Home » , , , » Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம். 4G LTE, 2GB RAM, 16GB Internal, 13MP Camera.

Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம். 4G LTE, 2GB RAM, 16GB Internal, 13MP Camera.



லெனோவா நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A6000 மொபைலை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். பத்தாயிரத்திற்க்கும் குறைவான விலையில் தரமான 4G LTE மொபைலை தந்தார்கள். அதன் வெற்றிக்கு பிறகு பல மொபைல்களை தயாரித்து வெளியீட்டு வெற்றியும் கண்டார்கள். அந்த வரிசையில் Lenovo A6000 Shot என்ற அருமையான கேமரா மொபைலை அதற்கான சென்சார்களுடன் தயாரித்து அறிமுகம் செய்து உள்ளார்கள். இதில் 13 மெகா பிக்ஸல் காமிராவுடன் 2GB RAM உட்பட ஒரு சிறப்பு மொபைலை பத்தாயிரத்திற்க்கும் குறைவான விலையில் வெளியீட்டு இருக்கிறார்கள். இந்த மொபைல் Asus Zenfone Laser மொபைளுக்கு போட்டியாக அமையும் தொழில்நுட்ப வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்த பதிவில் இதன் சிறப்புகளை பார்ப்போம். 

Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் கேமராவை முன்னிலை படுத்தி தயார் செய்து இருக்கிறார்கள், இது ஒரு சிறந்த செல்ஃபி மொபைல் என்றுகூட சொல்லலாம்.   இது 5 அங்குல HD திரையை கொண்டது. 1.2GHz  quad-core Qualcomm Snapdragon 8916 பிராசசர்,   4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கு, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 32GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப். முக்கியமாக  பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் உள்ளது. பேட்டரி 2300 mAh இருப்பது இந்த பிரசாசருக்கு போதுமானதே. இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0  போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு.Lenovo A6000 Shot மூன்று விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை Onyx Black, Pearl White, and Carmine Red ஆகும். 

விலை. Rs. 9999 மட்டுமே. 


Lenovo A6000 Shot Specs (விவர குறிப்புகள்): 



GENERAL
Form factor
Touchscreen
Dimensions (mm)
140.90 x 70.50 x 8.40
Weight (g)
130.00
Battery capacity (mAh)
2300
Removable battery
Yes
Colours
Onyx Black, Pearl White, Carmine Red

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 8916
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
13-megapixel with Auto Focus
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2

SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes



பலம்: இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட், RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு.

பலவீனம்: NFC/WiFi Direct இல்லை என்றாலும் பெரிய பிரச்சனை இல்லை.

தகவல்குரு மதிப்பீடு: 84% (Above Average - Value for money)

விலை. Rs. 9999 மட்டுமே. 

இந்த மொபைல் அடுத்த வாரம் முதல் ஆன்லைன் மூலம் கிடைக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்....  அனைத்து புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். நன்றி!

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட