Home » , , , , » ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்.


நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வப்போது வேகம் குறையும். ஹாங் கூட ஆகலாம், டச் சரியாக வேலை செய்யாது. நாம் திறந்து பணியாற்றும் அப்ளிகேஷன் கூட குளோஸ் ஆகலாம். இதனால் தேவை இல்லாமல் நம்மை எரிச்சலூட்டும். இன்று நான் தர போகிற டிப்ஸ் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.



இதற்க்காக நான் எந்த அப்ளிகேசனும் தரபோவதில்லை. சில சில செட்டிங்ஸ் மற்றும் ஒரு சில மாற்றங்கள் மூலம் மெதுவாக இயங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வைக்க முடியும். அது எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் என்ன காரணத்தினால் மொபைல் மெதுவாக இயங்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.  கீழே சில காரணங்களை அடுக்குகிறேன்.

1. அனிமேஷன்கள் உங்கள் மொபைல் வேகத்தை குறைக்கலாம்.
2. உங்கள் மொபைல் இயங்க RAM பற்றாக்குறை இருக்கலாம்.
3. அப்ளிகேஷன் அதிக Cache Clear.
4. இன்டெர்னல் ஸ்டோரேஜ் கம்மியா இருக்கலாம்.
5. உங்கள் மொபைலை ரிசெட் செய்யாமல் தொடர்ந்து பல மாதங்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

இந்த ஐந்து காரணங்களை கவனித்தாலே உங்கள் மொபைல் வேகமாக இயங்கும். இந்த பிரச்சனைகளை எப்படி ஒவ்வொன்றாக சரி செய்வது என்று பார்ப்போம்.

1. ஆண்ட்ராய்ட் மொபைலில் இயக்கங்களை அழகுற காட்ட அனிமேஷன் அமைத்து இருக்கிறார்கள். ஆனால் இதனை குறைத்தோ அல்லது நிறுத்தி வைத்தாலும் உங்கள் மொபைல் வேகமாக இயங்க தொடங்கும். இதை சரி செய்ய உங்கள் மொபைலில் Settings சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Developer Options இருக்கும். ஒருவேலை Developer Options இல்லையென்றாலும் கவலை வேண்டாம்.


செட்டிங்ஸ் மெனுவில் கடைசியாக உள்ள About Phone சென்று  ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Build number என இருக்கும். அந்த Build Number மேல் தொடர்ந்து 7 முறை டச் செய்தால் ஒரு எச்சரிக்கை செய்தி காட்டும்  அதற்கு ஓகே சொல்லுங்கள். இப்போது  மீண்டும் Settings சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் Developer Options இருக்கும்.

Developer Options உள்ளே சென்று ஸ்குரோல் செய்து கீழே வந்தால் window animation scale, transition animation scale மற்றும் animator duration scale இவற்றில் ஒவ்வொன்றாக டச் செய்து அனிமேஷன் ஆப் செய்து விடுங்கள் அல்லது .5x என்று இரண்டாவதாக உள்ளதை தேர்ந்தெடுத்து வெளியேறுங்கள்.

2. முதலில் Bettery Saver, Clean Master, Antivirus போன்ற ஆப் அன்இன்ஸ்டால் செய்யுங்கள். இது உங்கள் மொபைலில் மின்சாரத்தை சேமிக்கிறேன், Cache நீக்குகிறேன் என்று பெருமளவு நினைவகத்தையும், மின் சேமிப்பையும் காலி செய்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?, ஆண்டி வைரஸ் மென்பொருள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவை இல்லை என்பதை ஆண்ட்ராய்ட் ஒஸ் உருவாக்கிய ஆண்டி ரூபின் சொல்லி இருக்காரே.

மேலும் RAM பற்றாக்குறை இருந்தால் தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் மொபைலில் வைத்துக்கொள்ளுங்கள். தேவை இல்லாத அப்ளிகேசங்களை DISABLE செய்து விடுவது நல்லது.


இன்று Greenify App இல்லாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த Greenify ஆப் மூலம் அப்ளிகேசங்களை இயங்காமல் லாக் செய்துக்கொள்ள முடியும். உங்களுக்கு தேவைப்படும் போது மட்டும் இயக்கிக்கொள்ளலாம். இதற்கு Root அவசியமில்லை. இப்போது இந்த முறையை கூகிள் காப்பியடித்து உள்ளது. ஆம் Android 6.0 Marshmallow பதிப்பில் DOZE என்ற ஆப் இணைப்பாட்டு இருக்கிறது. இது தேவைல்லாமல் நினைவகத்தில் உள்ள ஆப்ஸ்களை நீக்கும்.


3. பொதுவா Cache Clear செய்ய Settings >> Storage >> ஸ்குரோல் செய்து கீழே வாருங்கள் Cached Data டச் செய்து  ஓகே கொடுப்பதன் மூலம் தேவைல்லாத குப்பைகளை நீக்குங்கள்.  Junk கிளியர் செய்ய File Manager அல்லது ES File Explorer மூலம் தேவை இல்லாத ஃபோல்டர்களை நீக்கலாம். வாரம் இருமுறை இப்படி செய்தால் கூட போதும்.

4. இன்டெர்னல் ஸ்டோரேஜ் கம்மியாக இருந்தால் அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துங்கள். மாதம் ஒருமுறை OTG கேபிள் மூலம் பென் ட்ரைவ்க்கு அல்லது டேட்டா கேபிள் மூலம் கணினிக்கு பேக்கப் எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்குங்க.

5. உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை ஆறு மாதத்திக்கு ஒரு முறையாவது ஃபேக்டரி ரிசெட் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்கு ஒரு முறை மொபைலை ஆப் செய்து சில நிமிடங்கள் கழித்து திரும்ப ஆன் செய்யுங்கள்.

படிங்க: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?


FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

1. ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிக நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? டேட்டா விரைவில் தீராமல் பாதுகாப்பது எப்படி? 
2. உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
3. WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
4. ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
5. 10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்

<<இந்த பதிவை SHARE செய்யுங்கள் ப்ளீஸ்>>

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட