Home » , , , , » வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் ஸ்மார்ட்போன்கள் - கவர் ஸ்டோரி by ஸ்ரீபரன்

வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் ஸ்மார்ட்போன்கள் - கவர் ஸ்டோரி by ஸ்ரீபரன்


கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி, கையடக்க தொலைபேசி, கணனி என எல்லா இலத்திரனியல் சாதனங்களும் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 15 ஆண்டுகளிற்கு முன் ஓரிருவரிடம் மட்டும்தான் மொபைல்போன் இருந்தது. ஆனால், கடந்த 2000 ஆண்டுகளிற்குப் பிறகு பெரும் மொபைல் போன் புரட்சி ஏற்பட்டது. நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதாரண பிரஜையும் மொபைல்போனைப் பயன்படடுத்துவதற்கான சூழ்நிலை உருவானது. மேலும் கறுப்பு, வெள்ளை போன்களும் கலர் போன்களாக மாறின. இதுவும் கடந்த 5 ஆண்டுகளில் பல பெரிய மாற்றங்களைச் சந்தித்தது. இதன் விளைவாக, ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. உறவுகளிற்குக் குட்பை சொல்ல வைக்கும் விஷயங்கள்!!!! இணையத்தையும் ஸ்மார்ட் போனிலேயே பயன்படுத்தலாம் என்பதால் மின்னஞ்சல், யூடியூப், வட்ஸ்அப், மின் வணிகம் என்று சகலத்தையும் இதிலேயே முடித்துவிட முடிகிறது. " காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா? என்பது போல ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்ககையும் ஒரு வாழ்க்கையா?" என நினைக்கும் அளவிற்கு அது பிரபல்யமாகிவிட்டது. சீன நாட்டின் புள்ளி விபரங்களை சற்றே தோக்குவோமானால், வீடு மற்றும் கழிவறை அற்றவர்கள்கூட ஸ்மார்மாட் போன் பயன்படுத்துகிறார்கள்.
இதாவது பரவாயில்லை என சகிக்கலாம், ஜபோன் வாங்குவதற்காக பெற்ற பெண்ணையே விற்றுள்ளார்கள். அந்தளவிற்கு ஸ்மார்ட்கோன் மோகம் அதிகரித்துவிட்டது.

ஸ்மார்ட் கோன்களின் வளர்ச்சி பல நன்மைகளைத் தந்தாலும் அது பலருடைய வாழ்க்கையை எளிமையாக்கினாலும் பலருடைய வாழ்க்கையை சீரழித்தும் வருகிறது. பலர் நேரத்தை வீணடித்துவிடுகிறார்கள். தவறான எளிதில் செய்யும் அளவிற்கு குற்ற விஷயங்கள் இதனால் பெருகியுள்ளன. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா? தற்போது ஸ்மார்ட் போனை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை நாம் பார்க்கலாம்.

உறவுகளை கொல்கிறது
ஆம் ஸ்மார்ட் போன் மூலம் டுவிர்டர், ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பலருடைய உறவு முறைகள் கடுமையாக சீரழிந்து போயுள்ளன. தேவையில்லாத விஷயங்களில் பிரச்சனைகள் உருவாகி, வளர்ந்து கடைசியில் அந்த உறவுக்கே 'குட்பை' சொல்லுமளவிற்கு போய்விடுகிறது. அதனால், நாம் விரைவில் ஸ்மார்ட் போன்களிற்கு குட்பை சொல்லுவது தான் நல்லது.
பெற்றோர்களிற்கிடையில்,காதலர்களிற்கிடையில், கணவன் மற்றும் மனைவுக்கிடையில், நண்பர்களிற்கிடையில் என உறவுகளிற்கிடையில் விரிசல் ஏற்படுகிறது. கடைசியில் கொலை, தற்கொலை, துஸ்பிரயயோகம் என மானிட யுகமே ஸ்தம்பிதமாகிறது. ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயத்தை நோக்குவோமானால் ஒரு பெண் தனது ஆபாசப்படடங்களை காதலனிற்கு அனுப்புவதாக எண்ணி தந்தைக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு பல சம்பவங்கள் இற்றைவரை நிகழ்ந்த வண்ணமே உள்ளதென்பதை எண்ணினால் கவலைக்குரியதே!

உடற்பயிற்சி பறிபோகிறது!

