Home » , , , » Sony Xperia C3 விரைவில் வெளியீடு, படங்கள் மற்றும் முழுவிவரங்கள்.

Sony Xperia C3 விரைவில் வெளியீடு, படங்கள் மற்றும் முழுவிவரங்கள்.



வணக்கம் நண்பர்களே,

சோனி நிறுவனத்தின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள் விலை அதிகம் என்றாலும் நல்ல தரமாகவே இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதிலும் இன்று நாம் பார்க்க இருக்கிற ஸ்மார்ட்ஃபோன் மின்ட், கருப்பு, வெள்ளை என மூன்று நிறங்களில் விரைவில் கலக்க இருக்கிறது. சோனி நிறுவனத்தின் Xperia வரிசையில் விரைவில் வர இருக்கும் மொபைல்தான் Sony Xperia C3 மற்றும் Xperia C3 Dual Selfie (இரட்டை சிம் வசதி உடையது). இந்த மொபைலில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது மற்றும் விவரகுறிப்புகளை(Specifications) விவரமாக பார்க்கலாம். 




இந்த மொபைல் உலகின் தலைசிறந்த selfie ஸ்மார்ட்ஃபோன். இதில் பிளாஷ் வசதியோடு முன் பக்க காமிராவே 5 மெகா பிக்ஸல் (5MB) மற்றும் பின் பக்க காமிரா 8 மெகா பிக்ஸல்  இதன் மூலம் 10 பிரேம்கள் வரை எடுக்கலாம், மேலும் பல விதமான வேடிக்கையான படங்களும் (Fun Photos) எடுக்கலாம். இதன் திரை 5.5 அங்குலம் உடைய HD திரை அமைப்பை கொண்டது. மேலும் 4G/LTE வசதியும் இருக்கிறது. இந்த மொபைல் மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த Quad-core பிரசாசர் உடையது. மேலும் Adreno 305 GPU மற்றும் 1GB of RAM இருக்கு.

இந்த மொபைலில் எடுக்கப்பட படம்


இதன் இரட்டை சிம் வசதியில் இரண்டு அழைப்புகளையும் பெறலாம், எனவே நீங்கள் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் தவற விட தேவை இல்லை. அதோடு 4G இருப்பதால் இணைய வேகம் நல்ல வேகத்தில் இருக்கிறது.

இந்த போனில் ஃபோன் புக் மிகவும் எளிதாக கையாளும்படி அமைந்துள்ளது. மிக அழகாகவும் இருக்கிறது.  கால் லாக் எனப்படும் விடுபட்ட அழைப்புகள், வந்த அழைப்புகள், அழைத்த அழைப்புகள் என அனைத்து திரையும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்குலேட்டர் முதல் காலண்டர் வரை அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த போனில் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு இருப்பதால் அனைத்துமே அசத்தலாகவே இருக்கிறது.

இந்த மொபைல் சிறப்புகளை சோனி நிறுவனம் வீடியோவாக தந்து இருக்கிறது கீழே பாருங்க



இந்த மொபைல் இந்த மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கிறது, அதனால் இதன் விலை அதிகார பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் விலை விவரங்கள் இந்த பதிவில் இணைக்கப்படும்.


Sony Xperia C3 முழுமையான விவரகுறிப்புகள்: 

General
Release dateJuly 2014
Form factorTouchscreen
Dimensions (mm)156.00 x 78.50 x 7.60
Weight (g)150.00
Battery capacity (mAh)2500
Removable batteryNo
ColoursWhite, Black, Mint
SAR valueNA
Display
Screen size (inches)5.50
TouchscreenYes
Touchscreen typeCapacitive
Resolution720x1280 pixels
Hardware
Processor1.2GHz  quad-core
Processor makeQualcomm Snapdragon
RAM1GB
Internal storage8GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)32
Camera
Rear camera8-megapixel
FlashYes
Front camera5-megapixel
Software
Operating SystemAndroid 4.4
Java supportYes
Browser supports FlashNo
Connectivity
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/ g/ n
GPSYes
BluetoothYes, v 4.00
NFCYes
InfraredNo
DLNAYes
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMYes
USBMicro-USB
Charging via Micro-USBYes
Proprietary charging connectorNo
Proprietary data connectorNo
Number of SIMs1 (Dual SIM Mobile Also Available)
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GNo
Sensors
Compass/ MagnetometerNo
Proximity sensorYes
AccelerometerNo
Ambient light sensorYes
GyroscopeNo
BarometerNo
Temperature sensorNo

இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.


DMCA.com Protection Status
இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். 



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட