Home » , , , » Kyocera Digno Rafre ஸ்மார்ட்போன் - வெந்நீரில் மற்றும் சோப்பு போட்டு கழுவினாலும் பழுதடையாத மொபைல்.

Kyocera Digno Rafre ஸ்மார்ட்போன் - வெந்நீரில் மற்றும் சோப்பு போட்டு கழுவினாலும் பழுதடையாத மொபைல்.


Kyocera Group ஜப்பானை தலைமையிடமாக கொண்ட புகழ் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளது. சோலார், செராமிக், மெடிக்கல் உதிரி பாகங்களை தயாரிப்பதில் முன்னணினியில் இருந்த இந்நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் (For Asia) S301, DINGO U, DINGO C போன்ற மொபைல்கள் ஏற்கனவே வெளியீட்டு சாதனை படைத்து விட்டார்கள். இப்போது Kyocera Digno Rafre என்ற இந்த மொபைலை வெளியீட்டு எல்லா மொபைல் நிறுவனங்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து உள்ளார்கள்.



ஆம் இந்த மொபைலை சுட சுட வெந்நீரில் போட்டு எடுத்து சோப்பு போட்டு கழுவ முடியும் இதனால் மொபைலுக்கு எதுவும் ஆகாது. பழுதும் அடையாது, தூசியும் அண்டாது. உலகில் சோப்பு போட்டு சுத்தம் செய்ய கூடிய ஒரே மற்றும் முதல் மொபைல் இதுதான். இதில் உள்ள ஆப்சன்களுக்கும் எந்த குறையும் இல்லை. சிறப்பான வசதிகளோடு வெளி வந்து உள்ளது.  இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக இதன் வசதிகளை பார்ப்போம். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) TFT LCD HD டிஸ்பிளேயுடன் Dragontrail X பாதுகாப்பு உள்ளது. 1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 பிராசசருடன்  Adreno 306 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது. சிறப்பான 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் எல்‌இ‌டி ஃப்ளாஷ் உள்ளது மற்றும் 2 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. மேலும் 4G LTE  இது  ஒரு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது. இந்த மொபைல் மொத்தத்தில் சிறப்பான மொபைல்தான்.

கீழே உள்ள வீடியோ பாருங்கள். இந்த மொபைலை சோப்பு போட்டு கழுவ முடியும், 47 டிகிரி சுடு தண்ணீரில் போட்டு வைக்கவும் முடியும்.





DIGNO Rafre KYV36 Specs:

5-inch (1280 x 720 pixels) TFT LCD display with Dragontrail X protection
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory with microSD
Android 5.1 (Lollipop)
13MP rear camera with LED Flash
2MP front-facing camera
Waterproof (IPX5 / IPX8) and Dustproof (IP5X)
Dimensions: 71 × 141 × 10.1mm; Weight: 155g
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3,000mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Gyroscope

இந்த மொபைல் இந்தியாவில் வெளியிட இருக்கிறார்கள். ஜப்பானில் இதன் விலை 57,240 ஜப்பான் YEN இது இந்திய மதிப்பில் சுமார் 30,000 வரும். இந்தியாவில் வெளியிட்ட பிறகு சரியான விலையை அறிய தருகிறோம்.

பலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.

பலவீனம்: 2 மெகா பிக்சல் முன் காமிரா மூலம் செல்பி எடுக்க போதாது.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட