Home » , , , , » Gionee Marathon M5 பலம் வாய்ந்த பேட்டரி திறனுடன் அறிமுகம். முழுமையான விவரங்கள்.

Gionee Marathon M5 பலம் வாய்ந்த பேட்டரி திறனுடன் அறிமுகம். முழுமையான விவரங்கள்.




ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். இதனால் பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.




ஆனால் ஜியோனி மாரத்தான் போன்ற பெரிய கொள்ளளவு கொண்ட மொபைல்கள் வர தொடங்கியதும் இந்த நிலை இப்போது மாறி வருகிறது. இனி வரும் காலங்களில் பவர் பாங்க் சாதனங்களுக்கு குட் பை (Good Bye) சொல்லிவிடலாம். இப்போது ஜியோனி மாரத்தான் M5 ரிலீஸ் ஆகி விட்டது. இது மிக அதிக மின் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. இப்போது இந்த ஜியோனி மாரத்தான் M5 மொபைல் பற்றிய விவரங்களை பார்ப்போம்.


இந்த ஜியோனி மாரத்தான் M5 மொபைலை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் குறைந்தது நான்கு நாட்களுக்கு வரும். இது மிக விரைவான சார்ஜ் ஆகும் வகையில் தொழில்நுட்ப திறனுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக இதில் ஒரு விஸேஷம் என்னவென்றால் இரண்டு 3010 mAh பேட்டரிகள் உள்ளது. ஆக மொத்த கொள்ளளவு 6020 mAh என தெரிகிறது. மேலும் இந்த மொபைலில் பின் பக்க காமிரா 13 மெகா பிக்ஸல் திறன் கொண்டது. முன் பக்க காமிரா 5 மெகா பிக்ஸல், 2GB மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பாதிப்பை உடையது.


Gionee Marathon M5 விவர குறிப்புகள்:

 Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.5GHz quad-core
Processor make: MediaTek MT6735
RAM: 2GB
OS: Android
Storage: 16GB
Rear Camera: 13 Megapixel
Front Camera: 5 Megapixel
Battery capacity: 6000mAh
Both SIM 4G/LTE

Sensors:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor

பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே. 

கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

mobile

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட