வீட்டிலும் அலுவலகத்திலும் கணினி பயன்படுத்தியவர்களுக்கு CCleaner பயன்பாடு பற்றி நான் சொல்லவே தேவையில்லை, கணினியில் அன்றாடம் தேங்குகின்ற தேவை இல்லாத குப்பைகளை அதாவது தற்காலிக நினைவகங்களை அழித்து கணினியின் வேகத்தை சில வினாடிகளில் அதிகரிக்கும் ஒரு இன்றியமையாத மென்பொருள். உலகம் முழுவதும் பெரும்பான்மையான கணினிகளில் CCleaner இருக்கிறது. இதற்கு காரணம் CCleaner வந்த பிறகும் வருவதற்கு முன்பும் இதை போன்ற பல மென்பொருள்கள் வந்திருந்தாலும் CCleaner போல விரைவாக செயப்பட்டதில்லை,மேலும் CCleaner இலவச மென்பொருள். CCleaner வந்ததிலிருந்து அனைவரும் இதைதான் உபயோகப்படுத்துகிறார்கள்.
இப்போது முதல் முறையாக ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு CCleaner ஆப்ஸ் வந்துள்ளது. இது பீட்டா பதிப்பாகதான் வந்துள்ளது, இன்று நான் தரவிறக்கி பயன்படுத்தினேன், ஜங்க் போன்ற தேவையற்ற தற்காலிக நினைவகங்களை நீக்கி ஆண்ட்ராய்ட் ஃபோனை மிக வேகமாக இயங்க வழிவகுக்கிறது. மேலும் இதில் நாமே ஆப்ஸ்களை தேர்ந்தெடுத்து அதில் உள்ள தேவையற்ற நினைவகத்தை கிளியர் செய்யும் வழியும் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் பதிப்பு முதல் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் 4.4.1 கிட்காட் பதிப்பு வரை அனைத்து மொபைல்களிலும் இயங்கும் விதத்தில் உள்ளது.
இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைல்களில் KS Mobile வழங்கும் Clean Master - Free Optimizer தான் அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள், இனி CCleaner பயன்படுத்தலாம், மேலும் CCleaner ஆப்ஸ் 1 MB அளவே இருப்பது ரொம்ப வசதியாக இருக்கிறது.
நீங்க விருப்பப்பட்டால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைகளில் தரவிறக்கி பயன்படுத்தி பார்த்த்விட்டு கீழே பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
இதனை நேரடியாக கூகிள் பிளேயில் தரவிறக்க முடியாது. CCleaner for Android தரவிறக்க இங்கே கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு CCleaner கூகிள்+ பக்கம் கிடைக்கும் அதில் படத்தில் உள்ளவாறு வலது புறத்தில் BECOME A TESTER என்ற சுட்டி தெரியும், அதை கிளிக் செய்தால் உங்களிடம் CCleaner டெஸ்ட் செய்து பார்க்கிறீர்களா என கேக்கும் ஆம் கிளிக் செய்தால் கூகிள் பிளே சென்று வழக்கம் போல தரவிறக்கிக்கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் இந்த ஆப்ஸ் பற்றி என்னுடைய முழுமையான கருத்தை Piriform நிறுவனத்துக்கு (Feedback) அளிக்க இருக்கிறேன்.
இதில் மேலும் எதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள், உடன் நாங்கள் பதில் அளிப்போம்.
பதிவுகளை தவறாமல் படிக்க எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு லைக் செய்தால் போதுமானது, மேலும் அன்றாட பதிவுகளை மின்னஞ்சலிலும் பெறலாம். நமது முகநூல் குருப் தமிழ் கதம்பம் குளுமத்தில் தினம்தோறும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் பகிரப்படும்.
குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெற்றது, நகல் எடுப்பவர்கள் tamiltechguru.blogspot.in தளத்துக்கு அவசியம் நன்றி தெரிவிக்க வேண்டும்.