Home » , , , , , , , » இந்த வார தொழில்நுட்ப செய்திகள்.

இந்த வார தொழில்நுட்ப செய்திகள்.வணக்கம் நண்பர்களே,

எனக்கு நேரம் கிடைக்கும் போது பல ஆங்கில தளங்களில் தொழில்நுட்ப செய்திகளை அறிந்துக்கொள்வேன்,  ஒரு சில விஷயங்களை மட்டும் இங்கே பதிவிட்டும் வந்தேன், இனி நான் அறிந்த தொழில்நுட்ப தகவல்களை உங்களுக்கும் அறிய தரலாம் என நினைத்தேன், அதன் விளைவுதான் இந்த பதிவு.
கூகிள் ஆண்ட்ராய்ட் 5 இந்த ஆண்டு இறுதியில் வெளிவர இருக்கிறது,   கூகிள் ஆண்ட்ராய்ட் 5 பெயர் லாலிபாப் (Lollipop) என தெரிகிறது, இதை தற்போது  Android "L" என அழைக்கிறார்கள். மாஸ்கோன், மேற்கு சான்ப்ரான்சிஸ்கோவில் கூகிள் நிறுவனத்தில் நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் Google I/O Developer Conferenceல்  இதை பற்றிய அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும். கூகிள் ஆண்ட்ராய்ட் டெவலப்பர் குழு தலைவர் திரு.சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்ட் 5 முன்னோட்டம் காண்பித்து அதை பற்றி விளக்குவார். இந்த ஆண்ட்ராய்ட் "L" பதிப்பு முதலில் கூகிளின் தயாரிப்பான Nexus 5 மற்றும் Nexus 7 (2013 வெளியீடு) மேம்படுத்தப்படும். இதன் சிறப்புகளை கீழே படத்தில் பாருங்கள். (படம் உதவி: Google.com)


*****

ட்விட்டர் நிறுவனம் கடந்த திங்கள் கிழமை (23.06.2014) அன்று தனது மேம்படுத்திய ஆண்ட்ராய்ட் அப்ப்ளிகேசனை வெளியீட்டது. இதில் WhatsApp Share பொத்தானை இணைத்து வெளியீட்டு இருக்கிறது.  இந்த ஷேர் பொத்தான் ட்வீட் விண்டோக்கு கீழே உள்ளது. சில இடங்களில் மேலே வலது பக்கமாகவும் வரும்.

WhatsApp நிறுவனம் 500 மில்லியன் பயனர்கள் செயலில் (Active users) இருப்பதால் அதன் பயனர்களை கவரவே ட்விட்டர் இந்த வசதியை பயனர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ட்விட்டர் ஆப்ஸ் மூலம் Gmail, BBM, Facebook, Google+, Facebook Messenger, மற்றும் Skype போன்றவைகளுக்கும் ட்வீட்களை பகிர முடியும். ட்விட்டர் இதை சோதனை ஓட்டம் என அறிவித்து உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பை தரவிறக்க கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். (நன்றி படம்: thenextweb)

தரவிறக்க சுட்டி: https://play.google.com/store/apps/details?id=com.twitter.android&hl=en

*****


பேஸ்புக் நிறுவனம் நாளுக்கு நாள் புதிய புதிய சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்துக்கொண்டுதான் உள்ளது, இன்று முகநூல் சமூக வலைத்தளங்களில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்டு உள்ளது. இதற்கான காரணம் புதிய புதிய வசதிகளை ஏற்படுத்தி பயனர்களை மகிழ்விப்பதுதான். இந்த வரிசையில் அடுத்த புதிய வசதி என்ன தெரியுமா? இனி முகநூலில் பாஸ்வோர்ட்க்கு பதில் உங்கள் நண்பர்களின் ப்ரோஃபைல் படத்தை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதுதான். இது இப்போது டெவலப்பர் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் குழு தலைவர் Dr. Rob Jenkins என்பவர்தான். இவர் நியூயார்க் யுனிவர்சிட்டியில் படித்தவர்.  இது பற்றிய முழுமையான பதிவு விரைவில் உங்களுக்காக எழுதுவேன். (நன்றி: படம் Rob Jenkins)

*****NOKIA X2 மொபைல் வெளியிடப்பட்டது. இந்த மொபைல் பல புதிய அம்சங்களுடன் 1GB RAM மற்றும் இரட்டை சிம், 4GB உள் நினைவகத்துடன் வெளிவந்து உள்ளது. இந்த NOKIA X2 மொபைல்  பற்றிய முழுமையான விவரம் நாளை மாலை நமது தளத்தில் காணலாம்.  இப்ப இதன் வீடியோ மற்றும் விவர குறிப்பை பார்க்கலாம்‌.


ஒரு சில விவர குறிப்புகள். 

Display: 4.30-inch
Processor: 1.2GHz
Front Camera: Yes
Resolution: 480x800 pixels
RAM: 1GB
Storage: 4GB
Rear Camera: 5-Mega pixel
Battery capacity: 1800mAh

*****Sony Xperia M2 Dual NOKIA X2 மொபைல் வெளியிடப்பட்டது, சோனி நிறுவனம் மொபைல்களுக்கு நிகர் ஏது? அந்த வரிசையில் இந்த மொபைலும் பல சிறப்பியல்புகளை பெற்றுள்ளது. இந்த Sony Xperia M2 Dual பற்றிய விரிவான தகவல்களை விரைவில் எழுதுகிறேன்.

விவர குறிப்புகள்:

Display

4.80-inch

Processor

1.2GHz

Front Camera

0.3-megapixel

Resolution

540x960 pixels

RAM

1GB

OS

Android 4.3

Storage

8GB

Rear Camera

8-megapixel

Battery capacity

2300mAh
மீண்டும் பல தொழில்நுட்ப செய்திகளை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


நண்பர்களே தொழில்நுட்ப பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முக நூல் அல்லது ப்ளாகர் மூலம் கமாண்ட்ஸ் செய்யுங்கள். 


DMCA.com Protection Status

இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். 

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட