Home » , , , , , , , , , » கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி.

கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி.




இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தினம் தினம் ஏதேனும் அறிமுகம் ஆகிக்கொண்டுதான் உள்ளது, நாமும் அதை பிடித்துக்கொண்டு முன்னேறிதான் வருகிறோம். இணையம் வந்தபிறகு இன்று எத்தனை எத்தனை மாற்றங்கள், சில வினாடிகள் இணையம் நின்று போனால் கூட உலகமே ஸ்தம்பித்து விடும். இந்த இணைய பரிமாணங்களின் வளர்ச்சியில் இன்று நாம் எட்டி இருப்பது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி. இது வரை இணையம் இல்லாமல் தொலைகாட்சி பார்த்தோம், நமக்கு விருப்பமான படங்களை டி‌வி‌டி மூலம் பார்த்தோம். பிறகு Chromecast என்ற HDMI Dongle சாதனத்தின் மூலம் இணையம் மூலம் தொலைகாட்சி வந்தது. இந்த HDMI Dongle இந்தியா வரும் முன்பே கூகிள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி வெளி வர இருக்கிறது. 


பொதுவாக இது போன்ற இணைய வழி தொலைகாட்சி சாதனத்தை ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தந்திருந்தாலும், கூகிள் தந்திருப்பது அதைப் போன்ற பல மடங்கு வசதிகளுடன் மிக மிக குறைந்த விலையில். ஆம் வெறும் 35 அமரிக்கன் டாலர்தான். தற்போது இந்த கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி செய்தி வருவதற்க்கு சில நாட்கள் முன்பு அமேசான் நிறுவனம் தனது தயாரிப்பான Fire TV என்ற சாதனத்தை பற்றிய செய்தியை வெளியீட்டது. இதன் விலை 99 அமரிக்கன் டாலர்கள். 


கூகிள் Chromecast பற்றி இப்போது பார்க்கலாம். இதில் iOS மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்/டேப்லெட் /மடி கணினி மூலம் டிவியில் படங்கள் பார்க்கலாம். இதன் விலை வெறும் 35 அமரிக்கன் டாலர்தான். அதிக வசதிகளோடு குறைந்த விலையில் இந்த சாதனம் கிடைப்பதால், வெளியீட்ட இரண்டே நாட்களில் அனைத்தும் விற்று தீர்ந்தது. 

சரி Chromecast மூலம் நம் டிவியில் எப்படி இணையம்‌ மூலம் படம் பார்க்கலாம்?

முதலில் USB வடிவில் உள்ள இந்த சாதனத்தை டிவியில் உள்ள "HDMI port"ல் இணைத்து பின் மெனுவாலில் உள்ளவாறு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட் அல்லது லேப்டாப் மூலம் மிக எளிதாக இன்ஸ்டால் செய்து விடலாம். மேலும் இதை பயன்படுத்த இணைய இணைப்பு உள்ள வைஃபை இருத்தல் வேண்டும். 

இந்த சாதனத்தின் மூலம் நம்மால் Youtube, Hulu, Netflix, Pandora போன்ற வீடியோ தளங்களில் உள்ள காணொளிகளை டிவியில் பார்த்து ரசிக்கலாம். கீழே உள்ள காணொளியை பாருங்கள்.  


Chromecast சாதனம் காணொளியை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நம் மடி கணினி / ஸ்மார்ட் ஃபோன் தேவை. படம் தெரிய ஆரம்பித்து விட்டால் நாம் பார்க்க துவங்கிய காணொளியின் சுட்டி அந்த சாதனத்தில் சேமிக்கப்படும். இதன் பிறகு நம் போனை ஆஃப் செய்தால் கூட தொலைக்காட்சியில் காணொளி தொடர்ந்து Wifi உதவியுடன் ஓடிக்கொண்டு இருக்கும். எனவே இதை தொடர்ந்து ஓடவிட்டால் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்/டேப்லெட்/மடி கணினியில் பேட்டரி தீர்ந்து விடுமே என்று கவலைப்பட தேவையில்லை.


இப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டி‌வி வெளி வர இருக்கிறது, இதில் முன்பு இருந்த குரோம்கேஸ்ட்டை விட அதிக வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேம்ஸ் மற்றும் ஆப்ஸ்களையும் இனி விளையாடி ரசிக்கலாம். பேஸ்புக் முதல் தினசரி செய்திகள் வரை அனைத்தையும் இனி நாம் விரும்பியவாறு பார்க்கலாம். வீடியோ தளங்களில் உள்ள காணொளியை பார்க்கலாம். 


இதை பற்றிய மேலும் விரிவான பதிவை விரைவில் எழுதுகிறேன்.  

நன்றி படங்கள்: THEVERGE.COM & TECHCRUNCH.COM

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி!!!. 

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட