Xiaomi இந்தியா நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக தனது மொபைல்கள் மற்றும் டேப்லெட்களுக்கு 3000 வரை தள்ளுபடி செய்கிறது. நீங்கள் Xiaomi மொபைல் வாங்க நினைத்து இருந்தால் நாளை செவ்வாய் கிழமை வரை காத்திருங்கள். மேலும் நவம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஹெட் செட், Mi Band போன்ற பல உபரி பாகங்கள் 1 ரூபாய்க்கு தர இருக்கிறார்கள். இதற்கு இன்றே ரிஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம். இது பற்றிய விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மொபைல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. Redmi 2 Prime தற்போதைய விலை 6999/- நாளை 500 தள்ளுபடியில் 6499 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4 (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 12999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4i (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 10999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Pad விலையில் 3000 ரூபாய் தள்ளுபடி செய்து 9999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Band 200 தள்ளுபடி செய்து 799 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Ear phone அனைத்தும் 299 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது.
இதைத்தவிர Mi இந்தியா உபரி பாகங்கள் தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு Flash Sales முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். நாளை நவம்பர் மூன்றாம் தேதி முதல் 5ம் தேதி வரை 2 மணி முதல் மாலை 6 மணிக்குள் Flash விற்பனை நடக்க இருக்கிறது. இது ஒரு சிறப்பான சலுகை. இன்றே ரிஜிஸ்டர் செய்ய இங்கே செல்லுங்கள். இவர்களின் Mi அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு தீபாவளி பம்பார் பரிசாக Mi TV 2S என்ற ஆண்ட்ராய்ட் டிவி இலவசமாக தினம் ஒருவருக்கு வழங்கபடும். இந்த டீவி இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. முதல் முதலாக இப்போதுதான் வெளியிட இருக்கிறார்கள்.
Payu Money மூலம் பணம் செலுத்தினால் மேலும் 5 சதவீதம் தள்ளுபடி உண்டு.
மேற்கண்ட சலுகை விலை விற்பனை Mi India ஸ்டோர் மற்றும் மற்ற மின் வணிக தளங்களிலும் கிடைக்க இருப்பதாக தெரிகிறது. தகவல்குரு பாவனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி!!
இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.
அன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும் இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
அதிகம்
வாசிக்கப்பட்ட பதிவுகள்:
5000 ரூபாய்க்கு
குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October
2015
XOLO BLACK 1X பட்ஜெட் ஸ்மார்ட்போன் 4G, 3GB RAM, FHD, 32GB Internal, 13MP கேமரா
XOLO BLACK 1X பட்ஜெட் ஸ்மார்ட்போன் 4G, 3GB RAM, FHD, 32GB Internal, 13MP கேமரா