Home » , , , » இந்த வார தொழில்நுட்ப செய்திகள்.

இந்த வார தொழில்நுட்ப செய்திகள்.


ஆண்ட்ராய்ட் அடுத்த முக்கிய பதிப்பின் பெயர் Android L 5.0 என நமக்கு தெரியும். L என்றால் Lollipopதான் என்பது தற்போது தெரிய வருகிறது. Lenovo நிறுவனம் Lenovo Vibe X2 என்ற புதிய மொபைலில் Android Lollipop இயங்கு தளம் இணைத்து வெளியிட இருக்கிறது. இதற்க்கான விழா (விழா தேதி செப்டம்பர் 4 2014) அழைப்பிதலில் கீழ் கண்ட படம் இடம்பெற்று இருக்கிறது. படத்தை பார்த்தாலே புரியும் அதில் பெரிய லாலிபாப் தெரிகிறது. ஆனால் கூகிள் இன்னும் இதை வெளிபடையாக அறிவிக்கவில்லை. சென்ற வருடம் நவம்பர் மாதம் 1ம்‌ தேதி கூகிள் Nexus 5 மொபைளுடன் KitKat அறிமுகம் ஆனதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
நாம் அனைவரும் Android Lollipop பதிப்பை வரவேற்போம். 
Lenovo Vibe X2: அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த மொபைல் பற்றிய சில விவர குறிப்புகள்:
2.2GHz dual-core processor
5-inch full-HD touch screen
2GB of RAM
32GB inbuilt storage
13-megapixel rear camera with LED flash
5MP front-facing camera.

மொபைல் விலை மற்றும் மேலும் பல தகவல்களை விரைவில் எழுதுகிறேன்....
Xiaomi mi3 இனி முன் பதிவு செய்யாமல் வாங்கலாம், விரைவில் ஸ்டாக் வந்தவுடன் Flipkart தளத்தில் நேரடியாக வாங்கலாம். ஏற்கனவே இது வரை Mi3 வாங்கியவர்களில் சிலர் தங்கள் மொபைல் பழுதடைந்து இருந்ததாகவும், அதனை Flipkart நேரடியாக சர்வீஸ் செய்து தர எடுத்துக்கொள்ளாமல் கால தாமதம் செய்கிறது என கருத்து தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இன்னும் ஆறு மாதங்களில் மேலும் 35 சர்வீஸ் செண்டர்களை திறக்க இருப்பதாகவும், அதில் பெங்களூர், டெல்லி, குர்கான் (Gurgaon), மும்பை, புனே, ஹைத்ராபாத் போன்ற பெரிய நகரங்களில் இந்த சர்வீஸ் செண்டர் அமைக்கப்படும் என Mi India தலைவர் மனு ஜெய்ன் அறிவித்து இருக்கிறார். இதில் தமிழ்நாட்டில் மேலும் இரண்டு சர்வீஸ் செண்டர் உண்டாம். (ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் Xiaomi சர்வீஸ் செண்டர் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.)

Xiaomi Redmi 1S இன்றே விற்பனை தொடங்குகிறது. முதலில் பதிவு செய்த 2000 பேருக்கு இன்று மதியம் 2 மணிக்கு முயற்சி செய்தால் கிடைக்கும்.

WhatsApp ஆப்ஸ் Facebookடன் இணைந்து voice call ஆப்சன்ஸ் இணைத்து இருக்கிறார்கள். விரைவில் இந்த புதிய பதிப்பு விரைவில் வெளிவரும். இதை பற்றிய விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

XOLO நிறுவனம் Xolo Play 8X-1100 என்ற புதிய மொபைல் ஒன்றை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதன் விவர குறிப்புகள் சில...
1.7GHz octa-core Processor
Display: 5.00-inch
Rear Camera: 13-megapixel
Front Camera: 5-megapixel
Resolution: 720x1280 pixels
Internal memory: 16GB
RAM: 2GB
Android 4.4 Kitkat Updated
Battery capacity: 2100mAh
விலை: 14,999/- 

5. Samsung Galaxy Note 4 இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கிறது. இது பற்றி சில விஷயங்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது இது Sport 64-bit SoC மற்றும் Quad-HD Display 1440x2560 pixels திறன் கொண்டது. மேலும் இது 4GB of RAM மற்றும் இன்டெர்னல் மெமரி 16GB/ 32GB/ 64GB என மூன்று வகைகளில் இருக்கிறது. Camera: 16-megapixel மற்றும் Android Kitkat 4.4.3 மேம்படுத்தப்பட்டு வெளிவருகிறது, மேலும் Android L பதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம்.

தொழிநுட்ப செய்திகள் தொடரும்...

பதிவு பிடித்திருந்தால்
● Like
● Comment
● Share
● Tag செய்ய மறவாதீர்கள் நண்பர்களே.

இனி மொபைல்/கணினி பற்றிய உங்களுடைய எந்த சந்தேகங்களையும் கீழ்க்கண்ட நமது குழுமத்தில் மட்டும் கேளுங்கள், உடனடியாக பதில் கிடைக்கும்.
உடனே இணையுங்கள்:https://www.facebook.com/groups/ThagavalGuru/


DMCA.com Protection Status
குறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட