Home » » WhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன?. Download Latest Version

WhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன?. Download Latest Version


WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க முடியும். மற்றும் பல புதிய வசதிகள் இருக்கிறது. இப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பு கூகிள் பிளே ஸ்டோர்ல இருக்காது. மேலும் பல புதிய வசதிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.



சாதனை
சென்ற வாரம்  WhatsApp ஒரு பில்லியன் பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாகி Jan Koum ஒரு பேட்டியில் இதனை அறிவித்தார். ஒரு நாளைக்கு இருநூறு கோடி மெசேஜ்கள் அனுப்பபடுகிறது. 160 கோடி போட்டோகள் அனுப்பபடுகிறது என்றார். மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியை 53க்கும் மேற்பட்ட மொழிகளில் பகிரப்படுகிறது என்றார். 16 கோடி வீடியோகள் தினமும் ஷேர் செய்யபடுகிறது.

வாட்ஸ்ஆப் புதிய வசதிகள் என்ன? 

1. WhatsApp Version 2.12.429 அல்லது அதற்கு அப்புறம் வெளியிடப்பட்ட புதிய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குருப்ல 256 பேர் வரை இணைத்துக்கொள்ள முடியும்.

இதற்கு முன் ஒரு குருப்ல 100 மெம்பர்கள் மட்டுமே இணைக்க முடிந்தது. WhatsApp போட்டியாளர் Telegram அப்ளிகேசனில் ஒரு குருப்ல 1000 பேர் வரை இணைக்கலாம் என நீடித்து இருந்தார்கள். எனவே 100 to 200 மாற்ற இருந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் 256 மெம்பர்கள் வரை இணைக்க முடியும் என நீட்டிப்பு செய்து உள்ளார்கள்.

2.   வாட்ஸ்ஆப் குருப் ஐகான்களை web சர்ச் செய்து தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் ஒரு WhatsApp group உள்ளே சென்று மேலே டைட்டில் பார் அழுத்தி வரும் பக்கத்தில் குரூப் ஐகான் படம் தெரியும் அதில் உள்ளே பென்சில் போன்றதை டச் செய்து கீழே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் தெரியும். அதில் மூன்றாவதாக உள்ள Search web அழுத்தினால் உங்கள் குருப்க்கு தொடர்புள்ள பல படங்கள் தெரியும்.

அதில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்ந்தெடுத்து டச் செய்தால் உங்கள் குருப் ஐகானாக தேர்வாகிவிடும். பயன்படுத்தி பாருங்கள்.

3. ஆரம்பத்தில் இருந்து வாட்ஸ்ஆப் செக்யூரிட்டி நன்றாக இருந்தாலும் அடுத்தவர்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை ஹாக் செய்து படிக்க தொடங்கி இருந்தார்கள். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் நோட்டம்மிட்டார்கள். இனி இது தடுக்கப்படுகிறது. இப்போது வாட்ஸ்ஆப் நடவடிக்கை எடுத்து end-to-end encryption மூலம் ப்ரைவசி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தி தவறுகளை தடுத்து உள்ளது.

3. இப்போது மெசேஜ், படங்கள், ஆடியோ நோட்ஸ் மற்றும் வீடியோ என அனைத்தையும் கூகிள் டிரைவில் பேக்ஆப் எடுத்துக்கொள்ளும் வசதியை கொடுத்து உள்ளார்கள். Settings >> Chats and Calls >> Chat Backup சென்று செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்துக்கொள்ளுங்கள்.

4. Starred Messages ஒரு சில மாதங்களுக்கு முன் வந்து இருந்தாலும், அதிலும் மேம்படுத்தி இருக்கிறார்கள். WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். இது பற்றி மேலும் உதவிக்கு இங்கே கிளிக் செய்து வீடியோ பாருங்கள்.

5. ப்ரோக்ராமிங்க் சம்பந்தப்பட்ட கோடிங் இனி WhatsApp மூலம் தனிப்பட்ட ஃபார்மட்ல அனுப்ப முடியும். மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த வசதி மகிழ்ச்சி தர கூடியதுதான். இந்த ஆப்சன் இணைக்கப்ப்ட்டாலும் ஒரு சில வாரங்களுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது.

6. விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள்.


இன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Version 2.12.437 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை. 
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட