT RAM Expander அப்ளிகேசனை ஓபன் செய்து Auto Run என்பதின் எதிரே டிக் செய்யுங்கள். இதனால் மொபைல் ஆப் செய்து ஆன் செய்தால் கூட தானாகவே அதிகரிக்கப்பட்ட RAM மெமரியுடன் இயங்கும். 

5. இப்ப கீழே Optimal Value பட்டன் டச் செய்து RAM அளவை அதிகரித்துக்கொள்ள முடியும். அல்லது Swapfile  ஸ்லைடர் மூலம் நகர்த்தி RAM அளவை தேவையான அளவு அதிகரித்துக்கொள்ள முடியும்.

6. இப்ப Swap Activ டிக் செய்யுங்க. இதனால் நீங்கள் அதிகரித்த RAM அளவை கூட்டிக்கொள்ளும்,  இனி பாருங்கள் மொபைலை துரிதகதியில் ஹாங் ஆகாமல் இயங்க தொடங்கும். அதிகபட்சம் 4GB வரை மெமரியை அதிகரிக்கலாம். 

இனி எந்த ஒரு கேம்ஸ் இயக்கினாலும் ஹாங் ஆகாது. 

*****

ரூட் செய்யாத மொபைலுக்கு: 

ரூட் செய்யாதவர்கள் நல்லதொரு அப்ளிகேஷன் மூலம் RAM அளவை அதிகம் எடுத்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள முடியும். மேலே பார்த்தது போல 1GB RAM மெமரியை இரண்டு ஜிபியாக மாற்ற வாய்ப்பு இதில் இல்லை. 

1. முதலில் இங்கே கிளிக் செய்து Smart Booster Pro டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

2. Smart Booster Pro ஓபன் செய்து கீழே செட்டிங்ஸ் சென்று Boost Level என்பதில் Strong தேர்ந்தெடுங்கள். 

3. அடுத்து Whitelist என்பதில் டச் செய்து நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சில அத்தியாவசிய அப்ளிகேஷன்களை தேர்ந்தெடுங்கள். மற்றவை தானாக மெமரியில் இருந்து அவ்வப்போது நீக்கப்பட்டு அதிக RAM கிடைக்கும். எனவே உங்கள் மொபைல் ஹாங் ஆகாமல் வேகமாக இயங்க தொடங்கும். 

4. நீங்களே அவ்வப்போது ராம் மெமரியை க்ளீன் செய்ய நினைத்தால் மனுவல் பூஸ்ட் வைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் Boost Automatically என்பதின் எதிரே டிக் செய்து தானவே அவ்வப்போது க்ளீன் செய்ய முடியும்.

மேலும் பல விதமான வசதிகள் இந்த அப்ளிகேஷன்ல இருக்கு. பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பா உங்கள் மொபைல் தங்குதடையின்றி வேகமாக இயங்க தொடங்கும்.

மேலும் சந்தேகம் இருந்தால் TG Pageல கேளுங்கள். 


கீழே உள்ள Share பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள் 

Like FB Page :

அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். 

இவ்வார சிறப்பு பதிவுகள். 



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட