Home » , , » உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா?

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா?


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும். இதனால் பலர் பிளே ஸ்டோரை விட்டு விட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் GetJar, Mobo Market போன்றவற்றை நாடுகிறோம். இன்றைய பதிவில் கூகிள் பிளே ஸ்டோர்ல பிழை(Error) வந்தால் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

இனி இதுபோன்ற பிழை செய்தி வந்தால் உங்கள் ஜிமெயில் ஐடியை மாற்றி கொடுத்து பார்க்கலாம் அப்படியும் பிரச்சனை தீரவில்லையென்றால் உடனே கீழே உள்ளது போல செய்யுங்கள்.

ஸ்டெப் 1. Settings >> Storage >> Clear cache கொடுங்கள். அல்லது நீங்கள் Clean Manager போன்ற ஆப் பயன்படுத்தினாலும் அதன் மூலம் கேஷ் கிளியர் செய்யலாம்.

ஸ்டெப் 2. Android 5 பேட்டரி சேவர் ஆப்சன் ஆப் செய்து விடுங்கள். 

ஸ்டெப் 3. Settings >> Apps >> அதில் All என்ற டேப் சென்று கீழே Google Play Store டச் செய்து Uninstall Updates என்பதை அழுத்துங்கள். Updates நீக்கப்பட்டு விடும். பிறகு உங்கள் மொபைலை ஒரு முறை ஆப் செய்து சில நிமிடங்களில் ஆன் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ள புதிய Play store டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். 


இன்ஸ்டால் ஆனதும் இப்ப நீங்க ஏதேனும் ஒரு ஆப் இன்ஸ்டால் செய்தால் தடையின்றி இன்ஸ்டால் ஆவதை காண முடியும். 

கூகிள் புதிய பிளே ஸ்டோர் அப்ளிகேசனை சமீபத்தில் வெளியீட்டு உள்ளது. அதற்க்கான லிங்க் மேலே தந்து இருக்கிறேன் இதை அனைவரும் டவுன்லோட் செய்து பயன்பெறலாம்.

நண்பர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கீழே கமாண்ட்ஸ் பாக்ஸ்ல கேளுங்கள் சொல்கிறோம். 
நட்புடன்
ஞா. ஸ்ரீராம்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட