Home » , , , , , » இணையத்தை கலக்கும் கோச்சடையான் ஆண்ட்ராய்ட் கேம்ஸ்

இணையத்தை கலக்கும் கோச்சடையான் ஆண்ட்ராய்ட் கேம்ஸ்


சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த, சுனில் லுலா தயாரிப்பில் சௌந்தர்யா ஆர். அஸ்வின் இயக்கிய படம்தான் கோச்சடையான். இந்த படத்திற்க்கு கதை எழுதியது இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார், இசையமைப்பு ஏ. ஆர். ரகுமான்.

உலகில் அதிகமான ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட கோச்சடையான் படம் வருகின்ற மே மாதம் 1 தேதி வெளிவர இருக்கிறது. இந்த படம் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். இந்த படம் வெளிவரும் முன்பே இதன் அடிப்படையில் ஆண்ட்ராய்ட் கேம்ஸ்களும், காமிக்ஸ்களும் வெளிவர தொடங்கி உள்ளது. இந்த கேம்ஸ் சர்வேதேச தரத்தில் வெளிவந்துள்ளது. தூம் 3 போன்று இருந்தாலும் இதில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது, இது அனிமேஷன் விளையாட்டு என்பதால் சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை அனைவரையும் ஈர்க்கிறது.


கோச்சடையான் ஆண்ட்ராய்ட் கேம்ஸ் இரண்டு வகைகளாக வந்துள்ளது.

1. கோச்சடையான் ரீஜின் ஆப் ஆரோஸ் (Reign of Arrows)

இது வில் அம்பு கொண்டு தாக்கும் விளையாட்டு, சூட்டிங் வகை என்றும் சொல்லலாம். மகாபாரத கதையில் அர்ஜுனன் காண்டீபம் என்ற ஒரு வகை வில் அம்பு அஸ்திரம் வைத்து இருப்பான், அதை நானில் பூட்டி எய்துவான் அது நான்காக பிரிந்து இடி முழக்கதுடன் சென்று தாக்கும். அது போலதான் இருக்கிறது இதன் அனிமேஷன் மற்றும் சவுண்ட் எஃபக்ட்.  இந்த விளையாட்டு முழுவதும் எதிரிகளை தாக்குவதே. கண்டிப்பா அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டு. எல்லாருக்கும் பிடிக்கும்.

ரீஜின் ஆப் ஆரோஸ் கூகிள் பிளே ஸ்டோரில் தரவிறக்க


2. கோச்சடையான் கிங்டம் ரன்(Kingdom Run)இதுவும் ரொம்பவும் ஆரவமுடன் விளையாடும் ஆண்ட்ராய்ட் கேம்ஸ்தான். இதில் கோச்சடையான் தனக்கெனே ஒரு கோட்டை அமைத்து இருப்பார். அந்த கோட்டையை எதிரிகள் குழு குழுவாக தாக்க வருவார்கள், அவர்களை தனி ஒரு ஆளாக நின்று அத்தனை பேரையும் கொன்று கோட்டையையை காப்பாற்றும் படி அமைந்துள்ளது. இதில் கோச்சடையான் கையில் அம்பு வில், கோடாரி, கத்தி ஈட்டி, வாள் என பல ஆயுதங்கள் இருக்கும் நாம் அவ்வப்போது தேர்ந்தெடுத்து விளையாட வேண்டியதுதான்.

கிங்டம் ரன் கூகிள் பிளே ஸ்டோரில் தரவிறக்க

இந்த இரண்டு ஆண்ட்ராய்ட்  விளையாட்டுகளையும் கோச்சடையான் தயாரிப்பாளர்களே வெளியீடு உள்ளார்கள். இந்த விளையாட்டுகள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஸ் (iOS) இயக்க முறைமையில் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. மிக விரைவில் விண்டோஸ் ஃபோன் வெளியிடப்படும், மேலும் பேஸ்புக் கேம்ஸ், டாடா ஸ்கை ஆக்டிவ் கேம்ஸ் மற்றும் M.HUNGAMA.COM போன்றவற்றில் இணைக்கப்படும்.

இந்த இரு விளையாட்டுகளும் இப்போது அதிகம் நபர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்கள். நீங்களும் தரவிறக்கி விளையாடி உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பகிருங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு லைக் பண்ணுங்க, மறக்காமல் உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள், அதனால் எனக்கு மென்மேலும் தொழில்நுட்ப செய்திகளை எழுத தூண்டும் விதமாக அமையும். படிக்க வந்தமைக்கு மிக்க நன்றி!!!. 


குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெற்றது, நகல் எடுப்பவர்கள் tamiltechguru.blogspot.in தளத்துக்கு அவசியம் நன்றி தெரிவிக்க வேண்டும்.  


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட