சோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் அண்மையில் வெளிவந்தது. பொதுவாக சோனி நிறுவனத்தின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள் விலை அதிகம் என்றாலும் நல்ல தரமாகவே இருக்கும். நாம் போகும் வழியில் மழை வந்தால் முதலில் நம் மொபைல் போனைதான் பாதுக்காக்க நினைப்போம், ஆனால் இது போன்ற போன்களில் அந்த கவலை இல்லை. இந்த போன் தண்ணீரில் தவறி விழுந்தால் கூட கவலைபட தேவை இல்லை. மேலும் இந்த போன்களை தண்ணீரில் விட்டு கழுவலாம். எனவே விலைக்கு தகுந்த தரம் இருக்கவே செய்கிறது. இப்போது இந்த Sony Xperia Z2 என்ன என்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இந்த டேப்லெட் 5.2 அங்குலம் உயரம் கொண்டது, 1080x1920 பிக்சல்களை உடையது, 439 கிராம் எடை கொண்டது. இதன் திரை எல்.இ.டி அமைப்பில் இருக்கிறது. பெரும்பாலான சாம்சங் கேலக்ஸி எஸ்5 திறனை கொண்டுள்ளது. இதன் இயக்க முறைமை ஆண்ட்ராய்ட் அண்மைய பதிப்பான ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பைக்கொண்டது. டச் ஸ்கிரீன் உபயோகப்படுத்த மிகவும் நன்றாகவே இருக்கிறது. 3G, மற்றும் 4G தொழில்நுட்பங்கள் உள்ளது.
மேலும் இந்த போனில் பிரசாசர் மற்றும் நிணவகத்தை பார்க்கும் போது அண்மைய தலைமுறை தொழில்நுட்பமான ஸ்நாப்ட்ராகன் 801 MSM8974-AB quad-core 2.3 GHz பிரசாசர் என இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனிலும் இருக்கிறது. இதனால் கிராபிக்ஸ் பார்க்க மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த போனில் ஃபோன் புக் மிகவும் எளிதாக கையாளும்படி அமைந்துள்ளது. மிக அழகாகவும் இருக்கிறது. கால் லாக் எனப்படும் விடுபட்ட அழைப்புகள், வந்த அழைப்புகள், அழைத்த அழைப்புங்கள் திரையும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கால்குலேட்டர் முதல் காலண்டர் வரை அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்காட் பதிப்பு இருப்பதால் அனைத்துமே நேர்த்தியாகவே இருக்கிறது.
இதில் க்வார்டி கீபோர்ட் இருக்கிறது, இது ஐபோன் கீபோர்ட் அமைப்பில் இருக்கிறது. இதன் செயல்திறனும் சிறப்பாகவே இருக்கிறது. பயன்படுத்த எளிதாகவும் அமைந்து உள்ளது.
இந்த டேப்லெட்டில் இணைய வேகம் நல்ல வேகத்தில் இருக்கிறது. சோனி மொபைல்களை பொறுத்தவரை கூகிள் குரோம் உலாவி பயன்படுத்துபவர்களே அதிகம், இதிலும் கூகிள் குரோம் மிக வேகமாகவே இயங்குகிறது.
இந்த Sony Xperia Z2 சிறப்பம்சமே இதன் காமிராதான். இந்த டெப்லெட்டில் இரண்டு காமிராக்கள் உள்ளது. பின் புறம் உள்ள காமிரா 20.7 மெகா பிக்சல்கள் உள்ள G லென்ஸ் காமிரா. படங்கள் நேரில் பார்ப்பது போல ரொம்ப தத்துருபமாக இருக்கிறது. படத்தை கிளிக் பாருங்கள். முன்புற 2.2 மெகா பிக்சல்களை கொண்டது.
இந்த டேப்லெட் விலை இந்திய் மதிப்பில். Rs.48990/=
இதனை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
Sony Xperia Z2 முழு விவரங்கள் (Specifications):
DESIGN
INTERNET BROWSING
TECHNOLOGY
CONNECTIVITY
OTHER FEATURES
படங்கள் நன்றி: phonearena.com
இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு லைக் பண்ணுங்க, மறக்காமல் உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு மிக்க நன்றி!!!.