இப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவிட்டதா என்பதை கவனிக்க தவறுவதில்லை. பேஸ்புக்(Facebook) என்கிற முகநூலில் உங்களுக்கு ஒருவர் மெசேஜ் (inbox) அனுப்புகிறார். அதை பேஸ்புக் மெசேஞ்சர் அல்லது Facebook.com மெசேஜ் ஐகானை கிளிக் செய்து படிக்கும் நிமிடத்தில் அந்த மெசேஜ் அனுப்பியவருக்கு உங்கள் மெசேஜ் பார்க்கப்பட்டது டிக் ஆகி Seen Mon 4.30pm என்று வந்து விடும். மெசேஜ் அனுப்பியவரும் நீங்கள் மெசேஜ் பார்த்து விட்டீர்கள் என்பதை உறுதி செய்துக்கொள்வார்.
பல நேரங்களில் இது நல்ல விஷயமே. சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவர் அனுப்பிய மெசேஜை படித்தாலும் அவரிடம் நாம் மெசேஜ் படிக்காதமாதிரி காட்டிக்கொள்ள வேண்டும். மேலே படத்தை பாருங்கள். Mark as read பட்டனை நீங்கள் அழுத்தினால் மட்டுமே அனுப்பியவருக்கு Seen message தெரியும். இது எப்படி முடியும்? இந்த பதிவில் இதை பற்றி பார்ப்போம்.
இங்கே கிளிக் செய்து Unseen என்ற இந்த குரோம் நீட்சியை Add to Chrome கொடுத்து உடனே மேலே டூல்பாரில் இணைந்து விடும். இது வெறும் 263KBதான். இப்போ குரோம் அட்ரெஸ் பார் அருகில் நீல கலரில் ஒரு ஐகான் புதிதாய் வந்து இருக்கும். இதை கிளிக் செய்து ஆன் ஆப் செய்துக்கொள்ள முடியும். அந்த ஐகானை வலது கிளிக் செய்து வெறும் மெனுவில் Options செல்லுங்கள். அதில் கீழே படத்தில் உள்ளவாறு இரண்டு ஆப்சன் இருக்கும். இரண்டிலும் டிக் செய்து விடுங்கள்.

முதல் ஆப்சன் Seen என்பதை மறைப்பது, இரண்டாவது நாம் சாட்(Chat) டைப் செய்வதையும் மறைக்க முடியும். அவ்வளவுதான். நீங்கள் இனி இந்த நீட்சியை தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் சந்தேகம் இருந்தால் இங்கே கேளுங்கள்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். சிறப்பான மொபைல்
Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம்.
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015