Home » , , , , » ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்டோரை துருக்கியில் திறக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்டோரை துருக்கியில் திறக்கிறது.



உலகின் மிக பெரிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ள ஆப்பிள் நிறுவனமானது தனது சந்தைப்படுத்தலை உலகங்கிலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல நாடுகளிலும் தனது ஸ்டோர்களை திறந்து வைப்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி வருகின்றது.
இதன் அடிப்படையில் துருக்கியின் ஸ்தான்புல் நகரில் தனது முதலாவது ஸ்டோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி பெஸ்கிடாஸ் ஸ்தான்புல் ஜோருலு சென்டரில் திறக்கவுள்ளது.  
05 ஏப்ரல் முதல் 7 ஏப்ரல் வரை மூன்று நாட்கள் பலவிதமான நிகழ்ச்சிகள் நடக்கிறது. 
ஏப்ரல் 10ம் தேதி காலை பத்து மணி முதல் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் ஒவ்வொரு நாளும் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை இயங்கும். 

மேலும் இந்த ஸ்டோர் ஆனது 20,000 சதுர அடிகள் பரப்பளவில் இரு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு: http://www.apple.com/tr/retail/zorlucenter/
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட