Home » , » பொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகள்

பொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகள்



கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?

அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே
கவனமாகத் தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக்கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட் வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பண ம் பறிபோகும் வாய்ப்பு ண்டு.

2. உங்கள் நிதிசார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அது போல பொதுக்கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசை க்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்க க் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4.பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன் டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெ ட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்து விடுங்கள். அல்லது
Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்னவேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீபூட் செய் திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்து விடும்.


நன்றி: இன்றைய தகவல். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட