நேற்றைய பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் ஆப் என்ன என்பதை ஒரு பதிவில் பார்த்தோம். நேற்றும் இன்றும் 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் டவுன்லோட் செய்து பயனடைந்தார்கள். சிலர் தங்கள் ஐஒஸ் சாதனங்களுக்கான (ஐபோன், ஐபாட் மற்றும் பல) சிறந்த மியூசிக் பிளேயர் கொடுங்கள் என்று முகநூலிலும், மின்னஞ்சலிலும் கேட்டு இருந்தார்கள், எனவே இன்றைய பதிவில் ஐஒஸ் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் மற்றும் டேப்லெட்களுக்கு சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் என்ன என்பதை பார்க்கலாம்.
1. Groove
இது சிறப்பான அப்ளிகேஷன். உங்கள் விருப்பங்களுக்கு தகுந்தாற்போல செட் செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த ஆப்ல லாக் வசதியும் இருக்கு. பலதரப்பட்ட பிளே லிஸ்ட்களை உருவாக்கி திறன்பட மேலாண்மை செய்யலாம். Download2. Musio
இது குறைந்தபட்ச இடைமுகப்பை கொண்ட மற்றும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய மியூசிக் பிளேயர் அப்ளிகேஷன். Download3. TapTunes
இது சிறந்த மியூசிக் ப்ளேயர் என்றுதான் சொல்லவேண்டும். ஐஒஸ் கைபேசிகளில் (Stock iOS) டிபால்ட்டா உள்ளதை விட இது நன்றாக இருக்கிறது.இதில் இசை ஆல்பங்களை மேலாண்மை செய்வது சிறப்பா இருக்கும். சிறப்பான இடைமுகப்புடன் இருப்பதால் பலர் இந்த மியூசிக் பிளேயரையே விரும்புவார்கள். Download
4. in:play Music Player
இதன் யூசர் இன்டர்பேஸ் சிறப்பாக இருக்கிறது. ப்ளேயர் பாடல்களை டிராக் செய்து எளிதாக நாம் விரும்பியவாறு கேட்க முடிகிறது. மேலும் இசை பெயர், இசை அமைப்பாளர் பெயர், படத்தின் பெயர் போன்று ராகம் வாரியாக பிரித்து கேட்கும் வசதியும் இதில் இருப்பது சிறப்பு. Download5. Listen
இந்த மியூசிக் அனைத்து விதமான சைகைகள் (gestures) இருப்பது சிறப்பு. முன்பு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பாடலை கேட்க இதில் சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. ஒரு பிளே லிஸ்டில் இருந்து குருப்பிட பாடல்களை இழுத்து வந்து (Drag) போட்டால் இந்த பிளே லிஸ்டில் இணைந்துக்கொள்ளும். மேலும் இதில் சிறப்பான யூசர் இன்டர்பேஸ் மற்றும் துல்லியமாக, நேர்த்தியாக, புத்துணர்ச்சியுடன் பாடல்களை லயித்து ரசிக்க முடிகிறது. எனக்கு பிடித்த பிளேயர் இது. பயன்படுத்தி பாருங்கள். Downloadஇதை தவிர மேலும் பல நல்ல மியூசிக் பிளேயர் அப்ளிகேசங்களும் இருக்கிறது. குறிப்பாக Denon Audio, Ecoute, Songbucket, iMusic போன்ற ஆப் நல்ல மியூசிக் பிளேயர்களே. கீழே உள்ள முகநூல் கமாண்ட்டில் உங்கள் கருத்துகளை எழுத மறக்காதீங்க.
நட்புடன்
ஸ்ரீராம்