ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்ட் மொபைலை ஆன் செய்யும் போதும் பூட்டிங் அனிமேஷன் காட்சி அழகாக நம் மனதை கவரும். ஒரே பூட் அனிமேசனை பார்த்து பார்த்து போராடித்து விட்டதா? கவலை வேண்டாம் மொபைலிலேயே இரண்டு வழிகளில் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பூட்டிங்க் அனிமேசனை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். முதல் வழி நாமே மாற்றுதல்(Manual) இரண்டாவது வழி அப்ளிகேஷன் மூலம் மாற்றுதல். எப்படி என்று பார்ப்போம்.
I. நாமே மாற்றுதல் (Manual Custom Boot Animation)
2. உங்கள் File eXplorer அல்லது ES File Explorer (File Manager) மூலம் System போல்டர் சென்று அதில் Media போல்டர் சென்றால் அங்கே bootanimation.zip என்ற பைல் ஏற்கனவே ஒன்று இருக்கும் அதை லாங் பிரஸ் செய்து வரும் ஆப்சனில் Rename எடுத்து bootanimation1.zip என்று பெயர் மாற்றிவிடுங்கள். (படம் -1)(எக்காரணம் கொண்டும் இந்த பைலை அழிக்க கூடாது. பின்னர் தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளல்லாம்.)
3. இப்போது டவுன்லோட் செய்த பைலை அதே போல்டரில் காபி செய்து விடுங்கள். அந்த பைல் பெயர் bootanimation.zip என்று இருக்க வேண்டும். (இப்போது படம் -3ல உள்ளது போல இருக்கவேண்டும்.)
4. புதிய bootanimation.zip பைலை லாங் பிரஸ் செய்து வரும் மெனுவில் Permissions தேர்ந்தெடுத்து படம்-2 உள்ளவாறு சரிபார்த்து விடுங்கள்.
5. இப்போது படம்-3ல உள்ளவாறு இரண்டு பைல்கள் இருக்கும். பழைய பூட் அனிமேஷன் bootanimation1.zip என்ற பெயரிலும், புதிதாக டவுன்லோட் செய்த பைல் bootanimation.zip என்று இருக்கும். இதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
6. இனி உங்கள் மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்தால் புதிதாக மாற்றிய பூட் அனிமேஷன் உங்களை மகிழ்விக்கும்.
இரண்டாவது வழியை இதே பதிவில் நாளை எழுதுகிறேன். உங்கள் மேலான சந்தேகங்களை கீழே பேஸ்புக் கமாண்டில் கேளுங்கள், அல்லது தகவல்குரு - கேளுங்கள் சொல்கிறோம் மொபைல் தொழில்நுட்ப முகநூல் குழுமத்தில் கேட்டு உடனடியாக விவரம் பெறலாம்.
நட்புடன்
ஞா. ஸ்ரீராம்