சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் தொடர்ச்சியின் ஐந்தாவது தலைமுறையான கேலக்ஸி எஸ்5 அறிவித்துள்ளது. இதில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு, அப்டேட் கேமரா, வேகமான நெட்வொர்க் இணைப்பு, டெடிகேடட் பிட்நெஸ் டூல்ஸ் (dedicated fitness tools ) மற்றும் சாதனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கிறது. இந்த புதிய கேலக்ஸி S5 ஸ்மார்ட்போன் ஒரு லைப் ஸ்டைல் ப்ராடெட் ஆகும்.
இதில் இதயத்துடிப்பு விகிதம் ( heart-rate) சென்சார் உள்ளமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S4 வெற்றியை தொடர்ந்து கேலக்ஸி S5 அமைந்துள்ளது. இது சார்கோல் பிளாக், ஷிம்மெரி வைட், எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் காப்பர் கோல்ட் ஆகிய நான்கு வண்ணங்களில் வருகிறது. கேலக்ஸி S5, ஏப்ரல் 11ம் தேதி அன்று, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்-ல் இந்தியா உட்பட 150 நாடுகளில் வெளியிடப்படும். இருப்பினும், நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விலை பற்றிய விரிவான தகவல் எதுவும் அறிவிக்கவில்லை.
கேலக்ஸி S5, ஒரு 5.1 இன்ச் FHD சூப்பர் AMOLED (1920 x 1080) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஒரு 2.5GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் கொண்டுள்ளது. இது ஒரு 2800mAh பேட்டரி பேக் உடன் வருகிறது. இதில் ரேம் 2GB உள்ளது.
மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வரும். ஃப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2.1 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது 145 கிராம் எடையுடையது. இணைப்பு விருப்பங்கள் Wi-Fi, 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ், NFC, மைக்ரோ-USB, ஜிஎஸ்எம் மற்றும் ப்ளூடூத் 4.0 ஆகியவை அடங்கும்.
காம்பஸ்/மேக்னடோமீட்டர் சென்சார், ப்ராக்சிமிட்டி சென்சார், அச்செலேரோமேட்டர் சென்சார், ஆம்பிஎண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் சென்சார், பாரோமீட்டர் சென்சார் மற்றும் டெம்பரேசர் சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். பின்புற கேமராவில் விநாடிக்கு 30 பிரேம்கள் எடுக்க்கூடிய 4K வீடியோ கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S5 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
5.1 இன்ச் FHD சூப்பர் AMOLED (1920 x 1080) டிஸ்ப்ளே,
2.5GHz குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 பிராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
ராம்: 2GB,
ஃப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா,
2.1 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
Wi-Fi, 802.11 a/b/g/n/ac,
மைக்ரோ-USB,
ஜிஎஸ்எம்,
இதன் முழுமையான சிறப்பு அமசங்கள்:
DESIGN
BATTERY
INTERNET BROWSING
TECHNOLOGY
மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்.