Home » , , , » ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் மறைந்து இருக்கும் பத்து சிறப்பம்சம்கள்.

ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் மறைந்து இருக்கும் பத்து சிறப்பம்சம்கள்.



நாம் புதிதாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதில் என்ன என்னவெல்லாம் இருக்கு என்று பார்ப்போம், ரொம்ப நுணுக்கமாக ஒவ்வொன்றையும் பார்ப்பது ஒரு சிலர்தான். அது போல கூகிள் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்ட்ராய்ட் ஒஸ் பதிப்பை புதுப்பித்து வருகிறது. புதிதாக என்ன சிறப்புகள் இருக்கிறது என்பது சில வெளிபடையாக நமக்கு தெரியும் பல நமக்கு தெரியாது. நிறைய சிறப்பு இயல்புகள் நாம்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

உதாரணம் ஈஸ்டர் எக்(Easter Egg) கேம்ஸ் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் எல்லாருக்கும் வெளிபடையாக தெரியாது. ஆனால் Settings >> About Phone சென்று கீழே ஸ்குரோல் செய்து அங்கே Android Version 5.0.2 அல்லது 5.1 என்பதை தொடர்ந்து ஐந்து முறை டச் செய்தால் பிரபலமான Floppy Bird வகை கேம்ஸ் வெளிப்படும். இது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை ஏனென்றால் இந்த ஆப்சன் மறைக்கப்பட்டு இருக்கிறது, சில மறைக்கப்படாமலும் இருக்கிறது.

இது போல ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் அதிகம் வெளியில் தெரியாத பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக இங்கே தருகிறேன்.

1. ஸ்கிரீன் பின் செய்தல். (Screen Pinning)

ஒரு ஆப் திறந்து உங்கள் வேலையை கவனித்து வருகிறீர்கள், அதை பின்னர் தொடரலாம் என எண்ணுகிறீர்கள். அந்த ஆப் அப்படியே பின் செய்து விட்டால் எது வரை வேலை செய்தீர்களோ அப்படியே இருக்கும். பின்னர் வந்து மீதி வேலையை முடித்த பிறகு Unpin செய்துக்கொள்ளலாம்.  இதை பெற Settings >> Security >> கீழே ஸ்குரோல் செய்து Screen Pinning டச் செய்து மேலே டாகில் ஆன் செய்யுங்கள், இப்போது உங்களுக்கு விருப்பமான ஆப் திறந்து உங்கள் வேலையை தொடரலாம் இந்த ஆப் Pin செய்ய கீழே வலது கடைசியில் உள்ள Overview பட்டனை டச் செய்து அதில் உங்களுக்கு தேவையான ஆப் ஸ்குரோல் அப் செய்து அதில் உள்ள pin பட்டனை டச் செய்தால் போதும். மறக்கமால் வேலை முடிந்த பிறகு அதே Overview பொத்தானை லாங் பிரஸ் செய்தால் unpin ஆகிவிடும் அப்போதுதான் உங்களால் மற்ற அப்ளிகேஷன்களை திறக்க முடியும்.

2. கெஸ்ட் யூசர் ஐடி (Guest User)

விண்டோஸ் கணினியில்  உள்ளது போல ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் மொபைலை உங்களை தவிர உங்கள் சகோதர சகோதரிகளோ அல்லது நண்பர்களோ அவ்வப்போது பயன்படுத்த நேர்ந்தால் அவர்களுக்கு என தனியாக ஒரு கெஸ்ட் யூசர் ஐடியை உருவாக்கி தரலாம். உங்கள் பெர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்கலாம்.



3. ஸ்மார்ட் லாக் (Smart Lock)

காரை பார்க் செய்து விட்டு இறங்கிய பிறகு ப்ளூடூத் சாதனம் மூலம் காரை லாக் செய்வதை பார்த்து இருப்பீர்கள். அது போலவே உங்கள் மொபைலை ப்ளூடூத் அல்லது NFC போன்ற சாதனம் மூலம் சற்று தூரத்தில் இருந்தே உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்.  ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இந்த ஆப்சன் பெரிதும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை பெற Settings >> Security >> செல்லுங்கள். அதில் Lock என்பதில் PIN, Pattern போன்ற லாக் செலக்ட் செய்து செயல்படுத்தியதும் கீழே Trusted Agents என்று இருக்கும் அதில் Smart Lock ஆன்ல இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.


4.  புல் சார்ஜ் நேரத்தை குறுப்பிடுதல் (ETA Charge)

இதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்பில் மொபைலை சார்ஜ் போட்டால் Charging என்பதை மட்டும் காண்பிக்கும். ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் உள்ள மொபைலை சார்ஜ் போட்டால் முழுவதும் சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை Charging (1 hour 10 minutes until full) என்று சரியாக  முழுமையான சார்ஜ்க்கு ஆகும் நேரத்தை காண்பிக்கும். இந்த வசதி பெரும்பாலும் ஆக்டிவேட் ஆகியே இருக்கும்.


5. கூகிள் நவ் (Google Now)

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், அப்ளிகேஷன் திறப்பதாக இருந்தாலும், செட்டிங்ஸ்ல தேடுவது போன்ற வேலைகளை ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் ஒரு வினாடியில் பெற முடியும். Google Now என்கிற Google App மூலம் வினாடியில் யாருக்கும் கால் செய்யலாம், விரும்பிய ஆப் திறக்கலாம், குறுக்கு வழியில் எங்கும் விரைவில் செயல்பட முடியும். இப்ப செட்டிங்ஸ்ல storage பற்றி பார்க்க விரும்பினால் செட்டிங்ஸ் போயி ஸ்குரோல் செய்து Storage செல்வீர்கள் ஆனால் ஸ்வைப் செய்தவுடன் மேலே சர்ச் செய்து வினாடியில் எங்கும் செல்ல முடியும்.

6. பேட்டரி சேவர் (Battery saver)

குறைந்த அளவே பாட்டரி சேமிப்பு உள்ளது அதை வைத்து மாலை வரை ஓட்ட வேண்டுமே என்று கவலை படுவீர்கள். உங்கள் மொபைலில் 15% குறைவாக இருந்தால் பேட்டரி சேவர் உங்களிடம் அறிவுறுத்தும் 35% உள்ளது சமாளிக்க வேண்டும் என்றால் Settings >> Battery சென்று மேலே உள்ள மெனு ஆப்சன் மூலம் Bettery Saver ஆப்சனை ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். ஆனால் இணைய வேகம் தடைபடும்.

7. கேஸ்ட் ஸ்கிரீன் (Cast Screen)

Chromecast சாதனம் மூலம் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்கும் வீடியோவை டீவிக்கு மாற்ற முடியும். இந்த ChromeCast விலை அதிகம் இல்லை. இந்த மதிப்பில் சுமார் 2900 ரூபாய்தான். இதன் மூலம் டிவியை HDMI போர்ட்ல இணைத்து அனைத்து வகையான வீடியோவையும் பார்க்கலாம். ஆரம்பத்தில் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இணைப்பை பெற்று Wifi இணையம் வழியாக கூட வீடியோகளை துல்லியமாக பார்க்க முடியும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

8. Tap & Go

உங்கள் மொபைலை ரிசெட் அல்லது அப்டேட் செய்ய இருக்கீங்க என்று வைத்துக்கொள்வோம். உங்கள் லாலிபாப் மொபைலில் உள்ள டேட்டவை மற்றொரு ஆண்ட்ராய்ட் 4.1 பதிப்பு அல்லது லேடஸ்ட் பதிப்பு உள்ள மொபைளுக்கு ப்ளூடூத் அல்லது NFC மூலம் அப்படியே பேக்ஆப் எடுக்க Tap and Go ஆப்சன் பயன்படுகிறது. இந்த ஆப்சன் மறைந்து இருக்கும். இரண்டு மொபைல்களை Pair செய்யும் போது மட்டுமே Backup ஆப்சனில் தோன்றும். இது லாலிபாப் பதிப்பில் மிக முக்கியமான சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

9. Do Not Disturb mode

நாம் தூங்கும் போதோ அல்லது டிரைவிங்ல இருக்கும் போது DND Mode மாற்றிக்கொண்டால் எந்த வித பிரச்சனையில்லாமல் கவனமாக இருக்க வழிவகை செய்கிறது. முன்பு இதற்க்காக தனியாக ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சூழ் நிலை இருந்தது. ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பிலிருந்து இது இணைக்கப்பட்டு இருக்கிறது. சவுண்ட் பட்டனை ஏற்ற இறக்கம் செய்யும் போது கிடைக்கும். DND Mode வந்தவுடன் மேலே ஸ்டார் சிம்பல் தெரியும். இதில் மூன்று வகையான ஆப்சன் இருக்கு None, Priority, All. DND குளோஸ் செய்ய All என்பதில் டச் செய்தால் போதுமானது.

10. ரீபூட் செய்தாலும் ஆப் குளோஸ் ஆகாது. (Reboots don't kill background apps)

ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் நீங்கள் திறந்த அப்ளிகேசனை நீங்கள் முறையாக குளோஸ் செய்யாதவரை அது நினைவகத்தில் இருந்துக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரி சேமிப்பு பாதிப்பு அடைந்தாலும் நன்மைகளும் இருக்கு. மொபைலில் ஏதேனும் டைப் செய்துக்கொண்டு இருப்பீர்கள் பின்னர் மறந்து ரீபூட் செய்தாலும் கவலை இல்லை திரும்ப overview பட்டனை அழுத்தி கடைசியாக எப்படி இருந்ததோ அப்படியே கிடைக்க செய்யும். (படங்களை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்)

இதை தவிர Flash Light, Gestures, Folder Organize, Face Unlock, போன்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பு அம்சம்கள் லாலிபாப் பதிப்புக்கு உண்டு. அடுத்து வர இருக்கிற ஆண்ட்ராய்ட் 6.0 M பதிப்பில் மேலும் கவர்ச்சிகரமான சிறப்பு அம்சம்கள் இருக்கு.


இதையும் படிங்க: ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும்,   நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி?

இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் கீழே பேஸ்புக் கமாண்ட் இணைத்து இருக்கேன் அதில் கேட்டு விளக்கம் பெறுங்கள். அல்லது கேளுங்கள் சொல்கிறோம் என்ற எங்கள் முகநூல் குழுமத்திலும் உடனடியாக பதில் கிடைக்கும். அடுத்த பதிவில் சந்திப்போம்.


நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட