Home » , , , , » WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன?

WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன?


இன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சமீபத்தில் முதலிடத்தில் இருந்த சமூக வலைதளமான பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளியது WhatsApp. உலகிலேயே அதிகமானவர்கள் விரும்பி பயன்படுத்தும் அப்ளிகேசனாக WhatsApp மாறிவிட்டது. WhatsAppல பல வசதிகள் இருக்கிறது. சிலருக்கு எல்லாம் தெரிந்து இருக்கும், பலருக்கு பல வசதிகள் தெரிய வாய்ப்பில்லை. தகவல்குரு தளத்தில் இது பற்றி ஒரு பதிவு தாருங்கள் என்று பலர் மின்னஞ்சல் செய்து இருந்தார்கள். எனவே இந்த பதிவில் WhatsAppல ஒளிந்து இருக்கும் பல சிறப்பு வசதிகளை பற்றி பார்ப்போம். மேலும் இன்றைய புதிய WhatsApp 2.16.66 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

1. நீங்க ZIP, PDF, EXE, APK, RAR மற்றும் 100MBக்கும் மேற்பட்டகொள்ளளவு உள்ள பைல்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப முடியும். இதனை DropBox மற்றும் CloudSend ஆப் மூலம் எளிதாக அனுப்ப முடியும். நீங்கள் அனுப்ப வேண்டியதை Dropbox App மூலம் அப்லோட் செய்து லிங்க் எடுத்து CloudSend திறந்து அதில் கொடுங்கள், பின்னர் அதில் உள்ள Share ஆப்சன் மூலம் WhatsApp வழியே அனுப்புங்கள்.

2. நீங்கள் WhatsApp மெசேஜ்களை தவறி அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம் திரும்ப மீட்டு விடலாம். WhatsApp ஒவ்வொரு நாளும் பேக்கப் எடுத்து வரும். இது உங்கள் மொபைலில் WhatsApp போல்டரில் >> Database என்ற போல்டருக்குள் தேதி வாரியாக இருக்கும். பல விதங்களில் அழிந்த மெசேஜ்களை மீட்க முடியும். முதலில் வாட்ஸ்ஆப் குளோஸ் செய்து விட்டு File Managers (நான் ES File Explorer பயன்படுத்துகிறேன்) மூலம் WhatsApp>> Database சென்று msgstore.db.crypt8 என்ற பையலை msgstore.db.crypt8-current என Rename செய்யுங்கள். பிறகு முந்தைய டேட்டாபேஸ் பைல் தேதியுடன் இருக்கும் அதை msgstore.db.crypt8 என Rename செய்தால் அழிக்கப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும் திரும்ப வந்து இருக்கும். இரண்டாவது வழி ரொம்ப சுலபம் உங்கள் WhatsApp அப்ளிகேசனை Uninstall செய்யுங்கள். இதனால் WhatsApp ஆப் மட்டும்தான் அழியும் உள்ளே மெசேஜ், படங்கள் வீடியோ எதுவும் அழியாது. இப்ப மீண்டும் WhatsApp இன்ஸ்டால் செய்யுங்கள், உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து verify முடிந்ததும் முந்தைய மெசேஜ் மற்றும் மீடியாவை ரீஸ்டோர் செய்யவா என கேட்கும் (படம் பாருங்கள்) RESTORE பட்டன் அழுத்தி ரீஸ்டோர் செய்துக்கொள்ளுங்கள், இப்போது அனைத்து மெசேஜ்களும் திரும்ப வந்து இருக்கும். 

3. பொதுவா நீங்க WhatsAppல பல குருப்களில் மெம்பராக இருப்பீர்கள். ஒவ்வொரு நிமிடமும் வரும் படங்கள் மற்றும் வீடியோ தானாக டவுன்லோட் ஆகி உங்கள் டேட்டாவை காலி செய்து விடும். தேவைப்பட்ட படங்களை மட்டுமே டவுன்லோட் பார்க்கும் வசதி WhatsApp இருப்பது சிலருக்கு தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். Settings >> Chat and Calls >> Media auto-download இதில் மூன்று ஆப்சன் இருக்கும், Mobile Data, Wifi Data மற்றும் ரோமிங்ல இருக்கும் போது. இதில் உங்களுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளுங்கள். 4. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஸ்மார்ட்போனை ரிசெட் செய்வது நல்லதே. இதனால் உங்கள் பழைய மெசேஜ் அனைத்தையும் மொபைலில் வைத்து இருக்க முடியாது. மேலும் WhatsApp உங்கள் இன்டெர்னல் ஸ்டோரேஜ் அல்லது மெமரி கார்டில் அதிகமான இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே உங்கள் WhatsApp மெசேஜ் அனைத்தையும் கூகிள் டிரைவில் சேமித்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. Menu >> Settings >> Chats and calls >> Chat backup சென்று Backup to Google Drive டச் செய்து உங்கள் ஜிமெயில் ஐடியில் கூகிள் ட்ரைவ்ல பேக்அப் Daily, Weekly அல்லது Monthly தேர்ந்தெடுத்து ஓகே செய்யுங்கள். கீழே Backup to over என்பதை டச் செய்து உங்களுக்கு உகந்த WiFi அல்லது WiFi or Cellular தேர்ந்தெடுத்து வெளியேறுங்கள். 5. உங்கள் நண்பர்களின் ப்ரோஃபைல் படத்தையும் நீங்கள் மாற்ற முடியும். 561×561 pixels அளவு உள்ள ஏதேனும் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அதன் பைல் பெயரை உங்கள் நண்பரின் மொபைல் நம்பராக மாற்றி மெமரி கார்டில் WhatsApp >> Profile Pictures சென்று Overwrite செய்து விடுங்கள். நீங்கள் வைத்த படம் உங்கள் நண்பரின் WhatsApp ப்ரோஃபைல் படமாக மாறிவிடும். 

6. ஒரு மொபைலில் ஐந்துக்கும் அதிகமான WhatsApp பயன்படுத்த முடியும். இங்கே கிளிக் செய்து தனி பதிவை படியுங்கள்.
7. WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.? கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும், இங்கே கிளிக் செய்து தனி பதிவை படியுங்கள். 8. WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி? இங்கே கிளிக் செய்யுங்கள். 9. WhatsAppல உங்களுக்கு பிடித்த பதிவுகள், படங்கள், வீடியோகளை தனியாக சேமிப்பது எப்படி? இங்கே கிளிக் செய்யுங்கள். 10. WhatsApp நேற்றைய புதிய பதிப்பில் என்ன என்ன சிறப்பு வசதிகளை அறிமுகம் செய்து உள்ளார்கள்.? இங்கே கிளிக் செய்யுங்கள்.

நேற்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Version 2.12.559 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


ஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்

Like FB Page:


அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வார சிறப்பு பதிவுகள்:



குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட