Home » , , » தவறவிட்ட ஸ்மார்ட்போனை உடனடியாக கண்டுபிடிக்க. ஒரு அப்ளிகேஷன்.

தவறவிட்ட ஸ்மார்ட்போனை உடனடியாக கண்டுபிடிக்க. ஒரு அப்ளிகேஷன்.


ஸ்மார்ட்போன் கூட ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்தான். நாலு பேரை கேட்டு, ரிவ்யு பார்த்து, பணம் சேர்த்து வாங்கிய ஒரே மாதத்தில் மொபைலை தொலைத்தவர்கள் நிறைய பேர். தகவல்குரு தளத்தில் மொபைலை தொலைத்து விட்டேன் எப்படி கண்டுபிடிப்பது என கேட்டவர்கள் நிறைய பேர். காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் மொபைலை மீண்டும் மீட்டவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவே. காணாமல் போன/திருடிய மொபைலை எடுத்தவர்கள் சைலன்ட் மோடில் வைத்து இருந்தாலும் ஒரு SMS மூலம் எளிதில் கண்டுபிடிக்க இன்றைய பதிவில் ஒரு அப்ளிகேஷன் பற்றி எழுத இருக்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.

நாம் பேருந்து பயணத்தின் போது தவற விட்டாலோ, தியட்டரில் படம் பார்க்கும் போது தவற விட்டாலோ அல்லது வீட்டில் மொபைலை சைலன்ட்டில் போட்டு நாமே எங்கயாவது மறந்து வைத்து விட்டால் உடனே கண்டுபிடிக்க பலர் Android Device Manager செல்வீர்கள். ஆனால் ஒரு சாதாரண மொபைலில் இருந்து SMS செய்தாலே போதும் மொபைலை கண்டுபிடித்து விடலாம்.  (Android Device Manager மூலம் தொலைந்த மொபைலை கண்டுபிடிக்க அல்லது திருடு போன மொபைலில் உள்ள டேட்டாக்களை அழிப்பது எப்படி என தெரியாதவர்கள் இங்கே கிளிக் படித்துக்கொள்ளுங்கள்.)  இப்போது இந்த அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம்.


முதலில் இங்கே கிளிக் செய்து Ring My Droid App டவுன்லோட் செய்து  உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் ஆனதும் ஓபன் அழுத்தியாவுடன் உங்களுக்கு படம் 1ல் உள்ளது போல இருக்கும் ஏதேனும் ஒரு பாஸ்வோர்ட் கொடுங்கள். உதாரணம் Thagavalguru. (இந்த பாஸ்வேர்ட் Case Sensitive அதனால் நீங்கள் கொடுத்த பாஸ்வோர்ட் Upper Case, Lower Case சரியாக நினைவில் வைத்து இருக்க வேண்டும்.)
பாஸ்வோர்ட் கொடுத்தபின் செட் அழுத்தி சேவ் செய்யுங்கள். அவ்வளவுதான்.

இப்போது உங்கள் மொபைலை சைலன்ட் மோடில் வைத்து விடுங்கள். மற்றொரு சாதாரண மொபைல் மூலம் (NOKIA 1100வாக இருந்தாலும்..) நீங்கள் கொடுத்த பாஸ்வோர்ட் டைப் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் நம்பருக்கு SMS அனுப்புங்கள்.

SMS உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை வந்தடைந்த வினாடி தானாகவே சைலன்ட் மோட் முடக்கப்பட்டு Full சவுண்ட்ல அலாரம் அடிக்கும் (படம் 2) Found Phone பட்டன் அழுத்தி அலாரத்தை நிறுத்துங்கள்.

இந்த அப்ளிகேஷன் வெறும் 402KB தான். இந்த அப்ளிகேசனை உருவாக்கியவர் இந்தியாவை சேர்ந்தவர்தான். பெயர் ராமன் தீப் சிங். இது ஒரு எளிய டிரிக்தான்.

பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நாளை மற்றொரு அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம். நன்றி!!

Download Ring My Droid


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட