வாஷிங்டன்: சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மேலும் அண்மையில் 19 பில்லியன் கொடுத்து வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது, தன் சேவையை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார். ஆனால் பல இடங்களில் ‘இன்டர்நெட்’ வசதி கிடைப்பதில்லை. அதனால் பேஸ்புக் அனைத்து இடங்களிலும் தனது சிறகை விரிக்க முடியவில்லை.
எனவே, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் ‘இன்டர்நெட்’ (இணையதளம்) வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ‘பேஸ்புக்’ கின் மற்றொரு நிறுவனமான ‘Internet.org’ என்னும் அமைப்பு நாசா உள்ளிட்ட 6 மற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நடை முறைப்படுத்த உள்ளது. "Internet.org" நிறுவனத்தில் ‘கானக்டி விட்டி லேப்’ என்ற துறை உள்ளது. இது அந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு உத்திகளை கையாள்கிறது.
சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லா சிறிய ரக விமானங்களும் அதில் ஒன்றாகும். அதற்காக இங்கிலாந்து நாட்டின் ‘அலசன்டா’ நிறுவனத்துடன் ‘பேஸ்புக்’ ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தயாரிக்கும் ஆளில்லா விமானம் உலகின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி தரும். இம்முயற்சியில் பேஸ்புக்குடன் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு ‘புராஜெக்ட் லூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கீழே காணொளி பாருங்கள்
நன்றி: http://www.businessweek.com & eniyatamil.com