Home » , , , , , , » உலக கோப்பை கால்பந்து போட்டி 4K தரத்தில் BBCயில் நேரடி.

உலக கோப்பை கால்பந்து போட்டி 4K தரத்தில் BBCயில் நேரடி.



வணக்கம் நண்பர்களே,

இதோ இன்னும் சில மணி நேரங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரசிலில் தொடங்க இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்ததாக உலகின் 2–வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 

உலக கோப்பை கால்பந்து போட்டி
1930 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2010–ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த வருடம் என்ன ஒரு விஷேசம் என்றால் இந்த போட்டியை 4K காணொளி தரத்தில் BBC நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை HDயில் மட்டுமே காணொளிகளை பார்த்த நாம் இந்த உலக கோப்பையில் 4K தரத்தில் பார்க்க இருக்கிறோம். 

அது என்ன 4K அப்படி என்ன விஷேசம் இருக்கிறது?



காணொளி வகை (Video Type)
ரெசொலுசான் (Resolution)
VCD
352×288 Pixels
DVD
720×576 pixels
HD (720p)
1280×720 pixels
Full HD (1080p)
1920×1080 pixels
4K Ultra UD (2160p)
3840 × 2160 Pixels
6K Ultra UD (2304p)
4096 × 2304 Pixels

ஒரு யூடியுப் வீடியோவில் எடுத்த படத்தை கீழே தந்துள்ளேன், அதில் செட்டிங்ஸ் ஐகான் பகுதியில் கிளிக் செய்து காணொளி தரத்தை தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம் 3G இணைப்பு இருந்தால் 4K செலக்ட் செய்து வீடியோவை பாருங்கள். நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் அனுபவம் தரும், 



கீழ் கண்ட தளங்களில் இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரடியாக காணலாம், BBC லைவ் ஸ்ட்ரீமில் 4K தரத்தில் பார்க்கலாம். 




http://www.youtube.com/user/FIFATV

ஆண்ட்ராய்ட்/ஐபோன்/ஐபாட் வைத்து இருப்பவர்கள் கீழே தந்துள்ள ஆப்ஸ் மூலம் போட்டிகளை காணலாம்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பிரிவில் உள்ள பிரேசில்குரோஷியா அணிகள் மோதுகின்றன.

மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கலாம். வரும் பதிவுகளில் ஒவ்வொரு வாரமும் அந்த வராத்தில் நடந்த தொழில்நுட்ப நிகழ்வுகளை தொழில்நுட்ப செய்தியாக தரலாம் என நினைக்கிறேன். சந்திப்போம். 

நன்றி: ஆங்கில தகவல்: http://www.bbc.com/news/technology-27713243

நண்பர்களே எங்கள் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முக நூல் அல்லது ப்ளாகர் மூலம் பின்னூட்டம் கொடுங்கள். 

DMCA.com Protection Status
இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். 



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட