முதலில் உங்கள் மொபைல் கேமராவில் 7 செகண்ட் (வினாடிகள்) கொண்ட ஒரு வீடியோவை தயார் செய்யுங்கள். ஆம் அதிகம் சைஸ் உள்ள வீடியோவை லோட் செய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் பேஸ்புக் ஏழே வினாடிகள் மட்டுமே அனுமதி,
அடுத்து இங்கே கிளிக் செய்து Play Storeல உள்ள Facebook v69 டவுன்லோட் செய்யுங்கள் அல்லது இங்கே கிளிக் செய்து புதிய Facebook v71.0.0.0.20 பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
அடுத்து Facebook App திறந்து உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்யுங்கள். வழக்கம் போல ப்ரோஃபைல் படம் மாற்றும்போது இப்போது மேலே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் வரும். ஏற்கனவே வீடியோ எடுத்து வைத்து இருந்தால் இரண்டாவதாக உள்ள Upload video or Photo டச் செய்து தயாரித்து வைத்த வீடியோவை தேர்வு செய்யுங்கள் அல்லது முதலில் உள்ள Take a New Profile Video டச் செய்து உங்களையோ அல்லது உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு வீடியோ எடுங்கள். உங்கள் வீடியோ ஏழே வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். முடிவாக Save செய்து உங்கள் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து பார்த்தால் வீடியோ ஓடுவதை பார்க்கலாம்.
கவனத்தில் கொள்க: உங்கள் மொபைலில் பழைய பதிப்பு இருந்தால் வேலை செய்யாது. மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து அப்டேட் செய்ய மறவாதீர்கள். இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பேஸ்புக் ஆப்ஸ் மட்டுமே இந்த வசதி விரைவில் கணினியில் வீடியோ அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.
நண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்
Like FB Page:
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.