Home » , , , , , , » கணினி மூலம் உங்கள் மொபைலை இயக்குவது எப்படி?

கணினி மூலம் உங்கள் மொபைலை இயக்குவது எப்படி?


சென்ற வாரம் உங்கள் ஆண்ட்ராய்ட்/ஐஒஸ் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி? என்பதை பார்த்தோம் அல்லவா, இந்த வாரம் கணினி மூலம் ஆண்ட்ராய்ட்/ஐஒஸ்/ஐபாட்/டேப்லெட்/விண்டோஸ் மொபைலை இயக்குவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த மென்பொருளும் பிரபல டீம்வீவர் நிறுவனத்தின் அப்ளிகேஷன்தான்.  கணினியை பொறுத்தவரை ஒரே டீம்வீவர் மென்பொருளில் இரண்டு வகையிலும் பயன்ப்படுத்தமுடியும். அதாவது ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினி/மொபைல்/டேப்லெட் போன்றவற்றை தொடர்பு ஏற்ப்படுத்த முடியும் ஆனால் மொபைலை பொறுத்தவரை இரண்டு மூன்று வகையான அப்ளிகேஷன்கள் இருக்கிறது.

1. டீம்விவர் ரிமோட் பார் கண்ட்ரோல் (TeamViewer for Remote Contro) 

இந்த ஆப்ஸ் மொபைலில் இருந்துக்கொண்டு கணினியை இயக்குவது பற்றியது. சென்ற வாரம் நாம் இதைதான் விரிவாக பார்த்தோம். இந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்.

2. டீம்விவர் மீட்டிங் (TeamViewer Meeting)

இந்த ஆப்ஸ் மூலம் இரண்டுக்கும் மேற்பட்டவர்களோடு ஒன்று சேர்ந்து குறுப்பிட்ட பிரச்சனைகளை கையாள, இணயத்தில் உரையாட/அடுத்தவர்களுக்கு உதவ என பல வகைகளில் பயன்படுகிறது.


2. டீம்விவர் க்விக்-சப்போர்ட் (TeamViewer QuickSupport)

இந்த ஆப்ஸ் கணினியில் இருந்து மொபைலை தொடர்பு ஏற்படுத்தி மொபைல் போனை இயக்குவது பற்றியது. இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்ட்/ஐஒஸ்/ஐபாட்/ஐபோன்/விண்டோஸ் ஃபோன் என எல்லாவற்றுக்கும் தனித்தனியாக கிடைக்கிறது. உங்கள் மொபைல் ஃபோன் சாம்சங் என்றால் இந்த ஆப்ஸ் மூலம் மொபைல் ஸ்கிரீன் லைவ்வாக கணினியில் தெரியும், கணினியில் இருந்து உங்கள் மொபைலை முழுமையாக இயக்கலாம். சாம்சங் மொபைல் தவிர மற்ற போன்களில் ஸ்கிரீன் படமாகதான் பார்க்கமுடிக்கிறது, மற்றபடி இந்த ஆப்ஸ் மூலம் உங்கள் ஃபோன் நிலையை அறிய, அப்ப்ளிகேசங்களை நீக்க/செட்டிங்ஸ் மாற்ற / லாக் சிஸ்டம் பற்றி அறிய என அனைத்து வகைகளிலும் நமக்கு உதவி புரிகிறது. இந்த ஆப்ஸ் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.

முதலில் உங்கள் கணினியில் டீம்வீவர் மென்பொருள் இருக்கவேண்டும். உங்கள் கணினியில் டீம்விவர் இல்லை என்றால் இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். கணினியில் டீம்விவர் நிறுவும்போது கீழே Personal/Non Commercial என்பதில் டிக் செய்து நிறுவுங்கள்.

இப்போது உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி: play.google.com

ஆப்ஸ் முழுவதும் இன்ஸ்டால் ஆனதும் அதனை இயக்கினால் உங்களுக்கு ஓம்பது டிஜிட் கொண்ட ஐடி எண் கிடைக்கும். அந்த ஐடி என்னை உங்கள் கணினியில் உள்ள டீம்விவரில் Partner ID இடத்தில் கொடுத்து Connect partner பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைல் கணினி பார்ட்னர் ஐடி காண்பித்து கனெக்ட் செய்யவா என கேட்கும் ஆம் என Yes கொடுத்தவுடன் உங்கள் கணினியில் மொபைல் ஸ்கிரீன் காண்பிக்கும், ஒரு சில ஃபோன்களில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்தால் கணினியில் தெரியும். இதில் ஷாட் (உரையாடுதல்) வசதியும் இருப்பதால் நண்பர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உங்கள் மொபைல் பற்றி/பிரச்சனைகள் பற்றி சாட்டில் சொல்லலாம்.

இனி நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடி மொபைலை இயக்கலாம். உங்கள் ஃபோன் நிலையை அறிய, அப்ப்ளிகேசங்களை நீக்க/செட்டிங்ஸ் மாற்ற / லாக் சிஸ்டம் பற்றி அறிய என அனைத்து வேலைகளையும் செய்யலாம். முடிவில் கணினியில் உள்ள டீம்விவர் மூடினால் மொபைல் ஆப்ஸ் நிறுத்தப்படும். நீங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே முகநூல் அல்லது ப்ளாகர் பின்னூட்டத்தில் எழுத மறக்காதீங்க. உங்கள் கணினி/மொபைல்/தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட கேள்விகளையும் எழுதலாம் விரைவில் தனி பதிவில் பதில் அளிப்பேன்.

கீழே ஒரு காணொளி இணைத்து இருக்கிறேன் அதையும் பாருங்கள் அசந்து விடுவீர்கள்.



இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு லைக் பண்ணுங்க, மறக்காமல் உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு மிக்க நன்றி!!!. 


Copy Right

குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெற்றது, நகல் எடுப்பவர்கள் tamiltechguru.blogspot.in தளத்துக்குஅவசியம் நன்றி
                                                தெரிவிக்க வேண்டும்.  


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட