ஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக இடத்தை பிடிக்காதவாறு இருக்க வேண்டும். அப்படி 50MBக்கும் குறைவான சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் பற்றி இன்று எழுதுகிறேன். அந்த TOP 5 என்ன? பார்ப்போமா?
1. Temple Run 2
Imangi Studios நிறுவனத்தின் இரண்டாவது பிரபலமான மொபைல் கேம்ஸ் இது, இதன் முந்தைய பதிப்பான Temple Run ஒன்றை விட இது கிராபிக்ஸ் காட்சிகளில் தத்ரூபம் காட்டுகிறது. இதை பலர் விளையாடி இருப்பீர்கள். பற்பல இடங்கள் கண்களுக்கு நேர்த்தியாக இருக்கும். ஒரு முறை விளையாடினால் பல முறை விளையாட தோன்றும். இதன் எடை வெறும் 44.68MBதான். எனவே இந்த கேம்ஸ் மொபைலுக்கு எந்த பாதிப்பையும் தராது. Android 2.3 ஜிங்கர் பிரட் அல்லது அதற்க்கு மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பதிப்பை வைத்து இருப்பவர்கள் தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து விளையாட முடியும்.Download: Play Store | Other site
2. Candy Crush Soda Saga
King நிறுவனத்தின் பிரபலமான முதன் முதலில், 2012 ஆம் ஆண்டில், ஏப்ரல் 12ல் பேஸ்புக் தளத்தில் இது அறிமுகமானது. அதே ஆண்டு, நவம்பர் மாதம், ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கும், விண்டோஸ் இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கு 2014 டிசம்பரிலும் வெளியானது. 2013, மார்ச் மாதத்திலேயே, அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக இது பெயர் எடுத்தது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை புதிய நிலைகள், இந்த விளையாட்டில் இணைக்கப்பட்டன. வெறியோடு விளையாடிய பலர், புதிய லைப் மற்றும் விதி விலக்கல்களுக்குப் பணம் கட்டி விளையாடத் தொடங்கினார்கள்.Download: Play Store | Others
3. Subway Surfers
Kiloo நிறுவனத்தின் Subway Surfers கேம்ஸ் இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள். இது Temple Run போன்று இருக்கும். இதனை Facebook இல் இணைத்துக் கொண்டால் எமது நண்பர்கள் எத்தனை பேர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதைக் காண்பிப்பதோடு அவர்களுடன் ஒப்பிடும் போது தான் எத்தனையாவது நிலையில் இருக்கிறோம் என்பதையும் காட்டும். எனக்கும் பிடித்த கேம்ஸ். இது கொள்ளளவு வெறும் 44MB தான்.Download: Play Store
4. World of Goo
2D BOY நிறுவனத்தின் புகழ் பெற்ற கேம்ஸ் இது. 49MB எடை உடைய இந்த ஆப் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் டெமோ மட்டுமே இருக்கு. முழுமையான பதிப்புக்கு 300 ரூபாய் பணம் செலுத்திதான் பயன்படுத்த வேண்டும். இந்த கேமில் சிறப்பு விஷயமே சவுண்ட் எஃபக்ட்தான். பிரமாதமாக இருக்கு. இதில் ஏகப்பட்ட புதிர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம்.இந்த விளையாட்டு கண்டிப்பா உங்களுக்கு சலிப்பை தராது. இதன் ஒலி திறன் கண்டு வியக்காதவர்களே கிடையாது எனலாம்.
இதன் முழுமையான பதிப்பை வெளிபடையாக இங்கே தர இயலாது.
Download: Play Store
5. Hill Climb Racing
Fingersoft நிறுவனத்தின் சிறப்பான கேம்ஸ் ஆப் இது. பெரும்பாலான கேம்ஸ் பிரியர்கள் இந்த விளையாட்டை விளையாடி இருப்பீர்கள். மலை ஏறும் ரேஸ் விளையாட்டு. நிறைய நாணயங்கள் பிடிக்க வேண்டும். சிறப்பான விளையாட்டு. 2D கிராபிக்ஸ்ல கொஞ்சமும் போரடிக்காத நேர்த்தியான விளையாட்டு. நீங்களும் விளையாடி பாருங்கள். மேலும் இதன் கொள்ளளவு 20MBக்கும் கம்மிதான்.Download: Play Store
தற்போது அன்றாட பதிவை மின்னஞ்சலிலும் பெற முடியும். https://goo.gl/qKPFD3 இந்த சுட்டியில் சென்று உங்கள்
மின்னஞ்சல் முகவரியை ஒரு முறை பதிவு செய்தால் தினமும் இலவசமாக பதிவுகளை இமெயிலில்
பெறலாம்.
ஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.
நட்புடன் ஞா.ஸ்ரீராம்.