Home » , , , » Coolpad Note 3 Lite ஸ்மார்ட்போன் 3GB RAM, Fingerprint Sensor, 4G @ 6999 மட்டும்.

Coolpad Note 3 Lite ஸ்மார்ட்போன் 3GB RAM, Fingerprint Sensor, 4G @ 6999 மட்டும்.


சில மாதங்களுக்கு முன் குறைந்த விலையில் அதிக வசதிகளோடு Coolpad Note 3  வெளியிடப்பட்டு அமேசான் தளத்தில் அதிகம் விற்று சாதனை படைத்தது. இந்த Coolpad Note 3 மொபைலின் விலை 8999 மட்டுமே, இப்போது சில தினங்களுக்கு முன் வெளியான Coolpad Note 3 Lite ஸ்மார்ட்போனின் விலை வெறும் 6999 மட்டுமே. ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபைலும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பதிவில் இதன் முழு விவரங்கள் மற்றும்  Coolpad Note 3 மொபைலுக்கும் Coolpad Note 3 Liteக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன்  Scratch-resistant Glass பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்) 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

Coolpad Note 3 Lite விவரக்குறிப்புகள்

5-inch (1280 x 720 pixels) HD IPS display, Scratch-resistant Glass
1.3GHz Quad-Core 64-bit MediaTek MT6735 processor with Mali-T720 GPU
3GB RAM,
16GB Internal Memory
Expandable Memory up to 32GB with microSD
Dual SIM
Android 5.1 (Lollipop) with Cool UI 6.0
13MP rear camera with LED Flash
5MP front-facing camera
Fingerprint sensor
Dimensions: 140.8 x 70.4 x 8.9mm; Weight: 152g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500mAh battery

இந்த மொபைல் விலை: 6999/=

இந்த மொபைலை Lenovo K4 Note எதிராக குறைந்த விலையில் அதிக வசதிகலொரு தயாரித்து வெளியீட்டு உள்ளது Coolpad நிறுவனம்.

சரி Coolpad Note 3 மொபைலுக்கும் Coolpad Note 3 Lite மொபைலுக்கும் என்ன வித்தியாசம்? பெரிதாக வித்தியாசம் இல்லை. இதன் டிஸ்ப்ளே உயரம் அரை இன்ச் கம்மி மற்றும் பேட்டரி 500 mAh கம்மி அவ்வளவுதான். இந்த இரண்டுக்கும் ஒப்பிட்டு பட்டியலை கீழே தந்துள்ளேன் பாருங்கள். (கீழே படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.)



FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட