Home » , , , , » Gionee Marathon M5 6020mAh பெரிய கொள்ளவு உடைய பேட்டரியுடன் வெளியீடு.

Gionee Marathon M5 6020mAh பெரிய கொள்ளவு உடைய பேட்டரியுடன் வெளியீடு.



ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். எனவே இந்த பேட்டரி விரைவில் தீரும் பிரச்சனையை சரி செய்ய பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.



ஆனால் ஜியோனி மாரத்தான் போன்ற பெரிய கொள்ளளவு கொண்ட மொபைல்கள் வர தொடங்கியதும் இந்த நிலை இப்போது மாறி வருகிறது. இனி வரும் காலங்களில் பவர் பாங்க் சாதனங்களுக்கு குட் பை (Good Bye) சொல்லிவிடலாம். இப்போது ஜியோனி மாரத்தான் M5 ரிலீஸ் ஆகி விட்டது. இது மிக அதிக மின் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. இப்போது இந்த ஜியோனி மாரத்தான் M5 மொபைல் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

இந்த ஜியோனி மாரத்தான் M5 மொபைலை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் குறைந்தது நான்கு ஐந்து நாட்களுக்கு வரும். இது மிக விரைவான சார்ஜ் ஆகும் வகையில் தொழில்நுட்ப திறனுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக இதில் ஒரு விஸேஷம் என்னவென்றால் இரண்டு 3010 mAh பேட்டரிகள் உள்ளது. ஆக மொத்த கொள்ளளவு 6020 mAh ஆகும்.

இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) HD Super AMOLED Plus டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.5 GHz quad-core MediaTek MT6735 64-bit பிரசாசருடன் Mali-T720 GPU இருப்பது மேலும் சிறப்பு, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இரண்டு சிம் கார்டிலும் இருக்கிறது. இதை தவிர 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 6020 mAh இருப்பதால் நீண்ட நேரம் மொபைலில் பேட்டரி சேமிப்பு கிடைக்கும்.

Gionee Marathon M5 Specifications: 

5.5-inch (1280 x 720 pixels) HD Super AMOLED Plus display
1.5 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
3GB RAM,
32GB Internal memory,
Expandable memory with microSD: 128GB
Android 5.1 (Lollipop) with Amigo UI 3.1
13MP rear camera with LED Flash, 5P lenses, 1080p video recording
5MP front-facing camera, 84-degree ultra-wide angle lens
Dual SIM (LTE + GSM / CDMA)
3.5mm audio jack, FM Radio
Dimensions: 152mm × 76mm × 8.5mm;
Weight: 214g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
6020mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor


Gionee Marathon M5 விலை: Rs. 17999/=  
 @ FLIPKART



பலம்: எல்லா வசதிகளும் இருக்கு. சிறப்பான பெரிய பேட்டரிநல்ல கேமரா,

பலவீனம்: விலை சற்று அதிகம்.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட