Home » , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள்.

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள்.முந்தைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவிவில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்கள் பற்றி பார்ப்போம்.

நம்ம மொபைலில் ஒரு நல்ல லாஞ்சர் இன்ஸ்டால் செய்தால் அது மேலும் அழகாக காட்டும் தன்மை கொண்டது. ஆண்ட்ராய்ட் டெஸ்க்டாப்பில் ஐகாங்களை அழகாக, வகை வாரியாக பிரித்து அழகுக்கு அழகு சேர்க்கும். எனவே ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் பலர் கண்டிப்பாக லாஞ்சர் இன்ஸ்டால் செய்து இருப்பார்கள். இந்த லாஞ்சர்களில் பல வகை உண்டு. சில உங்கள் மொபைலில் அதிகமான இடத்தை பிடித்துக்கொண்டு மொபைலின் வேகத்தை குறைத்து விடும். மேலும் சில நேரங்களில் ஹாங் ஆகி நம்மை எரிச்சலடைய செய்யும்.  எனவே லாஞ்சர்கள் குறைவான எடையுடன் இருக்க வேண்டும். ரொம்ப அழக்கூட்டும் வண்ணமும் இருக்கவேண்டும், வேகமாகவும் இயங்க வேண்டும். நாம் இங்கே குறைந்த எடையுடன் வேகமாக இயங்கக்கூடிய சிறந்த ஐந்து லாஞ்சர்களை பற்றி பார்ப்போம்.

1.  Hola Launcher


Hola Launcher ஒரு சிறந்த லாஞ்சர் ஆப் என்றே சொல்லவேண்டும். உங்கள் மொபைலை அழக்கூட்டுவது மட்டுமன்றி சற்றும் வேகம் குறையாமல் இயங்கவும் செய்யும். உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஆப், எப்போதவாது பயன்படுத்தும் என வகை வாரியாக பிரித்து கவர்ச்சிகரமாக இயங்கக்கூடிய ஆப் இது. Download


2. APUS Launcher

Appus Group தயாரித்துள்ள  இந்த APUS Launcher-Small,Fast,Boost மிக சிறந்த ஆப், குறைந்த கொள்ளவு, வேகமான இயக்கம், RAM மெமரியை அதிகம் ஆக்கிரமிக்காத தன்மை என்று பல குணதிசியங்கள் இந்த அப்ளிகேசனுக்கு  உண்டு. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் இந்த அப்ளிகேசனை பயன்படுத்துகிறார்கள். இந்த லாஞ்சர் அப்ளிகேஷன்களை தரவாரியாக பிரித்தல், முன்னணி படுத்தல், Cache க்ளீன் செய்தல், பேட்டரி சேமிப்பு என அனைத்து வேலைகளை திறன்பட செய்வதுடன் மொபைலை மிக அழகாகவும் கட்டுகிறது. Download


3. Zeam Launcher

வெறும் 388KB அளவே உடைய உலகின் மிக குறைந்த கொள்ளளவுக்கொண்ட லாஞ்சர் இதுதான். இதன் ஒரே பலவீனம் தொடர்ந்து மேம்படுத்தாததே. 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இது கடைசியாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இந்த ஆப் மேம்படுத்தவில்லை இருப்பினும் மிக சிறந்த லாஞ்சர் அப்ளிகேஷன்களில் இதுவும் ஒரு சிறந்த லாஞ்சர்தான். மேற்கண்ட அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது. ஜெல்லி பீன் மொபைல் வைத்து இருப்பவர்களுக்கு சிறப்பான லாஞ்சர் இது. Download


4. Nova Launcher

இதுவும் ஒரு பிரபலமான லாஞ்சர் ஆப்தான். கெஸ்டர்கள் உருவாக்கி கையாளும் வசதி, நீங்கள் பார்க்காத மின்னசல்களை, ஹாங்அவுட் மெசஜ்களை, SMS நோடிபிகேசன் மூலம் அறிவுறுத்தும்,  இதில் நம் விருப்பம் போல வடிவமைக்கலாம். மொபைல் டெஸ்க்டாப் ஐகான்களின் படங்களை மாற்றலாம். ஆப்களை மறைக்க, மீண்டும் தோன்ற செய்யும் வசதி, வேகமாக மொபைலை இயங்க வைக்கிறது. AndroidCentral, Android Police, AndroidPIT போன்ற தொழில்நுட்ப வலை தளங்கள் Nova லாஞ்சரை சப்போர்ட் செய்து இருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு சிறப்பான ஆப் . Download


5. Smart Launcher 3

சென்ற ஆண்டில் Smart Launcher 2 சிறப்பான ஆப் என நம்பர் 1 இடத்தை பிடித்து இருந்தது. இந்த ஆண்டில் Smart Launcher 3 அந்த இடத்தை கைபற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதிலும் நீங்கள் பார்க்காத மின்னசல்களை, பேஸ்புக் நோடிபிகேசன், WhatsApp நோட்டிபிகேஷன், கேலரி நோட்டிபிகேஷன், ஹாங்அவுட் மெசஜ்களை, SMS நோடிபிகேசன் மூலம் அறிவுறுத்தும் ஆப்சன் என அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. (படம் 3) உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல யூசர் இன்டர்பேஸ் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. Smart Launcher எனக்கும் பிடித்த ஆப். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். Download


உங்கள் கருத்தை கீழே பேஸ்புக் கமாண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு அறிய தாருங்கள். 
நட்புடன் 
ஞா. ஸ்ரீராம்

Like Us on Facebook Page நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட