
கேள்வி: மோட்டோரோலா மொபைல்களை தமிழ்நாட்டில் எங்கே வாங்குவது.
பதில்: அண்மையில் வந்த MOTO மொபைல்கள் மொபைல் டீலர்களிடம் இன்னும் வரவில்லை. மோட்டோரோலா நிறுவனம் தன் தயாரிப்பான MOTO X, MOTO G, MOTO E போன்ற மொபைல்களை ஆரம்பத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலமே விற்று வருகிறது. இந்தியாவில் பிரபலமான http://www.flipkart. com/ தளத்தில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதால் இந்தியா மொபைல் சந்தையை பிடித்துள்ளது. விரைவில் மற்ற மொபைல் டீலர்கள் மூலம் விற்பனைக்கு வரும். இதில் MOTO E விற்பனை தொடங்கிய சில நாட்களில் அனைத்து மொபைகளும் விற்று தீர்ந்து விட்டது. விரைவில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது ஆனால் விலை சற்று அதிகம்.
**********
கேள்வி: NOKIA நிறுவனத்தின் NOKIA XL வாங்கலாமா? குறை நிறைகளை சொல்லுங்கள்.
பதில்: NOKIA XL மொபைலில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும். குறைபாடுகளும் இருக்கவே செய்கிறது.
வீடியோ படங்களை பார்த்தால் தெளிவில்லாமல் இருக்கிறது, 480 பிக்ஸல் குறைவான படங்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த மொபைலில் வாட்ஸ்அப் இயங்கவில்லை. கேமாரா ஓரளவுக்கு நல்லா இருக்கு.
மேற்க்கண்ட விஷயங்கள் உங்களுக்கு பெரிதாக பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் தாராளமா வாங்கலாம்.
என் தேர்வு: MOTO E அல்லது Samsung Galaxy S Duos 2 GT-S7582, Samsung Galaxy Grand, MOTO G போன்ற மொபைகளை வாங்கலாம். இந்த NOKIA XL மொபைலை வாங்கி பயன்படுத்தும் நண்பர்களும் தங்கள் கருத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.
**********