ஸ்மார்ட் போன்களில் அநியாயத்துக்கு இலட்சக்கணக்கான கேம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த விளையாட்டு வலையில் நாம் எளிதாக சிக்கிவிடுகிறோம். இந்த கேம்களை விளையாடுவதாலும், சட்டிங் செய்வதாலும் இதிலேயே தொலைக்காட்சி பார்ப்பதாலும் இணையத்தை மணிக்கணக்காகப் பயன்படுத்துவதாலும், கண்களுக்கும் விரல்களுக்கும் எவ்வளவு கெடுதல்கள் வரும் தெரியுமா? தொடர்ச்சியாக தொடுதிரையை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா? எனவும் ஐயமும் பயமும் எழுகிறதல்லவா? ஸ்மார்ட் போனைக் கொஞ்சம் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கையோடு ஐக்கியமாகுங்கள். வோக்கிங், ஜொக்கிங், ஸ்விம்மிங் என்று உடம்பைத் தேற்றுகிற வழியைப்பாருங்கள்.

ஸ்மார்ட்ஃபோன் நம்மை அடிமையாக்கிறது

நம்மில் நிறையப்பேர் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகித்தான் தவிக்கிறோம். டூ-வீலரில் செல்லும்போது போனில் பேசி பேசி, போனில் பேசாத போதும் கூட தலையைத் தோளில் சாய்த்துக் கொண்டு தான் வண்டியை ஓட்டுகிறோம். யாருடைய போனோ அலரும் தருணத்தில் நம் போனை எடுத்துப் பார்க்கிறோம். அந்த அளவுக்கு நாம் அதற்கு அடிமையாகிப் போய்க் கிடக்கிறோம். உறங்கும்போதும், நடக்கும் போதும், நீராடும்போது என அன்றாடம் அனைத்து செயற்பாடுகளிலும் ஸ்மார்போனுடனேயே நேரம் கழிகிறது.

ஸ்மார்ட்ஃபோன் குழந்தைகளை சீரழிக்கிறது.
இப்போதெல்லாம் நம்மை விட நம் குழந்தைகள்தான் ஸ்மார்ட் போனைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையானது. நாம் சிறு வயதில் தெருக்களில் ஓடியாடி விளையாடுவோம்; சைக்கிளில் சுற்றுவோம். இதையெல்லாம் நம் உடலைத் தெம்பாக வைத்திருப்பதற்கான வழிகள். ஆனால், நம் குழந்தைகளோ ஸ்மார்ட் போனில் டெம்பிள் ரன்னும், அங்கிரி பேர்ட்ஸும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? அனாவசிய விளம்பரங்கள், வயதிற்கு மீறிய உலகிற்கு இழுத்துச் செல்கிறது. தூண்டுதலால் பல இளசுகள் தவறுதலான வழிகளில் சிதைகிறார்கள், சிதைக்கப்படுகிறார்கள்!

ஸ்மார்ட்ஃபோன்களால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. 
ஆம், நம்மில் பலருக்கு ஸ்மார்ட் போனில் பேசிக்கொண்டே பாதையைக் கடக்கிறோம், இதனால் வெகு சுலபமாக விபத்துக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. போனில் பேசியவாறே, வாகனத்தில் பயணித்தால் என்ன பிரச்சனை என்ற வினா எழலாம்? மறு முனையில் பேசும் நபரிடமிருந்தும் பெறப்படும் தகவலால் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு விபத்துக்கள் சஞ்சரிக்கலாம். மற்றும் பலர் அமர்ந்திருக்கும் சபையில் சத்தமிட்டு பேசுவது அநாகரிகத்தையும், அசௌகரியத்தையும் பிறரிற்கு ஏற்படுத்தும்.

நமது பொன்னான நேரம் வீணாகிறது
நம் வாழ்க்கை முறைகளை எளிதாக்கிக் கொள்ளத்தான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப வளர்ச்சி உதவ வேண்டும். ஆனால், அதைப் பயன்படுத்துவதால், அதிலேயே நாம் மூர்கி விடுவதால் நம்முடைய பொன்னான நேரம் முழுவதும் வீணாகப்போய் விடுகிறது. அன்றாடம் செய்ய வேண்டிய சில கடமைகளை இதனால் தவற விடுகிறோம்.

எனவே சிந்தியுங்கள் செயற்படுங்கள் ஸ்மார்ட்போனிடம் நாம் அடிமையாக போக கூடாது அதில் உள்ள அத்தியாவசிய பயன்பாடுகளை மட்டும் நாம் ஊபோயோகிக்க வேண்டும். சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம், உடல் நலம் பேணுவோமாக. 

ஆக்கம்: ஸ்ரீபரன், ஸ்ரீலங்கா. 


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட