Home » , , , » Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.

லெனோவா நிறுவனம் சென்ற ஜனவரி 5ம்‌ தேதி அன்று Lenovo Vibe K4 Note என்ற ஸ்மார்ட்போனை #KillerNote ஹாஸ்டாக்குடன் வெளியிட்டது. சென்ற 19 அன்று முதல் பிளாஷ் விற்பனை முறையில் விற்பனையை துவக்கியது. இப்போது K4 Note மொபைலுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால் கூடவே  Lenovo K5 Note மொபைலையும் வெளியீட்டு உள்ளது. இது Lenovo Vibe K4 Note விலை குறைவு ஆனால் ஆப்சன்களுக்கு குறைவில்லை. இதிலும் 5.5" FHD டிஸ்ப்ளே, சிறப்பான பிரசசர், RAM, 13 மெகா பிக்சல் காமிரா, Fingerprint சென்சார், அதிக கொள்ளளவு உடைய பேட்டரி என சிறப்பான மொபைலாகவே இருக்கிறது. இந்த பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகளை பார்ப்போம்.



இந்த மொபைல் முழுவதும் மெட்டல் பாடியால் ஆனது. திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.8 GHz Octa-core MediaTek Helip P10 பிராசசருடன்  550MHz Mali T860 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை microSD மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை நானோ (Nano) சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, dual-band WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3500 mAh இருக்கிறது.

Lenovo K5 Note Specs: 

5.5-inch (1920 x 1080 pixels) IPS display
1.8 GHz Octa-core MediaTek Helip P10 processor with up to 550MHz Mali T860 GPU
2GBRAM,
16GB Internal Storage,
Expandable Memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual (nano) SIM
13MP rear camera with dual-tone LED flash, PDAF, f/2.2 aperture
8MP front-facing camera, 77.4-degree wide-angle lens
Dimensions: 152×75.7×8.49mm
Dolby ATMOS
Fingerprint sensor
4G LTE / 3G HSPA+, dual-band WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS
3500mAh battery

இந்த மொபைல் நேற்று சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி விலை சுமார் 10999 என தெரிகிறது. விரைவில் இந்தியாவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் இந்த Lenovo K5 Note விவர குறிப்புகளுடன் Xiaomi Redmi Note 3 மொபைலின் விவர குறிப்புகளை  ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும்பாலும் இரண்டும் சரி நிலையில் இருக்கிறது. எனவே Lenovo K5 Note மொபைலை Xiaomi Redmi Note 3 மொபைலுக்கு சரியான போட்டியாக அமையும். இரு மொபைல்களும் விரைவில் இந்தியாவில் வெளிவரும்.

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.

பலவீனம்:  விலை சற்று அதிகமே. 3GB RAM இருப்பின் நன்று.

தகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல்

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:



அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட