கேள்வி: என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா?.
பதில்: கண்டிப்பாக முடியும், ஆனால் எல்லா வகையான மொபைகளுக்கும் சைலன்ட் மோடில் ரிங் கொடுப்பது சாத்தியமாகாது. ஆண்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்திலும் இந்த வசதி இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல்கள், சாம்சங் மொபைல்கள் காணாமல் போனாலும் எளிதாக கண்டுப்பிடிக்கலாம்.
ஆண்ட்ராய்ட் மொபைல்கள் வைத்திருப்பவர்கள், கூகிள் பிளேயில் ஒரு ஜிமெயில் ஐடி (GMail Account) கொடுத்து வைத்து இருப்பீங்க, இப்ப உங்கள் மொபைலில் Settings சென்று அதில் அதில் Android Device Manager செட்டிங்ஸ்ல் படத்தில் இருப்பது போல டிக் செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ள கூகுளின் Android Device Manager சுட்டியை கிளிக் செய்யுங்கள். இது கூகிள் Android Device Manager தளம், அடுத்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்க்காக ஜிமெயில் ஐடி கொடுத்து அதற்க்கான பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்தால் படம்-2 உள்ளது போல வரும். அதில் உள்ள Ring என்ற லிங்க் கிளிக் செய்தால் உங்கள் போன் சைலண்டில் இருந்தாலும் அதிக பட்ச வேகத்தில் ரிங்டோன் ஒலிக்கும்.
Link: https://www.google.com/android/devicemanager

படம்-2
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.
Link: https://www.google.com/android/devicemanager
இதில் மேலும் சில வசதிகள்: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் எங்கே இருக்கிறது, கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது. மொபைலை lock செய்யலாம், ஒரு வேலை காணாமல் போன உங்கள் மொபைலில் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய டேட்டாகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கடவுச்சொல்கள் இருந்தால் படத்தில் உள்ளது போல Erase பொத்தானை அழுத்தி மொபைலை ஃபேக்டரி ரிசெட் செய்யலாம். இதற்க்கெல்லாம் உங்கள் மொபைல் அருகில் இருக்கவேண்டிய அவசியமே தேவை இல்லை.
அடுத்து சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் சாம்சங் நிறுவனம் தந்துள்ள "Find My Mobile" முறையிலும் செய்யலாம். முதலில் உங்கள் மொபைலில் கீழ்க்கண்ட செட்டிங்ஸ் அனைத்தும் முறையாக செய்யுங்கள், பெரும்பாலும் உங்களிடம் சாம்சங் ஐடி இருக்கும். சாம்சங் ஐடி இல்லாதவர்கள் இங்கே சொடுக்கி உருவாக்கி கொள்ளுங்கள்.
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.
இப்போது உங்கள் மொபைலை கணினி மூலம் கட்டுப்படுத்த தயார் ஆகிவிட்டது, இப்போது இனி தேவைப்படும் போது கணினியில் இருந்து எப்படி ரிங் கொடுப்பது, டிராக் செய்வது என பார்க்கலாம்.
http://findmymobile.samsung.com/login.do
மேலே உள்ள சுட்டியை சொடுக்கினால் சாம்சங் "Find My Mobile" பக்கம் வரும், அதில் இடது பக்கம் உள்ள Sing in Samsung accont ungal ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
இப்போது டிராக் செய்யலாம், மொபைலை லாக் செய்யலாம், ரிங் கொடுக்கலாம், கால் அழைப்பு விவரங்களை பார்க்கலாம், ஃபேக்டரி ரிசெட் செய்யலாம், மொபைல் ஸ்லைட் அல்லது பாட்டன் லாக்கில் இருந்தால் அன்லாக் செய்யலாம். உதவி விவரங்களை பார்க்கலாம். பல விஷயங்கள் இதில் இருக்கு சாம்சங் மொபைல் வைத்து இருப்பவர்கள் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் ஆனால் கவனமாக இருங்கள்.
தொலைந்த ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்க பல டிப்ஸ் தகவல்குரு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
DECEMBER 2015:
WhatsApp Tips Tricks
Android Mobile Tips Tricks
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை
ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு
பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக்
செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப
தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.