Home » , , , » ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now



இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ? இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த பாடல்களை மும்பு ஆடியோ கேசட்களிலும் பின்னர் சி‌டி பிளயரிலும் கேட்டு மகிழ்தோம். தற்போது மொபைகளிலும் டேப்லெட்களிலும் கேட்டு மகிழ்கிறோம். நல்ல பாடல்களை நேர்த்தியான மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் மூலம் கேட்டால் மேலும் ரசிக்கும் படி இருக்கும். இங்கே நான் எனக்கு பிடித்த சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர்களை உங்களுக்காக தருகிறேன். அவற்றில் சில PRO பதிப்பாகவும் சில இலவச பதிப்பாகவும் இருக்கும்.

1. Equalizer+

இது ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் மியூசிக் ப்ளேயர்  அப்ளிகேஷன் என்றே சொல்வேன். எனக்கு ரொம்ப பிடித்த ஆப். நமக்கு பிடித்த பாடலை தகுந்த அதிர்வெண்னுடன் கேட்கலாம். நாம் விரும்பியவாறு சில்லிங்க்குடன் கேட்கலாம். இதில் ஐந்து விதமான பாண்ட்கள் இருக்கு. மேலும் நமக்கு விரும்பியவாறு ஏற்ற இறக்கங்களை அமைத்துக் 10 விதமாக சேமித்துக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கு இதன் PRO வெர்ஷன் உங்களுக்காக தருகிறேன். இப்போதே டவுன்லோட் செய்து பாடலை கேட்டு மகிழுங்கள்.




2. jetAudio Music Player

இதுவும் ஒரு சிறந்த ஆப் என்றே சொல்லலாம். அனைத்து வகையான பார்மட்களையும் சப்போர்ட் செய்யும். கிராபிக் சிறப்பாக இருக்கும். பாடல்களும் கேட்க நேர்த்தியாக இருக்கும். இதன் இலவச பதிப்பு ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல கிடைக்கிறது. இதன் PRO வெர்சன்கான சுட்டி கீழே தந்து இருக்கேன் இப்போதே டவுன்லோட் செய்து பாடலை கேட்டு மகிழுங்கள்.




3. n7player Music Player

இந்த அப்ளிகேசனும் மிக சிறந்த மியூசிக் பிளேயர்தான். முப்பரிமாண சவுண்ட் எஃபக்ட் இதில் இருக்கிறது. மேலும் 10 பாண்ட் அதிர்வெண்களுடன் சிறப்பானதொரு ஆப். பாடலை கேட்கவும், காட்சிகளை பார்க்கவும் ரொம்பவே நேர்த்தியாக இருக்கிறது. மேலும் என்னேற்ற வசதிகள் உள்ளது தனி சிறப்பு. ஸ்கின்களை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கு. முக்கியமா தூங்க போகும் முன் குருப்பிட நேரம் செட் செய்யும் வசதி இருப்பதால் தொடர்ந்து பாடல் ஒலிக்காது எனவே பேட்டரி சேமிப்பும் கிடைக்கும். மொத்தத்தில் சிறந்த அப்ளிகேஷன். இதிலும் இலவச பதிப்பு மற்றும் PRO பதிப்பு என தனி தனியாக இருக்கு. இலவச பதிப்பை தற்போது தருகிறேன். 

Buy now


4. Shuttle Music Player

ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல இலவசமாக கிடைக்கும் இந்த மியூசிக் பிளேயர் கூட ரொம்ப நல்லாதான் இருக்கு. இதன் தோற்றம் மிகவும் எளிமையாக இருக்கிறது. பயன்படுத்தவும் வசதியாக இந்த ஆப் இருக்கு. பல சிறப்பு அம்சம்களும் இல்லாமல் இல்லை.



5. DoubleTwist Music Player

இந்த மியூசிக் பிளேயர் ஆப் இந்த ஆண்டு முதல் காலாண்டில் வெளியானது. இப்போது சிறந்த மியூசிக் பிளேயர் வரிசையில்  மிக முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. ஆம் ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல  இப்ப இந்த ப்ளேயர்தான் அதிகம் தறவிறக்கம் செய்யப்படுகிறதாம். இந்த எளிமையான இடைமுகப்புடன் காணப்படுகிறது. ரேட்டிங் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு சிறந்த மியூசிக் பிளேயர் ஆப். நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன். இது இலவசம்தான்.


இதை தவிர மேலும் பல நல்ல மியூசிக் பிளேயர் அப்ளிகேசங்களும் இருக்கிறது. குறிப்பாக Poweramp Music Player, Rocket Music Player, Around Sound, CityGlo Music Player, GoneMAD Music Player, Meridian Media Player, MX Music Player போன்றவை நல்ல மியூசிக் பிளேயர்களே. இவற்றில் ஏதேனும் தேவை என்றாலும் இங்கே கிளிக் செய்து எங்களுக்கு எழுதலாம். கீழே உள்ள முகநூல் கமாண்ட்டில் உங்கள் கருத்துகளை எழுத மறக்காதீங்க. அடுத்த பதிவில் குறைந்த சைஸ் கொண்ட சிறந்த ஐந்து லாஞ்சர் பற்றி ஒரு பதிவில் சந்திக்கலாம்.  நன்றி!!! 

நட்புடன்
ஸ்ரீராம்



iOS சாதனங்களுக்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன்கள்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட