Home » , , , , , , , , » உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பாட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?

ஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருக்கிறது. அதற்கு தகுந்த காரணங்களும் இருக்காதான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பற்பல ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. அதனால் தினம் இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. 

இந்த பாட்டாரி பிரச்சனையை தீர்க்க என பற்பல ஆப்ஸ்கள் கூகிள் பிளேயில் தினம் தினம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் பிரபலமான ஆப்பிளிகேசன் எது என்று பார்த்தால் பாட்டரி டாக்டர் Battery Doctor (Battery Saver). 

Battery Doctor (Battery Saver)

KS Mobile நிறுவனத்தின் பிரபலமான ஆப்ஸ் இது. இந்த ஆப்பிளிகேசனை உங்கள் மொபைலில் நிறுவினால் நல்ல பாட்டரி சேமிப்பு கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் பாட்டரியை மூன்று அடுக்கு முறையில் சார்ஜ் செய்கிறது. மேலும் இதன் சிறப்புயல்புகள் என்று பார்த்தால் இந்த அப்ளிகேஷன் மின்சாரத்தை மேலாண்மை செய்கிறது, அதாவது பாட்டரி முழுவதுமாக சேமித்த பின் மொபைலில் உள்ள ஆப்ஸ்கள்  தேவைக்கு ஏற்ப மின்சாரம் தருகிறது, அதனால் நமக்கு இரண்டு மடங்கு பாட்டரி நீட்டிப்பு கிடைக்கிறது. மொபைலில் நாம் பல ஆப்ஸ்களை பயன்படுத்துவோம், அவைகளில் மேம்படுத்துதல் (optimization) முறையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.

இந்த பாட்டரி டாக்டர் ஆப்பிளிகேசனை ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

டிஸ்கி: KS Mobile நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஆப்ஸ் கிளீன் மாஸ்டர் (Clean Master). இது ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வழிவகை செய்யக்கூடிய ஆப்ஸ். இந்த ஆப்ஸ் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். 


அல்லது Google Play Storeல் தரவிறக்க


பாட்டரி சேமிக்க மேலும் சில ஆப்ஸ்: 

2. DU Battery Saver & Widgets 

இது Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் குறைத்து மதிப்பிட முடியாது.  இதை உலகில் மில்லியன் கணக்கில் பயன்படுத்துக்கிறார்கள். இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

தரவிறக்க: Play.google.com


3. Easy Battery Saver

இதுவும் Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் உலகெங்கும் 8 லக்சம் பேருக்கு மேல் பயன்படுத்துக்கிறார்கள். இது ஆப்ஸ் கொள்ளளவும் ரொம்ப கம்மி. தரவரிசையில் 4.6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

தரவிறக்க: Play.google.com


இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு நன்றி!!!. 


பதிவுகளை தவறாமல் படிக்க எங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு லைக் செய்தால் போதுமானது, மேலும் அன்றாட பதிவுகளை மின்னஞ்சலிலும் பெறலாம்.  நமது முகநூல் குருப் தமிழ் கதம்பம் குழுமத்தில் தினம்தோறும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் பகிரப்படும். 

குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெற்றது, நகல் எடுப்பவர்கள் tamiltechguru.blogspot.in தளத்துக்கு அவசியம் நன்றி தெரிவிக்க வேண்டும்.  
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட