தகவல்குரு தளம் அண்மையில் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தோம். தகவல்குரு தளத்தில் நீங்கள் அதிகம் விரும்புவது எது? அதில் பலர் அப்ளிகேஷன் பற்றி எழுதுங்கள் என்று அதிகம் பேர் பேஸ்புக் வழியாக கமாண்ட்ஸ் செய்து இருந்தார்கள். இந்த கேள்வியை இப்போது தளத்திலும் இணைத்து உள்ளோம், இங்கே கிளிக் செய்து உங்கள் எண்ணத்தை தெரிவியுங்கள். இன்றைய பதிவில் ஒரு சாதாரண போட்டோவை அழகாக மாற்ற ஒரு போட்டோ எடிட்டர் இலவச அப்ளிகேஷன் பற்றி சொல்ல போகிறேன்.
கூகிள் நிறுவனத்தின் Snapseed என்ற அப்ளிகேஷன் மிகவும் பிரபலமானது இந்த ஆப் மூலம் எந்த ஒரு போட்டோவையும் அழகாக மாற்றிவிட முடியும். இதில் பல சிறப்பு வசதிகள் இருக்கிறது. மேலும் இந்த ஆப் மூலம் ஒளியை கூட்டி குறைத்து சிறப்பான போட்டோவை உருவாக்க முடியும். இந்த ஆப்ல உள்ள சில வசதிகளை கீழே தந்துள்ளேன்.
Tune image - இந்த ஆப்சன் மூலம் போட்டோவை அழகூட்ட முடியும். வெளிச்சத்தை கூட்டியோ குறைக்கவோ முடியும். போட்டோவில் உள்ள முகத்தில் பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்க முடியும்.
Crop - இந்த வசதி மூலம் படத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும். /
Rotate - 90 டிகிரியில் போட்டோவை சுழற்ற முடியும்.
Transform - இந்த வசதி மூலம் ஃபோட்டோவையோ அல்லது ஒரு பகுதியோ பெரிதாக சிறிதாக மாற்றி அமைக்க முடியும்.
Brush - இந்த Brush வசதி மூலம் டச்அப் செய்ய முடியும்.
Selective adjust - இது முக்கியமான வசதி. இதன் மூலம் ஃபோட்டோவில் குறுப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து புத்துணர்சி கொடுக்க முடியும். உதாரணம் ஒரு ஃபோட்டோவில் ஒருவரின் முகத்தின் நிறம் வழக்கத்தை விட கருப்பாக இருந்தால் சிகப்பு நிறத்தில் மாற்ற முடியும். மேலும் பின்னனியில் உள்ள கட்சியை கூட மாற்ற முடியும்.
Healing - இதுவும் நல்லதொரு வசதி. ஒரு ஃபோட்டோவில் தேவை இல்லாத புள்ளிகள், கறைகள், பொருள்களை இருந்த இடமே தெரியாமல் நீக்க முடியும்.
Vignette - இந்த வசதி மூலம் குறுப்பிட்ட சுற்றளவில் தேர்ந்தெடுத்து ஒளியை மாற்றவோ, ஏற்றம் இறக்கம் செய்வதன் மூலம் போட்டோவை அழகாக மாற்ற முடியும்.
மேலும் Filter என்ற ஆப்சன் மூலம் Lens Blur, Glamour Glow, Tonal Contrast, HDR Scape, Drama, Grunge, Grainy film, Vintage, Retrolux Noir, Black & White, Frames போன்ற பல வசதிகள் மூலம் எந்த ஒரு சாதாரண போட்டோவையும் முற்றிலும் மாறுபட்ட அழகுடன் மாற்ற முடியும்.
Snapseed Android App Download
மறக்காமல் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று சொல்லுங்கள்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
- ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
- MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
- 10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
- ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
- 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.