Home » , » Freedom 251 முன் பதிவு செய்து உள்ளீர்களா? உங்களுக்குதான் இந்த பதிவு. (கவர் ஸ்டோரி)

Freedom 251 முன் பதிவு செய்து உள்ளீர்களா? உங்களுக்குதான் இந்த பதிவு. (கவர் ஸ்டோரி)


Ringing Bells நிறுவனம் டிஜிட்டல் இந்தியா சார்பாக வெளியீட உள்ள 251 ரூபாய் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆறு கோடிக்கும் (60 மில்லியன்) மேற்ப்பட்டவர்கள் முன் பதிவு செய்து உள்ளதாக செய்திகள் சொல்கிறது. இவ்வளவு குறைந்த விலையில் எப்படி சாத்தியம்? இந்த மொபைல் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம்தான் இன்று அனைவரின் மனதிலும் இருக்கிறது. இதை பற்றிய ஒரு விரிவான அலசல்தான் இந்த பதிவு.



RINGING BELLS நிறுவனம் ஒரு பார்வை

நொய்டாவில் தொடங்கப்பட்ட Ringing Bells ஆரம்பத்தில் வீட்டு வசதி சாதனங்களையே தயாரித்தார்கள். பிறகு சென்ற 2015 ஆண்டில்தான் சாதாரண QWERTY மொபைலையும் பவர் பேங்க் போன்ற எலெட்ரோனிக் சாதனங்களை தயாரித்தார்கள். அதன் பிறகு தற்போதுதான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் SMART 101 மொபைல் என்ற 4G மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இப்போது Adcom என்ற நிறுவனத்தோடு இணைந்து Adcom Ikon 4 என்ற ஐபோன் டைப் கொண்ட மொபைலை மறுபதிப்பு (Re brand) செய்து Freedom251 மொபைலாக தயாரித்து வெளியிட இருக்கிறார்கள். இந்த Freedom 251 முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்க போகிறோம். எனவே Made in India மொபைல் என்கிறார்கள். இது உண்மையா? அது சரி யார் இந்த Adcom நிறுவனத்தினர்?


ADCOM நிறுவனத்தினர் யார்? 

Adcom என்ற நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் இருக்கு. இது Advantage Group என்ற நிறுவனத்தின் ஒரு பகுதிதான். Advantage Groupக்கு உலகம் முழுவதும் நிறுவனங்கள் உள்ளது. இந்த Adcom இந்தியாவில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற எலெட்ரனிக் பொருள்கள் தயாரித்து வெளியிடுகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு மொபைல் பாகங்கள் அனைத்தும் சீனா மற்றும் தைவானில் இருந்துதான் வருகிறது. இப்ப உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். ஆம் Freedom 251 மொபைலின் பாகங்கள் முழுக்க முழுக்க சீனா தயாரிப்புதான். எனவே Adcom நிறுவனம் இந்தியாவில் இருந்தாலும் மொபைல் பாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்துதான் வரவழைக்கப்படுகிறது.

251 ரூபாய்க்கு சாத்தியமா? 

Adcom Ikon 4 மொபைல் Flipkart தளத்தில் 3699 ரூபாய்க்கு விற்பனையாகிறது. (ஒரு சில வசதிகள் தவிர) இதே மொபைலைதான் இப்போது மறுபதிப்பு (Re brand) செய்து பின்புறம் டிஜிட்டல் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி Freedom251 மொபைலாக வழங்க இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? இது வரை இந்த நிறுவனத்திற்க்கு என்று தனிப்பட்ட பாக்டரி இல்லை. ஆரம்பத்தில் 50 பேர் கொண்ட டீம் இந்த மொபைல் தயாரிப்பதில் ஈடுப்பட்டார்கள். இப்போது இந்தியாவில் 20 இடங்களை தேர்வு செய்து உள்ளார்களாம். நாலரை இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தர இருக்கிறார்கள் என்று இந்தியா டைம்ஸ் சொல்கிறது.


இது புறம் இருக்க ரிங்கிங்க் பெல்ஸ் அலுவலகம் முன்பு மக்கள் குவிய தொடங்கி விட்டார்கள். ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் குறுப்பிட்ட தேதிக்கு முன்பாகவே அனைவருக்கும் அனுப்ப இருப்பதாக இந்த நிறுவனத்தினர் உறுதி அளித்து  அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.

மொபைல் பாகங்கள் மொத்தமாக வாங்கி தயாரிக்க உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களின் சராசரி பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

உதிரி பாகத்தின் பெயர்
விலை
ரூபாய் மதிப்பில்
Protective film
17
Button
14
Charger with cable
21
Earphone
14
GSM antenna
21
WiFi and bluetooth antenna FPC
38
Silicon case of sensor light
3
GPS antenna
21
Housing
254
Assorted stickers, paste, net with poly bag, foam, fibre, sponge
2
Receiver
14
Antenna PCB + antenna
21
Speaker
6
Sub PCB with main FPC and dome
36
Screws and seal
0
Mike
4
PCB
1,513
LCD with touch panel
378
Camera (front)
14
Camera (back) with lens
21
Vibrator
14
Battery
120
மொத்த விலை
2546

மொபைலின் சராசரி விலை 2546 ரூபாய் வருகிறது. மேலும் அதிக ஆர்டரின் பெயரில் விலை குறைத்து வாங்கினால் 1700க்கு குறைந்து வாங்கவே முடியாது. இதைதான் இந்தியா தொலைதொடர்பு துறை கூறி இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு பிறகு இன்று மதியம் (21-02-2016) மறுஆய்வுக்கு(scrutiny) உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது Ringing Bells நிறுவனம் இது சாத்தியமே? என்று சில அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளது.

கேள்வி: ஏன் Adcom பிரண்டை முன் பக்கத்தில் முத்திரை செய்து இருக்கிறது.

பதில்: இது ஒரு மாதிரி மொபைல்தான். Freedom 251 மொபைலின் தோற்றம் எப்படி இருக்கும் என்று பின்னர் அறிவிப்போம். ஆனால் Adcom மூலமே ஃபிரண்ட் மொபைல்களையே பெற்று தர இருக்கிறோம்.

கேள்வி: மீடியாக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள்  Adcom மொபைல்களை தரமற்ற தயாரிப்பு என்று சொல்கிறதே.?

பதில்: நீங்கள் இது பற்றி Mr. Sanjiv Bhatia – The Director of ADCOM அவர்களிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். உண்மையான பதிப்பை அவர்கள் சொல்வார்கள்.

கேள்வி: இந்த மொபைலில் ஐகான்கள் ஆப்பிள் ஐபோனை போலவே இருக்கிறதே.

பதில்: அது UI (யூசர் இண்டெர்ஃபேஸ்) Freedom 251 மொபைலில் இப்படிதான் என சொல்ல முடியாது. புதிய UI கூட பயன்படுத்துவோம். கடைசியாகதான் தெரியும்.

கேள்வி: இந்த மொபைல் BIS certifications பக்கத்தில் இடம் பெறவில்லையே.?

பதில்: தற்போதுதான் Form நிரப்பி கொடுக்க இருக்கிறோம். விரைவில் BIS Certification வாங்கி மொபைலை டெலிவரி தரும் முன்பே BIS certifications பக்கத்தில் இடம் பெறுவோம்.

கேள்வி: அனைத்து 3G மொபைல்களும் Qualcomm நிறுவனத்துடன் லைசென்ஸ் அக்ரிமெண்ட் செய்து இருக்கிறார்களே? நீங்கள் ஏன் செய்யவில்லை?

பதில்: நாங்கள் இப்போதுதான் Spreadtrum பிரசசர்தான் பயன்படுத்த உள்ளோம். எங்களுக்கு எதற்கு இப்போ அக்ரிமெண்ட்?


கேள்வி: Freedom 251 Android லாலிபாப் பதிப்பில் இயங்க இருப்பதாக தெரிவித்து உள்ளீர்கள். இன்னும் கூகிள் Android Partnership இடம் பெறவில்லையே?
Nature of Enquiry
பதில்: நாங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்து விட்டோம். படம் கீழே இணைப்பு.  

கேள்வி: Ringing Bells நிறுவன அலுவலகம் இயங்கவில்லை என மீடியாக்கள் சொல்கிறதே? அனைவருக்கும் எப்படி மொபைலை டெலிவெரி செய்ய போறீங்க?

பதில்: எங்கள் கார்போரேட் அலுவலகம் B44, Sector 63, Noida 201301 என்ற முகவரியில் நன்றாகவே இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் நேரடியாக வரலாம், முன் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக பணம் பெற்ற பின் மொபைல் டெலிவரி செய்வோம். அதன் நகல்களை விரைவில் வெளியிடுவோம். எதையும் நாங்கள் விளக்க தயாராக இருக்கிறோம். எங்கள் கார்போரேட் அலுவலகத்துக்கு வருகை தாருங்கள் என நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளார்கள்.

எப்போது Payment Gateway மின்னஞ்சல் கிடைக்கும்?

இந்த மொபைலை ஆறு கோடிக்கும் அதிகமானவர்கள் முன் பதிவு செய்து உள்ளதால் சற்று தாமதம் ஆகலாம். உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் ஒரு லிங்க் இருக்கும் அதனை கிளிக் செய்து CCAvenue.com அல்லது PayU PG மூலம் பணத்தை செலுத்தி ஆர்டரை உறுதி செய்துக்கொள்ளலாம்.

வாரகணக்கில் மின்னஞ்சல் கிடைக்காமல் இருந்தால் என்ன செய்வது? 

இங்கே கிளிக் செய்து Freedom251 தளத்தின் Contact Form நிரப்பும் போது Nature of Enquiry என்பதின் எதிரே Product Enquiry என்பதை தேர்வு செய்ய மறக்காதீர்கள்.

மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இங்கே கேளுங்கள்.

FB Page லைக் செய்யுங்கள்.

நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE அல்லது Like செய்து விட்டு செல்லுங்கள். 

இந்த பதிவு காப்புரிமை பெற்றது. தயவு செய்து யாரும் நகல் எடுக்காதீர்கள். 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

FEBRUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட