Home » , , , » OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

உலகில் அதிகமானோர் எதிர்பார்த்த OnePlus X ஸ்மார்ட்போன் நேற்று வெளியிடப்பட்டது. இது One Plus நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன். இதற்கு முன்னர் OnePlus One மற்றும் OnePlus 2 மொபைல்களை வெளியீட்டது. முதலில் OnePlus One மொபைலுக்காக CyanogenMod நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு  ஆண்ட்ராய்ட் அடிப்படையாக கொண்ட CyanogenMod 11S இயக்க முறைமையோடு(ஓஸ்) வெளிவந்தது, பின்னர் ஒரு சில பிரச்சனைகளுக்கு பிறகு CyanogenMod நிறுவனத்தோடு இருந்த ஒப்பந்தத்தை நிறுத்தி விட்டு ஆண்ட்ராய்ட் அடிபடையாக கொண்ட OxygenOS இயக்க முறைமையோடு(ஓஸ்) OnePlus 2 மொபைலை வெளியிட்டது. இப்போது இந்த மொபைலும் ஆண்ட்ராய்ட் அடிபடையாக கொண்ட OxygenOS இயக்க முறைமையோடு வெளிவந்துள்ளது. OnePlus X ஸ்மார்ட்போன் பற்றி மேற்கொண்டு விவரமாக பார்ப்போம்.இந்த மொபைல் இரண்டு விதமாக வெளியீட்டு உள்ளார்கள். ஒன்று Onyx நிறத்தில் இதன் விலை 16999/= இதன் பின் பகுதி மெட்டலால் ஆனது. மற்றொன்று Ceramic நிறத்தில் உள்ளது, இதன் விலை 22,999/=. இதன் பின் பகுதி வலிமையான கண்ணாடியால் ஆனது, இந்த மொபைல் மிகவும் லுக்கா இருக்கும். இது ஒரு லிமிடெட் மொபைல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்காக வெறும் 10,000 மொபைல்களே தயாரிக்கப்பட்டுள்ளது. Ceramic மாடல் அமரிக்காவில் கிடைக்காது.

Onyx நிறத்தில் உள்ள மொபைல் நவம்பர் 5ம் தேதி முதல் அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது. Ceramic நிற மொபைல் நவம்பர் 24 தேதி முதல் அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது. இந்த இரண்டு மொபைல்களையும் இன்வைட் கோட் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

OnePlus X ஸ்மார்ட்போனுக்காக ஐந்து வகையான Flipcase தயாரிக்கப்பட்டு உள்ளது. கீழே படம் உள்ளது பாருங்கள்.


இந்த மொபைல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் Sri City என்ற தொழில்நுட்ப பூங்காவில் தயாரிக்கட்டுள்ளது. இப்போது இந்த மொபைலின் விவர குறிப்புகளை பார்ப்போம்.

OnePlus X specifications: 

5-inch (1920 x 1080 pixels) Full HD AMOLED display with Corning Gorilla Glass 3 protection
2.3GHz quad-core Qualcomm Snapdragon 801 processor with Adreno 330 GPU
3GB RAM
16GB internal storage,
Expandable memory up to 128GB with microSD
Android 5.1.1 (Lollipop) based Oxygen OS 2.1
Hybrid Dual (nano + nano) SIM (second slot can also be used as microSD slot)
13MP rear camera with LED Flash, ISOCELL 32M sensor, PDAF, f/2.2 aperture, 1080p video recording,
8MP front-facing camera, OV8858 sensor, wide-angle lens, f/2.4 aperture
Dimensions: 140×69×6.9mm;
Weight: 138g (Onyx), 160g (Ceramic)
3.5mm audio jack, FM Radio, 1.2W bottom-facing speaker
4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2525mAh built-in battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

OnePlus X மொபைல் எல்லா வகையிலும் பலமாகவே உள்ளது. பலவீனம் என்று எதையும் சொல்ல முடியாது. வாங்க நினைப்பவர்கள் Invite செய்ய இங்கே செல்லுங்கள்.

இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.

அன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும்  இங்கே கிளிக் செய்து பார்வையிடுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட