ஸ்மார்ட்ஃபோன் என்றாலே அது ஆன்ட்ராய்ட் மொபைல்தான். உலக அளவில் அதிகம் தயாரிக்கப்படுவது மற்றும் விற்பனையாவது ஆன்ட்ராய்ட் வகை மொபைல்கள்தான். அதற்கு அடுத்ததுதான் ஐஒஸ் மற்றும் விண்டோஸ் மொபைல்கள் இடம் பிடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் மே 28 மற்றும் 29 தேதிகளில் சான்ப்ரான்சிஸ்கோவில் கூகிள் நடத்திய உலகின் மிக பெரிய I/O மாநாட்டில் ஆன்ட்ராய்ட் M Developer Preview பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆன்ட்ராய்ட் M ஆன்ட்ராய்ட் பதிப்புகளில் பதிமூன்றாவது பதிப்பு என சொல்லலாம்.
ஆன்ட்ராய்ட் பதிமூன்று பதிப்புகளையும் வரிசை படுத்தி கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.
- Alpha (1.1)
- Beta (1.2)
- Cupcake (1.5)
- Donut (1.6)
- Eclair (2.0–2.1)
- Froyo (2.2–2.2.3)
- Gingerbread (2.3–2.3.7)
- Honeycomb (3.0–3.2.6)
- Ice Cream Sandwich (4.0–4.0.4)
- Jelly Bean (4.1–4.3.1)
- KitKat (4.4–4.4.4, 4.4W–4.4W.2)
- Lollipop (5.0–5.1.1)
- Android M (6.0)
உலகெங்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்புக்கு பல பெயர்கள் கூறி வருகிறார்கள். அவை Milk Shake, Malai Barfi, Muffin, Marshmallow, Macaroon, Macadamia Nut Cookie (a) MNC மற்றும் பல பெயர்களில் கணித்து வருகிறார்கள், ஆனால் அதிகமானோர் Muffin மற்றும் Milk Shakeதான் என்கிறார்கள். ஆன்ட்ராய்ட் M பெயரை உறுதியாக தெரிந்துக்கொள்ள நவம்பர் மாதம் வரை பொருத்தருளுங்கள். இப்போது இதன் சிறப்புகளை பார்க்கலாம்.
அப்ளிகேஷன் அனுமதி (App permissions)
முந்தைய ஆன்ட்ராய்ட் லாலிபாப் இயங்குதளத்தில் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது மட்டும் முழுமையான அனுமதியை கேட்கும், ஆனால் ஆன்ட்ராய்ட் M பதிப்பில் அப்ளிகேஷன் பயன்படுத்தும் போதும் அனுமதி கேட்கும் படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை எப்போதும் வேண்டுமானாலும் செட்டிங்ஸ் சென்று மாற்றிக்கொள்ளலாம். இதனால் உங்கள் மொபைளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
எளிதான இணைய மேம்பாடு(Web experience)
கூகிள் நிறுவனம் இந்த பதிப்பில் இணையம் பயன்படுத்துதலில் மேம்படுத்தி இருக்கிறார்கள். ஆம் கூகிள் குரோம் உலாவியில் டாப்களை இணைத்து இருக்கிறார்கள் இதனை எளிதாக கையாளும்படி செய்து இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல தளங்களில் உலவ மற்றும் எளிதாக மற்றொரு டாப்க்கு செல்ல வழிவகை செய்து உள்ளார்கள். இது ஒரு தனி அனுபவத்தை தரும் என்கிறார் குரோம் வடிவமைப்பில் உள்ள புர்கி(Mr. Burke). மேலும் இந்த பதிப்பில் குரோம் அதிவேகமாக இயங்கும் வகையில் அமைத்து இருக்கிறார்கள்.
கைரேகை வழி பாதுகாப்பு(Fingerprint support)
மேக் மற்றும் விண்டோஸ் லேப்டாப்களில் இருக்கும் கைரேகை வழி உள்நுழைதல் வசதி இப்போது ஆன்ட்ராய்ட் M பதிப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் உங்கள் கைரேகை மூலம் அன்லாக் செய்ய முடியும். இது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதி உள்ள மொபைகளில் மட்டும் இயங்கும். இனி கூகிள் வெளியிடும் அனைத்தும் மொபைல்களிலும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அவசியம் இருக்கும்.
மொபைல் வழி பணம் பரிவர்த்தனை
கூகிள் Wallet /Android Pay வழி அப்ளிகேஷன் மற்றும் மென்பொருள்களுக்காக பணம் செலுத்தும் போது பாதுகாப்பாக மிக விரைவாக செலுத்தலாம். பழைய முறையை முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். கூகிள் Wallet விரைவாக இயங்கும் வகையில் அமைப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம். இது முக்கிய டெபிட் கார்ட் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ், விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் டிஸ்கவர் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும்.
கூடுதல் பேட்டரி செயல்பாடு

வலைத்தள சுட்டி செயல்பாடு
இதற்கு முந்தைய ஆன்ட்ராய்ட் பதிப்புகளில் ஒரு சுட்டியை (லிங்க்) கிளிக் செய்தால் டிபால்ட் பிரவுசர் குரோம் மூலம் அந்த பக்கம் திறக்கும் படி இருந்தது. ஆனால் இதனை Open with டயலாக் பாக்ஸ் மூலாம் என்ன செய்வது என்பதை நிர்வாகிக்க முடியும். அந்த டயலாக் பாக்ஸில் குரோம், யூடியூப், பிளே ஸ்டோர் போன்ற ஆப்சன்கள் மூலம் வேண்டிய அப்ளிகேசனில் திறக்கலாம்.
அழகான லாஞ்சர் மற்றும் அப்ஸ் பகுதி.
ஆன்ட்ராய்ட் M பதிப்பில் லாஞ்சர் அழகே தனிதான். பற்பல வசதிகளோடு நாமே மாற்றிக்கொள்ளும் வசதியுள்ள லாஞ்சர் இணைத்து இருக்கிறார்கள். மேலும் All Aps பட்டனை அழுத்தினால் அப்ளிகேசங்கள் அகர வரிசையில் இல்லாமல் அதிகம் திறக்கும் அப்ப்ளிகேசங்களை முன்னிலை படுத்தி இருக்கிறார்கள். கிடைமட்ட ஸ்குரோல் பார் மூலம் விரைவாக பார்வையிட எளிதாக்கி இருக்கிறார்கள். மேலும் முக்கியமாக பின்னணி நிறத்தை லைட் மற்றும் டார்க் நிறங்களில் மாற்றிக்கொள்ளவும் முடியும். ஆன்ட்ராய்ட் 5 லாலிபாப் பதிப்பில் செட்டிங்ஸ் போன்ற பகுதிகளில் டெபால்ட் வெள்ளை நிறத்தில் இருந்தது ஆனால் இதில் டார்க் நிறத்தில் மாற்றி அமைக்குமாறு மேம்படுத்தி இருக்கிறார்கள். (படத்தை கிளிக் செய்து பாருங்கள்)
கடிகாரம் செயல்பாடு(Clock App):
ஆன்ட்ராய்ட் M பதிப்பில் வாரத்தின் முதல் நாளாக சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் எதை வேண்டுமானாலும் செட் செய்துக்கொள்ள முடியும். மேலும் முந்தைய பிழைகள் நீக்கப்பட்டு பல வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்புக்கான அப்ளிகேசனை நீங்கள் உங்கள் மொபைலிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இதற்கு ஆன்ட்ராய்ட் M பதிப்பு தேவை இல்லை. கீழே சுட்டி தந்து இருக்கிறேன்.
Clock 4.0.1 - Android M
கூகிள் டேப் (Google Tap)
வாழ்வை எளிதாக்க கூகிள் பல விஷயங்களை நமக்கு கொடுத்து வருகிறது அந்த வகையில் இந்த புதிய பதிப்பில் கூகிள் டேப் என்ற வசதியை தருகிறது. இதன் மூலம் அனைத்து உதவிகளையும் கூகுள் மூலமாக எளிதில் பெற முடியும். உதாரணமாக உங்கள் நண்பர் ஒரு ஹோட்டலை பற்றி சிறு விவரங்களை கேட்டு அனுப்புகிறார். நீங்கள் அந்த ஹோட்டல் பற்றிய முழுவிவரங்களையும் மிக விரைவாக பெற முடியும்.
மேலும் ஆன்ட்ராய்ட் M பதிப்பில் ப்ளு டூத் முதல் NFC வரை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பல்லாயிர மாற்றங்களை செய்து உள்ளார்கள்.
இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்பு இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் வெளிவர இருக்கிறது. Nexus 5, 6, 9 வைத்து இருப்பவர்கள் இதன் பிரீவீவ் பதிப்பை கீழே தந்துள்ள சுட்டியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
Android M Preview SDK - Download
பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக்/WhatsApp ஷேர் செய்யுங்கள்:


இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும்.