Home » , , , , , » ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் புதிய பதிப்பு வெளிவந்தது. சிறப்பம்சங்கள் என்ன?

ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் புதிய பதிப்பு வெளிவந்தது. சிறப்பம்சங்கள் என்ன?





ஆன்ட்ராய்ட் என்பது மொபைல், டேப்லேட், கணினி, குரோம்காஸ்ட், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி போன்றவைகளுக்கான ஒரு வகையான இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்னல் (Linux Kernel) கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. எனவே இது இயக்க முறைமை என்றும் சொல்லலாம் (Operating System). இதில் சில மாற்றங்களை செய்து கூகிள் நிறுவனம் வெளியிட்டது. இதை லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதால் பாதுகாப்பு தன்மை அதிகம். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் (root) செய்யாத வரை ஆண்டி-வைரஸ் போன்ற மென்பொருள்கள் எதையும் தனியாக நிறுவ தேவை இல்லை என்பதை முன்பே பதிவுகளில் பார்த்தோம். 


இந்த ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அவ்வப்போது கூகிள் மேம்படுத்தி வெளியீட்டுக்கொண்டுள்ளது. இதன் விவரங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளை பார்க்காதவர்கள் இடது பக்கம் உள்ள படத்தை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சென்ற வருடம் நவம்பர் முதல் தேதி ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு வெளியானது. இது Nexus 5 மொபைலில்தான் முதல் முறையாக வெளியானது. உலகெங்கும் பலர் ஆர்வமுடன் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பை மேம்படுத்தினார்கள். 





இப்போது ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் பதிப்பு ஜூன் 3 தேதி வெளிவந்தது. இதுவரை ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பை பயன்படுத்தியவர்கள் இனி ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் பதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த வாரம் ஆரம்பத்தில் Google Nexus 5, Nexus 7, Nexus 4 மொபைல்களில் இந்த புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்கள், தற்போது Motorola நிறுவனத்தின் MOTO G, MOTO X மற்றும் MOTO E மொபைலிலும் மேம்படுத்தும் அறிவிப்பு வர தொடங்கியுள்ளது. விரைவில் மற்ற மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் மேம்படுத்துவது பற்றி அறிவுறுத்துவார்கள். அதுபற்றிய தகவல்களை அவ்வப்போது நமது தளத்தில் அறிந்துக்கொள்ளலாம். இன்று Motorola நிறுவனத்தின் MOTO G மொபைல்களுக்கு வந்த அறிவிப்பை இடது பக்கம் பாருங்கள்.  இதில் கீழே உள்ள Yes அழுத்தி மேம்படுத்திக்கொள்ளலாம். மேலும் MOTO X, மற்றும் MOTO E மொபைல் வைத்திருப்பவர்களும் புதிய பதிப்புக்கு மேம்பாடுத்திக்கொள்ளலாம். 

ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் சிறப்பம்சங்கள் என்ன?



    இதற்க்கு முன்பு வந்த பதிப்பில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகளை நீக்கி இருக்கிறார்கள். 

    உங்கள் மொபைலை எளிதாக, மென்மையாக(smoothu touch) கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

    பட்டரி திறனை மேம்படுத்தி இருக்கிறார்கள், இதனால் பட்டரி சேமிப்பு கூடுதலாக இருக்கும்.
    இந்த பதிப்பில் டயலர் (dialer) சிறப்பாக இருக்கு எளிதில் கையாளும்படி இருக்கிறது. ஃபோன் செய்யும் போது பெயர் மற்றும் ஃபோட்டோவுடன் அழகாக உள்ளது.   கண்டிப்பா உங்கள் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். (மேலே படம் இணைத்துள்ளேன்) 
    காணொளிகளை ரெகார்ட் செய்யும் போது நிறுத்தி பின் தொடரும் வசதி உள்ளது. 
    தொடர்பு ஆப்ஸ் (Contacts) சற்று மேம்படுத்தி இருக்கிறார்கள். 
    மொத்தத்தில் பெரும்பாலான முந்தய பதிப்புகளில் உள்ள பிரச்சனைகளை களைந்து இருக்கிறார்கள் மேலும் சில புதிய மாற்றங்களோடு ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் பதிப்பு வெளிவந்துள்ளது. 
    விரைவில் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் பதிப்பு மேம்படுத்தப்படும் மற்ற மொபைல்களை பற்றியும் எழுதுகிறேன்.  


    நண்பர்களே எங்கள் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்தால் போதுமானது. உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பாக்கிறோம். கண்டிப்பா உங்கள் கருத்துக்களை கீழே முக நூல் அல்லது ப்ளாகர் மூலம் பின்னூட்டம் கொடுங்கள். 

    DMCA.com Protection Status
    இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எம் தளத்திற்க்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் பதிவிட்டால் முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். 


    இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
    subscribe

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

    பதிவுகளை தேட