Home » , , , , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி?

ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி?



ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகுந்த காரணங்களும் இருக்காதான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பற்பல ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. அதனால் தினம் இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் Battery Saver அப்ளிகேசன்களான DU Battery Saver அல்லது Battery Doctor போன்ற ஆப்களை நிறுவிக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால் இது போன்ற ஆப் அதிக நினைவகம் (RAM), இணையம் மற்றும் மின்சேமிப்பையும் எடுத்துக்கொண்டு இயங்குகிறது. இது தேவையா? ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவர்களுக்கு Clean Master, Battery Saver போன்ற அப்ளிகேஷன் தேவையே இல்லை. இது போன்ற அப்ளிகேசன்களே உங்கள் மொபைலில் அமர்ந்துக்கொண்டு அதிகபடியான மின்சாரத்தையும், இன்டெர்நெட் டேட்டாவையும் காலி செய்து விடுகிறது.

பேட்டரி சேவர் ஆப் இல்லாமல் ஆண்ட்ராய்ட் மொபைலை எவ்வாறு கையாளுவது?
நம் மொபைலில் தினமும் பற்பல ஆப்களை ஓபன் செய்வோம். வேலை முடிந்ததும் அப்படியே வெளியில் வந்து விடுவோம் அதை முறைப்படி குளோஸ் செய்யாததால் திறந்த அப்ளிகேஷன்கள் குளோஸ் ஆகாமல் மின் சேமிப்பை காலி செய்துக்கொண்டு இருக்கும்.  ஆகவே ஏற்கனவே திறந்த அப்ளிகேசனை கண்டறிந்து அதில் குளோஸ் செய்தாலே பேட்டரி விரையமாவதை தடுக்கலாம். இதையேதான் பேட்டரி சேவர் ஆப் செய்கிறது.

பேட்டரி சேவர் ஆப் என்ன செய்கிறது? இது போன்று அப்ளிகேசன்கள் திறந்து இருந்தால் உங்களிடம் அறிவுறுத்தும், நீங்களும் Optimize பட்டனை அழுத்துவீர்கள் உடனே அது திறந்த ஆப்ஸ்களை நினைவகத்தில் நீக்கி வைக்கும். இது தற்காலிகம்தான். மீண்டும் சில பல ஆப் இயங்க தொடங்கிவிடும். கிட்டதட்ட அனைத்து பேட்டரி சேவர் ஆப்களும் இந்த வேலையைதான் செய்கிறது, ஆனால் அதற்காக நிறைய மின்சரத்தையும் நினைவகத்தையும் எடுத்துக்கொள்ளும்.

திறந்த இருக்கிற அனைத்து அப்ளிகேசன்களையும் குளோஸ் செய்து அதிகம் மின்சாரத்தையும் இணையத்தையும் சேமிக்க Greenify என்ற ஒரு ஆப் இருக்கு, Greenify அப்ளிக்சேசன் மூலம் இந்த வேலையை ஒரே கிளிக்கில் (Touch) செய்து விடலாம். Greenify ஆப்க்கும் பேட்டரி சேவர் ஆப்க்கும் என்ன வித்தியாசம்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பேட்டரி சேவர் போல Greenify ஆப் அதிக நினைவகத்தையோ அல்லது இணையத்தையோ அல்லது மின்சாரத்தை விரையம் செய்யாது. Greenify பெரும்பாலும் நிரந்தரமாக நினைவகத்தில் இருந்து ஆப்களை நீக்குகிறது. இதை லாக் செய்கிறது என்றும் சொல்லலாம். அதனால் ஆப் நாம் திறக்காதவரை அதுவாகவே திறந்து நினைவகம், பாட்டரி, இணையத்தை வீணாக்காது. அதே நேரத்தில் அபேரடிங்க் சிஸ்டம்[OS] பைல்களை சிறிதும் பாதிக்காது.

Greenify அப்ளிகேசனை இப்போது பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த அப்ளிகேசனை பயன்படுத்த முன்பு root செய்ய வேண்டி இருந்தது. இப்ப உங்கள் ஸ்மார்ட்ஃபோனை root செய்யாமலே இந்த ஆப் பயன்படுத்தலாம். எனக்கு இது பெரிதும் பயனளிக்கிறது. (படிங்க: ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?)

அடுத்ததாக Cache Clean ஆப் கூட தேவை இல்லை என்பேன். Clean masterக்கு பதில் Settings சென்று அதில் Storage டச் செய்து Cached Data என்று கீழே இருக்கும். அதை டச் செய்தாலே இருக்கும் cache கிளியர் செய்து விடலாம். Junk கிளியர் செய்ய File Manager அல்லது ES File Explorer மூலம் தேவை இல்லாத ஃபோல்டர்களை நீக்கலாம். வாரம் இருமுறை இப்படி செய்தால் கூட போதும்.

மேலும் உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவை இல்லை என்று நினைக்கும் ஆப்களை Disable செய்து விடுங்கள், இதனால் மேலும் 25% பேட்டரியை சேமிக்க முடியும். மொத்தத்தில் 85% சதவீதம் வரை மின் சேமிப்பு கிடைக்கும்.

எனவே ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவர்களுக்கு Clean Master, Battery Saver போன்ற அப்ளிகேஷன் தேவை இல்லைதான்.

இணையத்தை விரைவில் தீராமல் கையாள்வது எப்படி?

மேலே நான் சொன்னபடி 30% வரை  டேட்டாவை சேமிக்க முடியும். மேலும் 10 வழிகளில் டேட்டவை சேமிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. உலாவி (Lightweight Browser)

நீங்கள் கூகிள் குரோம், Firefox, Dolphin, Android Web Browser போன்றவை பயன்படுத்தினால் அதிகம் டேட்டா எடுத்துக்கொள்ளும். அதற்கு பதில் கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Chrome Beta உலாவி அதிக இணையத்தை மிச்சபடுத்தும். மேலும் Opera Mini கூட பயன்படுத்தலாம். UC Browser ஓரளவுக்குதான் டேட்டவை சேமிக்கும். குரோம் பீட்டா அருமை அதில் Data Compression பெற  Settings > Bandwidth Management > Reduce data usage.


2. Ad Blocker Enable செய்வதன் மூலம் நாம் பார்வையிடும் வலை தளங்களில் விளம்பர படங்கள், வீடியோ போன்றவை தடுக்கப்படுகிறது. Ad Blocker எல்லா உலாவிகளுக்கும்(Browser) இருக்கிறது. இதனால் 50% இணையம் பாதுகாக்கப்படுகிறது.

3. உங்கள் ஆண்ட்ராய்ட் ஆப் Update செய்ய Wifi பயன்படுத்திக்கொள்வது நல்லது. உங்கள் பெருமளவு டேட்டவை சாப்பிட்டு விடும். எனவே 15 தினங்களுக்கு ஒரு முறை Wifi முறையில் மட்டும் அப்டேட் செய்யுங்கள்.

4. ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தவிர்த்து விடுங்கள். இதனால் மிக அதிகமாக மின்சாரம் வீணாகிறது.

5. பெரும்பாலும் அனைத்து ஆப்களும் இணையத்தில் சர்வர்க்கு ping செய்துகிக்கொண்டு இருக்கும்  இதை தடுப்பதன் மூலம் இணைய பயன்பாடு சேமிக்கப்படுகிறது. இதற்கு Restrict background data என்ற ஆப்சன் Settings>>Data Usageக்குள் மாற்றிக்கொள்ளலாம். (குறிப்பு: இதில் WhatsApp, Facebook போன்று இணையத்தை கட்டாயம் பயன்படுத்தும் ஆப்களை தடுக்க கூடாது)

6. Google Map ஆப் இயக்கினால் அதிகம் டேட்டா செலவாகும் எனவே Map பார்க்க முடிந்தவரை Wifi டேட்டவை மட்டும் பயன்படுத்துங்கள்.

7. அதிகம் தேவை இல்லாத Sync செட்டிங்ஸ்களை நிறுத்தி வையுங்கள். செட்டிங்ஸ் சென்று இதை செய்யாலாம்.

8. Youtube வீடியோகளை Offline feature பயன்படுத்துங்கள் Wifi கிடைக்கும் போது உங்களுக்கு வேண்டிய வீடியோவை make Offline கிளிக் செய்தால் பின்னர் தங்குதடையின்றி அனைத்து வீடியோவையும் பார்க்கலாம்.

9. Onavo Count | Data Usage ஆப் உங்கள் டேட்டவை பெருமளவு சேமித்து தரும் பயன்படுத்தி பாருங்கள். இதன் மூலம் எதற்கு எவ்வளவு டேட்டா செலவாகி இருக்கு என்பதையும் அறிந்துக்கொள்ளலாம்.

10. My Data Manager என்ற சிறப்பான  ஆப் ஒன்று இருக்கிறது. இது தேவையற்ற உங்கள் உங்கள் டேட்டவை சேமிக்க பெரிதும் பயன்படுகிறது.


எந்த ஆப் தேவையோ அதனை மட்டும் பயன்படுத்துங்கள். தேவை இல்லாத ஆப்களை இன்ஸ்டால் செய்து உங்கள் நினைவகத்தையும், மின்சாரத்தையும், இணையத்தையும் வீணாகமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் கீழே பேஸ்புக் கமாண்ட் இணைத்து இருக்கேன் அதில் கேட்டு விளக்கம் பெறுங்கள். அல்லது கேளுங்கள் சொல்கிறோம் என்ற எங்கள் முகநூல் குழுமத்திலும் உடனடியாக பதில் கிடைக்கும்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:



அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட