ஆண்ட்ராய்ட் மொபைலில் பல வசதிகள் இருந்தாலும் இரண்டு பலவீனம் இருக்கு. ஒன்று பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். மற்றொன்று சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும். இந்த இரண்டு சிக்கல்களை தீர்க்கும் வகையில் பேட்டரி சேமிப்பை அதிகபடுத்தியும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய மொபைல்கள் தற்போது வர தொடங்கி உள்ளது. இருப்பினும் இன்று நான் தரக்கூடிய டிப்ஸ் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
1. ஃப்ளைட் மோட் அல்லது ஏரோபிளான் மோட்
உங்கள் மொபைலை Aeroplane மோடில் சார்ஜ் செய்யுங்கள். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை நார்மல் மோடிலிருந்து Aeroplane மோடுக்கு மாற்றுவதால் பல அப்ளிகேஷன்கள் பேட்டரி சேமிப்பை விரையமாக்காது. எனவே மிக விரைவாக சார்ஜ் ஆகும். பலர் சார்ஜ் செய்யும் போது மொபைலை ஆப் செய்து சார்ஜ் செய்கிறார்கள். அதுவும் நல்ல ஐடியாதான். ஏரோபிளான் மோட் மாற்றி சார்ஜ் செய்தால் மேலும் பெட்டர். இது போல செய்வதால் எந்த பலவீனமும் மொபைலுக்கு வராது ஆனால் அழைப்புகளை பெற இயலாது. உங்கள் மொபைலின் Quick Settings மெனுவில் Aeroplane என்பதை ஒரு டச் செய்யுங்கள். உங்கள் நெட்வொர்க், வைஃபை என அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டு விரைவான சார்ஜ் ஆக வழிவகை செய்யும்.
கீழே மேலும் சில டிப்ஸ் தருகிறேன் பயன்படுத்துங்கள்:
2. சார்ஜர் மூலம் மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.
இப்ப பெர்சனல் கணினி அல்லது லேப்டாப் வைத்து இருப்பவர்கள் தங்கள் கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்கிறார்கள். இது மொபைலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். கணினியில் உள்ள USB 2.0 வெறும் .5 முதல் 2.5 வாட்ஸ் வரை மட்டுமே மின் கடத்தும் எனவே சார்ஜ் ஆக நேரம் ஆகும் மேலும் உங்கள் மொபைல் நாளுக்கு நாள் பலவீனமடையும் வாய்ப்பு அதிகம்.
3. பவர் சேவர் மோட்
இரவு நேரங்களில், மொபைலை அதிகம் பயன்படுத்தாத நேரங்களில் மொபைலை Power Saver மோடுக்கு மாற்றி விடுங்கள். இதனால் 35% கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இருக்கிறது.
4. தேவை இல்லாத வசதிகளை ஆப் செய்யுங்கள்
நம் மொபைலில் எப்போதாவது பயன்படுத்தும் ஆப் நிறைய இருக்கு. சான்றாக Bluetooth, GPS, Wi-Fi, Printer, NFC போன்றவற்றை ஆப் செய்து வைப்பதே நல்லது. தேவைப்படும் போது மட்டும் அதனை பயன்படுத்திகிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும்.
இதை தவிர திறந்த அனைத்து அப்ளிகேசனையும் குளோஸ் செய்ய மறக்காதீங்க. தேவைப்பட்டால் Greenify App பயன்படுத்துங்கள்.
இந்த பதிவையும் பாருங்க:
நட்புடன்
ஞா. ஸ்ரீராம்
ஞா. ஸ்ரீராம்