இந்தியாவில் ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் தளங்களில் பிரபலமானது Flipkart.com. இந்த தளத்தில் கிடைக்காத பொருள்களே இல்லை எனலாம். அதற்கு முக்கிய காரணம் இங்கே தயாரிப்புகள் ஒரிஜினல் பொருளாக இருக்கும், வாங்கிய பொருள் பழுதடைந்தால் மாற்றி வேறு ஒரு பொருள் வாங்கிக்கொள்ளலாம், மேலும் ஒரு வேலை வாங்கிய பொருள் நமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் திருப்பி அனுப்பிவிட்டு பணம் பெற்றுக்கொள்ளலாம். (நிபந்த்னைக்கு உட்பட்டது) பொருளை ஆர்டர் செய்து வீட்டில் பொருளை தந்ததும் பணம் கொடுக்கலாம். என பல வசதிகள் இருக்கிறது. இதை போன்ற வசதிகள் உள்ள மேலும் பல இருக்கிறது. உதாரணம்: amazon.in, shopclues.com, snapdeals.com, tradus.com, jabong.com மற்றும் பல.
Flipkart.com தளத்தில் MOTO G, மற்றும் MOTO E குறைந்த விலையில் அதிக சிறப்புகளுடன் வெவ்வேறு தேதிகளில் அறிமுகம் ஆகியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அதிகம் பேர் ஆர்டர் செய்ய தொடங்கியதால் பிலிப்கார்ட் நிறுவனத்தின் வலைத்தள சர்வர் திணறியது. ஒரே நாளில் அனைத்தும் விற்று தீர்ந்தது.
ஆனால் கடந்த 22ம் தேதி அன்று 'சியாவ்மி எம்ஐ3' (Xiaomi Mi3) என்ற சீனாவின் புதிய ரக ஸ்மார்ட்போன் பிலிப்கார்ட் தளத்தில் விற்ப்பனைக்கு வந்தது, விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் சர்வர் சில நிமிடங்களுக்கு செயலிலந்து போனது. ஃபிளிப்கார்ட்' டின் தகவல்படி, ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை, 1,00,000 போன்களை வாங்குவதற்காக இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெறும் 38 நிமிடம் 50 வினாடிகளில் அனைத்தும் விற்று தீர்ந்தது. (பார்க்க தமிழ் இந்து செய்தி) இது முந்தைய சாதனைகளை முறியடித்து இருக்கிறது.
இனி Xiaomi Mi3 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.
இது சைனாவில் உள்ள சியாவ்மி நிறுவனத்தின் தயாரிப்புதான். இதன் பிரசாசர் அதி நவீன 2.3 GHz Qualcomm Snapdragon 800 8274AB Quad Core Processor, 2GB RAM, 5 அங்குல எல்சிடி திரை, HD Recording, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மூலம் எடுத்த படங்கள் ரொம்ப நேர்த்தியாக அட்டகாசமாக இருக்கிறதாம். 2 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்ட் பதிப்பு என எல்லாவற்றிலும் அசத்தலாக வந்து இருக்கிறது. ஒரே ஒரு மைனஸ் Zenfone 5 போன்று பாட்டரியை வெளியில் எடுக்க முடியாது. மற்றபடி மிக அதிகமான சிறப்புகளை பெற்று இருக்கிறது. வெறும் 13999 விலைக்கு ரொம்பவே அதிகம்.
(கீழே படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்)
Xiaomi Mi3 விவர குறிப்புகள்:
GENERAL FEATURES | |
---|---|
In the Box | Handset, USB 2.0 Cable, User Guide, Charger |
Brand | Mi |
Model ID | Mi3 |
Form | Bar |
SIM Size | Mini SIM |
SIM Type | Single SIM, GSM |
Touch Screen | Yes |
Call Features | Loudspeaker |
Handset Color | Metallic Grey |
PLATFORM | |
---|---|
Operating Freq | GSM - 850, 900, 1800, 1900; WCDMA - 2100 |
OS | Android v4.4.2 (KitKat) |
Processor | 2.3 GHz Qualcomm Snapdragon 800 8274AB, Quad Core |
Graphics | Adreno 330 |
DISPLAY | |
---|---|
Type | LCD |
Size | 5 Inches |
Resolution | Full HD, 1920 x 1080 Pixels |
Other Display Features | IPS Display |
CAMERA | |
---|---|
Primary Camera | Yes, 13 Megapixel |
Secondary Camera | Yes, 2 Megapixel |
Flash | Dual LED |
Video Recording | Yes, 1920 x 1080 |
HD Recording | HD, Full HD |
Other Camera Features | Aperture f/2.2, Wide-angle 28 mm, CMOS |
DIMENSIONS | |
---|---|
Size | 73.6x144x8.1 mm |
Weight | 145 g |
BATTERY | |
---|---|
Type | Li-Ion, 3050 mAh |
MEMORY AND STORAGE | |
---|---|
Internal | 16 GB |
Memory | 2 GB RAM |
INTERNET & CONNECTIVITY | |
---|---|
Internet Features | |
Preinstalled Browser | Android |
GPRS | Yes |
EDGE | Yes |
3G | Yes, 42 Mbps HSPA+ |
Wifi | Yes |
USB Connectivity | Yes, micro USB, v2 |
Tethering | USB |
Navigation Technology | A-GPS, GLONASS, with Google Maps |
Bluetooth | Yes, v4, Supported Profiles (HID) |
Audio Jack | 3.5 mm |
MULTIMEDIA | |
---|---|
Music Player | Yes, Supports MP3 |
Video Player | Yes |
FM | Yes |
Sound Enhancement | Microphone Support, Dirac HD Audio Software |
OTHER FEATURES | |
---|---|
Call Memory | Yes |
SMS Memory | Yes |
Phone Book Memory | Yes |
Sensors | Light Sensor, Touch Sensor, Proximity Sensor, Gyroscope, eCompass, Barometer Sensor, Accelerometer |
Additional Features | Wi-Fi Display, Wi-Fi Direct, Haptic Feedback Support, USB On-the-go, Wi-Fi Tethering |
WARRANTY | |
---|---|
Warranty Summary | 1 year manufacturer warranty for Phone and 6 months warranty for in the box accessories |
இந்த மொபைலை பிலிப்கார்டில் எப்படி வாங்குவது.?
Xiaomi Mi3 ஸ்மார்ட்ஃபோன் வாங்க ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இப்போதே ரிஜிஸ்டர் செய்தால் 29 ஜூலை அன்று ஆர்டர் செய்யலாம் அல்லது மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
ஸ்டெப்1: இங்கே கிளிக் செய்யுங்கள். பிலிப்கார்ட் தளம் திறந்து இந்த மொபைல் பற்றிய விவரங்களை பார்வை இடலாம்.
ஸ்டெப்2: Flipkart தளத்தில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால் Login செய்துக்கொள்ளுங்கள், ஏற்கனவே கணக்கு இல்லாதவர்கள் மேலே வலது ஓரத்தில் உள்ள Signup கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல் இரண்டு முறை கொடுத்து Signup பொத்தானை அழுத்துங்கள்.
ஸ்டெப்3: லாகின் செய்த பிறகு மேலே படத்தில் உள்ளவாறு Go to MI store and register for our next sale. என இருக்கும் MI Store சுட்டியை கிளிக் செய்தால். flipkart - MI ரிஜிஸ்டர் பக்கம் செல்லும். அங்கே Register என்கிற சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் உடனே முன் பதிவு செய்யப்பட்டு கீழே உள்ளவாறு காண்பிக்கும். அதில் உள்ள தேதி மற்றும் நேரத்தை குறித்துக்கொள்ளுங்கள். (எனக்கு வந்த தேதி மற்றும் நேரம் கீழே தந்துள்ளேன்)
இனி எதிர் வரும் 29ம் குறுப்பிட்ட நேரம் வரும் முன்பே இங்கே கிளிக் செய்து Xiaomi Mi3 பக்கம் சென்று BUY NOW பொத்தானை அழுத்தி உங்கள் ஆர்டரை மேற்க்கொள்ளுங்கள்.
இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

[FB Page: https://www.facebook.com/thagavalguru1]
உங்களுக்கு ஏற்படும் கணினி/கைபேசி சம்பந்தப்பட்ட சந்தேககளுக்கு இங்கே கேளுங்கள்.

குறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க