Home » , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?


Android Rooting Part - 1


ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன? 

பொதுவா நீங்கள் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லாத அப்ளிகேசன்கள் நிறைய இருக்கும். நீங்கள் விருப்பட்ட சில அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியாது. உதாரணம்: Titanium Backup பயன்படுத்த முடியாது, ROM Manager மூலம் நீங்கள் விரும்பும் பிளாஷ் ரோம் மாற்றமுடியாது. புதிய ஒஸ் மேம்படுத்த முடியாது. எனவே நம் மொபைலை ரூட் செய்வதன் மூலம் நாம் விரும்பியவாறு நம் மொபைலை மாற்றி அமைக்க முடியும். அதற்கு நமக்கு சூப்பர் யூசர் பவர் தேவை. அதை ரூட் செய்தால் மட்டுமே பெற முடியும்.



இன்று நாம் ஆண்ட்ராய்ட் ரூட்டிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள்: 

1. ரூட் செய்தால் தேவை இல்லாத அப்ளிகேசன்களை நீக்கி விடலாம். எனவே நமக்கு ஸ்டோரேஜ் அதிகமாகும். இதனால் மேலும் மின் சேமிப்பு விரையமாவதை தடுக்க முடியும்.

2. நாம் விருப்பப்பட்ட Custom ROM/புதிதாக வந்த ஒஸ் பதிப்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

3. நாம் விருப்பப்பட்ட ஸ்கின், தீம்ஸ் மாற்றி மொபைலை அழக்கூட்ட முடியும்.

4. ரூட் செய்ததால் இதுவரை இருந்த தடை நீங்கி விடுகிறது, எனவே நம் ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக கையாள முடியும். கீழே உள்ள பயனுள்ள ஆப்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Titanium Backup - நம் மொபைல் டேட்டா அனைத்தையும் பேக்கப் எடுக்க.
ROM Manager - விருப்பட்ட பிளாஷ் ரோம் அமைக்க
System Tuner- பேட்டரி சேமிப்பை திட்டமிட்டபடி பாதுகாக்க
DroidWall - நீங்கள் குறுப்பிட்ட ஆப்ஸ் மட்டும் இணயத்தை பயன்படுத்துமாறு செய்யலாம். எனவே டேட்டா விரைவில் தீராமல் இருக்கு,
Adblock Plus - இன்று நாம் பயன்படுத்தும் ஏராளமான அப்ளிகேசன்களில் விளம்பரம் இடையில் வந்து நம்மை எரிச்சலூட்டும். Adblock பயன்படுத்துவதால் மொத்தமாக விளம்பரங்களை தடை செய்து விடும். மேலும் இதனால் இணையம் வீணாகமல் தடுக்க முடிகிறது.

4. பல மொபைல் நிறுவனங்கள் அப்ளிகேசங்களை மெமரி கார்டுக்கு நகர்த்த முடியாமல் செய்து விடுகிறார்கள். ரூட் செய்த பிறகு Force move to SD card ஆப் மூலம் இன்டெர்னல் மெமரியில் உள்ள அனைத்து ஆப்ஸ்களையும் மெமரி கார்டுக்கு நகர்த்திக்கொள்ளலாம்.

5. ரூட் செய்தபின் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கிவிட்டதால்  உங்கள் மொபைல் வேகமாக இயங்க தொடங்கும்.

6. இதனால் பேட்டரி சேமிப்பு இரட்டிப்பு மடங்கு அதிகமாகும்.

7. மொத்தத்தில் உங்கள் மொபைலுக்கு நீங்களே ராஜா. தடையில்லாமல் விருப்பட்ட அப்ளிகேசன்களை பயன்படுத்த முடியும்.


தீமைகள்: 

1. பொதுவா ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை எந்த வித வைரஸ் பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் ரூட் செய்தால் Unlock வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கு. இதற்கு ஆண்டி வைரஸ் பயன்படுத்தி ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ( ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை ஆண்டி வைரஸ் தேவை இல்லை)

2. சில நேரங்களில் சில அப்ளிகேஷன் இயங்க மறுக்கலாம்.

3. ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் மொபைலை ரூட் செய்த பிறகு Warranty Claim செய்ய முடியாது. (சூப்பர் யூசர் மென்பொருளில் Full unroot செய்து சூப்பர் யூசர் எடுத்து விட்டு Warranty Claim செய்ய வழி இருக்கிறது. அதை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.)

4. சில நேரங்களில் மொபைல் முற்றிலும் பழுது ஆகும் வாய்ப்பு இருக்கு. இது கொஞ்சம் கம்மிதான். முறையாக பயன்படுத்தினால் இந்த பிரச்சனை தவிற்க்க முடியும்.


அடுத்த பகுதியில் எப்படி ரூட் செய்வது? எந்த எந்த மென்பொருள்கள் ரூட் செய்ய பயன்படுகிறது. டேட்டா ரெகவரி, ரூட் செய்த மொபைலை இரண்டு வழிகளில் எப்படி அன்ரூட் செய்வது போன்ற விவரங்களை பார்ப்போம்.

குறிப்பு: தகவல்குரு நண்பர்களுக்கு, இந்த பதிவை நீங்கள் தெரிந்துக்கொள்ள மட்டும்தான் எழுதுகிறேன். ரூட் பற்றி அதிக அனுபவம் இல்லாமல் எதையும் செய்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ThagavalGuru.com தளம் பொறுப்பு எற்க்காது.



தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று:  https://www.facebook.com/thagavalguru1
 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட